நக்கீரன் - கலைமோகன் : தமிழகத்தில் இன்று 1,162
பேருக்கு கரோனா பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இரண்டாவது
நாளாக தமிழகத்தில், ஒரே நாளில் கரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்ட எண்ணிக்கை
ஆயிரத்தை கடந்துள்ளது. இதனால் தமிழகத்தில் மொத்தம் கரோனாவால்
பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 23,495 ஆக அதிகரித்துள்ளது.
இதில் 1,112 பேர் தமிழகத்திலும், மற்றவர்கள் பிற மாநிலங்களில், பிற நாடுகளில் இருந்து வந்தவர்கள் என்றும் தெரியவந்துள்ளது. இதுவரை தமிழகத்தில் 14,750 ஆண்கள், 8,732 பெண்கள், 13 திருநங்கைகளுக்கு கரோனா உறுதிசெய்யப்பட்டுள்ளது. தற்பொழுது 10,138 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். சென்னையில் ஒரேநாளில் 972 பேருக்கு கரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் சென்னையில் இதுவரை பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 15,770 ஆக அதிகரித்துள்ளது.
இதுவரை மொத்தமாக தமிழகத்தில் 184 பேர் இதனால் உயிரிழந்துள்ளனர். இன்றும் மட்டும் 11 பேர் கரோனாவிற்கு தமிழகத்தில் உயிரிழந்துள்ளனர். அதிகபட்சமாக சென்னையில் 138 பேர் கரோனாவினால் உயிரிழந்துள்ளனர். இன்று மட்டும் கரோனாலிருந்து 413 பேர் குணமடைந்து டிஸ்சார்ஜ் ஆகி உள்ளனர். இதுவரை மொத்தமாக 13,170 பேர் கரோனாவிற்கு சிகிச்சை பெற்று குணம் அடைந்துள்ளனர் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக