மதுரை மன்னன் : தென்னிந்தியாவின் முதல் சாதி எதிர்ப்புப்போராளி,
சமூகசேவகர், தமிழறிஞர், பத்திரிக்கையாளர் மற்றும் சித்தமருத்துவர், பண்டிதர் “அயோத்திதாசர்”
பிறந்த தினம் இன்று. ( 20 மே 1845 )
இவர்களின் குடும்பம் சென்னை ஆயிரம் விளக்குப் பகுதியில் வசித்தனர், இவரது தந்தையின் பணிமாறுதல் காரணமாக ஊட்டிக்கு இடம்பெயர்ந்தனர்.
1907 ல் "ஒரு பைசாத் தமிழன்" என்ற பெயரில் வார செய்தித்தாள் ஒன்றைத்துவக்கினார், வாசகர்களின் வேண்டுகோளுக்கிணங்க ஒரு பைசா என்பதை நீக்கிவிட்டு “தமிழன்” என்ற பெயரில் பத்திரிக்கையை நடத்தினார்.
"உயர் நிலையும், இடை நிலையும், கடை நிலையும் பாகுபடுத்தி அறியமுடியாத மக்களுக்கு நீதி, சரியான பாதை, நேர்மை ஆகியவற்றைக் கற்பிப்பதற்காக சில தத்துவவாதிகளும் இயற்கை விஞ்ஞானிகளும், கணிதவியலாளரும், இலக்கியவாதிகள் பலரும் ஒன்று கூடி இப்பத்திரிக்கையை "ஒரு பைசாத் தமிழன்" வெளியிட்டுயிருக்கிறோம். தமிழ் மணம் பரவ விரும்பும் தமிழர் ஒவ்வொருவருக்கும் கையொப்பம் வைத்திதனை ஆதரிக்க கோருகிறோம்" என்று அறிவித்தார்.
இவரது பெயரால் சென்னை தாம்பரம் சானடோரியம் National Institute of Siddha ல் அயோத்திதாசர் தேசிய சித்த மருத்துவமனை (Ayothidoss Pandithar Hospital) அமைந்துள்ளது.
இவருடைய தாத்தா பட்லர் கந்தப்பன் அழிந்து நூற்றாண்டுகளாக வழக்கில் இல்லாமல் போயிருந்த திருக்குறளை தன் குடும்பசேமிப்பு ஏடுகளில் இருந்து மீட்டு சென்னையின் கலெக்டரும், தன்னை தமிழ்ப்பெயரால் "எல்லீசன்" என்று அழைக்கச்செய்தவருமான இங்கிலாந்தைச் சேர்ந்த தமிழறிஞர், Francis Whyte Ellis ம் வழங்கி இவர் முதன்முதலாக திருக்குறளை அச்சேற்றினார்.
திராவிட மகாஜனசபை இவரால் 1891 தொடங்கப்பட்டது. 1885 ம் ஆண்டில் திராவிட பாண்டியன் என்னும் இதழைத் தொடங்கினார்.1886 ம் ஆண்டில் இந்துக்களில் தீண்டத்தகாதவர்கள் என அழைக்கப்பட்டவர்கள் இந்துக்கள் அல்லாதவர்கள் என்றார். அவர்கள் யாவரும் சாதியற்ற திராவிடர்கள் என்னும் கருத்தையும் முன்வைத்தார். இதனால் இவர் திராவிட கருத்தியலின் முன்னோடி என அறியப்பட்டார். திராவிட மகாஜன சபையை நிறுவி திராவிட அரசியலைத் தொடங்கி வைத்ததால், இவர் திராவிட அரசியலின் முன்னோடி எனவும் கூறப்படுகிறார்.
இவர் நீலகிரியில் ஒடுக்கப்பட்ட மக்களான தோடர்களை அணிதிரட்டி 1870 களில் 'அத்வைதானந்த சபை' ஒன்றை நிறுவி கிறிஸ்துவ மதமாற்றத்திற்கு எதிராகச் செயல்பட்டார். இவரது குடும்பம் வைணவசமய மரபுகளைப் பின்பற்றியது. அதனடிப்படையில் தன்குழந்தைகளுக்கு மாதவராம், பட்டாபிராமன், ஜானகிராமன், இராசராம் எனப்பெயர் சூட்டினார்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக