புதன், 3 ஜூன், 2020

புலிகளின் பெரு வெற்றிகள் அனைத்தும் கருணாவின் தலைமையில்தான்...? கிழக்கின் குரல் ...


Reginold Rgi : நீங்கள் வடக்கில் இருக்கும் துரோகிகளை போற்றி புகழும் போது நாங்கள் ஏன் எங்கள் மண்ணின் மைந்தன் கருணாவை போற்றி புகழக் கூடாது என்பது மட்டும் என்ன நியாயம் ?
கருணா இல்லாமல் எந்த சண்டையில் நீங்கள் வெற்றி பெற்றிருக்கிறிர்கள்? தீச்சுவாலையை  வென்றவர் கருணா அம்மான் !
குடாரப்பில் தரையிறங்கிய பால்ராஜ் தலைமையிலான புலிபடை ஸ்ரீலங்கா இராணுவத்தின் தாக்குதலை சமாளிக்க முடியாமல் திக்குமுக்கு ஆடியது ஞாபகம் இருக்கிறதா?
ஆனையிறவையும் வென்று பால்ராஜ் மற்றும் தரையிறங்கிய போராளிகளையும் காப்பாற்றியது  கருணா அம்மான்!
 வன்னி நிலத்தை விழுங்க வந்த ஜெயசிக்குறு படைகளின் தாக்குதலை சமாளிக்க முடியாமல் வாழ்வா சாவா என்று போராடிக்கொண்டிருந்தது இயக்கம்!ஸ்ரீலங்கா இராணுவத்தின் முதுகெலுப்பை உடைத்து புலிகளின் வெற்றிக்கு ஏறுமுகம் காண வைத்தவர்  கருணா அம்மான் !
மணலாற்று காட்டுக்குள் இந்திய இராணுவம் தலைமையை நெருங்கிய போது தப்பினோம் பிழைத்தோம் என்று வன்னி தளபதிகள் ஓட இரும்பு வேலி அமைத்து உங்கள் தலைமையை காப்பாற்றியவர் கருணா அம்மான்!
புலிகளின் வரலாற்றை எழுதுவதென்றால் கருணா என்ற ஒரு கதாநாயகன் இல்லாமல் எப்படி எழுத முடியும்?

கருணா அம்மானை துரோகி என்று கூறும்  நீங்கள் ஏன் இறுதிவரை சிங்கள ராணுவத்தை எதிர்த்துப் போராடவில்லை?
நவீன ஆயுதங்கள் ஆள்பலம் ஆயுதபலம் எல்லாம் உங்களிடம் இருந்தது தானே?

எல்லாம் இருந்தும் ஏன் ஒரு அடி கூட சிங்கள ராணுவத்தை பின்வாங்க வைக்க முடியவில்லை?
நீங்கள்  சொல்கிறீர்கள் கருணா காட்டிக் கொடுத்தான் என்று,
இந்த இருபத்தோராம் நூற்றாண்டில் இருந்து கொண்டு அவன் காட்டிக் கொடுத்தான் இவன் காட்டிக் கொடுத்தான் என்று சொல்ல உங்களுக்கு வெட்கமாயில்லை?
சிங்களவன் படையெடுத்து வரும்போதேல்லாம் உங்களை காப்பாற்றியவர்  கருணா அம்மான்!
அன்று நாங்கள் உங்களிடம் என்ன கேட்டோம்?
 எங்கள் உரிமைகளை தானே உங்களிடம் கேட்டோம்?
அதற்கு நீங்கள் என்ன செய்தீர்கள்?
 பாரிய படை நகர்வுகளை மேற்கொண்டு எங்கள் மண்ணின் புதல்வர்களை அல்லவா கொன்றொழித்தீர்கள்?
 வீரம் என்பது மனதில் அல்ல மண்ணிலும் விதைக்கப்பட்டது என்பது போல கிழக்கு போராளிகள் இல்லாமல் உங்களால் எந்த ஒரு இராணுவ வெற்றியை நோக்கி நகர முடியாது என்பதே எதார்த்தம்!
நேற்றைய தோல்விகளிலிருந்து இன்றைய முன்னேற்றத்திற்கான பாடங்களை நாம் கற்றுக் கொள்ள வேண்டும்!
 வெற்றி என்பது மாவீரர்களுக்கானது! 
 புயலையும் சீற்றத்தையும் எதிர்ப்பவன் வீரன் அல்ல..!! 
 அவற்றுரிலிருந்து மற்றவர்களை பாதுகாப்பவன் எவனோ அவன்தான் வீரன்.!! நன்றி By . Reginold

மீனகம் மீனகம் : பிரபாகரனை இந்தியாஆமியிடம் இருந்து காப்பாற்றிய காவல் தெய்வம் புலி படையில் இருந்து ஈபிடிபி ரெலோ சைக்கில் என எல்லாம் பிரிந்து சென்ற போதும் பிழவு படாத புலிகள் உண்மையாக இருந்த இந்த காவல் தெய்வத்தையும் இவன் படையையும் சீண்ட அந்த புலிப்படையையே காணாமல் போனது ஆக இத்தனை காலமும் புலிகளை பாதுகாத்த காவல் தெய்வம் கேணல் கருணா அம்மான்

கருத்துகள் இல்லை: