/tamil.samayam.com/ : வடிவேலு தன் மீது நடிகர் சங்கத்தின் சிறப்பு அதிகாரியிடம் புகார் அளித்ததால் மனோபாலா அதிருப்தி தெரிவித்துள்ளார்.
நடிகர் மனோபாலா நடத்தி வரும் வேஸ்ட்பேப்பர் யூடியூப் சேனலுக்கு நடிகர் சிங்கமுத்து பேட்டி அளித்தார். அந்த பேட்டியின்போது சிங்கமுத்து வைகைப்புயல் வடிவேலு
மற்றும் அவரின் குடும்பத்தார் பற்றி பேசினார். வடிவேலுவும்,
சிங்கமுத்துவும் ஒரு காலத்தில் நண்பர்களாக இருந்து தற்போது
எதிரிகளாகிவிட்டனர். அவர்களுக்கு இடையே நில பிரச்சனை உள்ளது.
அந்த நில மோசடி வழக்கு நீதிமன்றத்தில் நிலுவையில் இருக்கிறது. இந்நிலையில் சிங்கமுத்து வடிவேலு பற்றி பேட்டியில் பேசியது பிரச்சனையாகிவிட்டது. அந்த பேட்டியை பார்த்த வடிவேலு தென்னிந்திய நடிகர் சங்கத்தின் சிறப்பு அதிகாரியிடம் சிங்கமுத்து மற்றும் மனோபாலா மீது புகார் அளித்தார்.
வடிவேலு புகார் அளித்த பிறகு மனோபாலா மன்னிப்பு கேட்டார். 30 வருட நட்பு கெட்டுவிடக் கூடாது என்று மன்னிப்பு கேட்பதாக மனோபாலா கூறினார். மனோபாலாவும், வடிவேலுவும் நல்ல நண்பர்கள் ஆவார்கள். வடிவேலு மீண்டும் நடிக்க வர வேண்டும், அதை பார்க்க நான் காத்திருக்கிறேன் என்று மனோபாலா அடிக்கடி கூறி வருபவர்.
இந்நிலையில் வடிவேலு புகார் அளித்த பிரச்சனை தொடர்பாக மனோபாலா பேட்டி அளித்துள்ளார். அந்த பேட்டியில் அவர் கூறியதாவது,
சிங்கமுத்து வடிவேலு பற்றி 10, 15 சேனல்களில் பேசியிருக்கிறார். அப்பொழுது எல்லாம் வராத கோபம் வடிவேலுவுக்கு இப்போ ஏன் வர வேண்டும். கூட இருப்பவர்கள் தான் வடிவேலுவை தூண்டிவிட்டு இப்படி பிரச்சனையாக்கியிருக்கிறார்கள்.
பேட்டியை பார்த்த வடிவேலு எனக்கு போன் செய்து ஏன் மனோபாலா இப்படி ஒரு பேட்டி, அதை உடனே நீக்கிவிடு என்று ஒரு வார்த்தை சொல்லியிருந்தால் உடனே நீக்கியிருப்பேன். அது தான் நட்பு. சிங்கமுத்து வடிவேலு மற்றும் அவரின் குடும்பம் பற்றி நிறைய பேசினார். அதை எல்லாம் எடிட் செய்தேன்.
இந்த பேட்டியை எல்லாம் பார்க்க வடிவேலுவுக்கு நேரம் இருக்காது என்று நினைத்தேன். வீடியோ ரிலீஸாகி 3 வாரங்கள் கழித்து புகார் கொடுத்திருக்கிறார். பிரச்சனை வரும் என்று நினைத்தேன். ஆனால் லேட்டாக வந்திருக்கிறது என்றார்.
சர்ச்சையான விஷயங்களை பேச வைத்து பேட்டி எடுத்து அதை வைத்து லாபம் பார்க்கும் எண்ணம் தனக்கு ஒருபோதும் இல்லை என்று மனோபாலா மேலும் தெரிவித்துள்ளார்.
ஷங்கர்
தயாரிப்பில் சிம்பு தேவன் இயக்கத்தில் வடிவேலு 24ம் புலிகேசி படத்தில்
நடித்தார். ரூ. 6 கோடி செலவில் செட் போட்டு படப்பிடிப்பை துவங்கிய 10
நாட்களில் வடிவேலுவுக்கும், சிம்பு தேவனுக்கும் இடையே பிரச்சனை ஏற்பட்டது.
இதையடுத்து வடிவேலு படத்தில் இருந்து விலகினார். வடிவேலு மீண்டும் அந்த
படத்தில் நடிக்க வேண்டும் இல்லை என்றால் ரூ. 9 கோடி நஷ்டஈடு கொடுக்க
வேண்டும் என்று ஷங்கர் தயாரிப்பாளர் சங்கத்தில் புகார் அளித்தார்.
இதையடுத்து ரூ. 9 கோடி கொடுப்பதற்கு பதில் படத்தில் நடித்துவிடலாம் என்று வடிவேலு முடிவு செய்ததாக கூறப்பட்டது. ஆனால் 24ம் புலிகேசி படப்பிடிப்பு இதுவரை துவங்கவில்லை. கடந்த 3 ஆண்டுகளாக வடிவேலுவை பெரிய திரையில் பார்க்க முடியவில்லை. அவரை தினமும் மீம்ஸுகளில் மட்டுமே பார்க்க முடிகிறது.
இந்நிலையில் தா
அந்த நில மோசடி வழக்கு நீதிமன்றத்தில் நிலுவையில் இருக்கிறது. இந்நிலையில் சிங்கமுத்து வடிவேலு பற்றி பேட்டியில் பேசியது பிரச்சனையாகிவிட்டது. அந்த பேட்டியை பார்த்த வடிவேலு தென்னிந்திய நடிகர் சங்கத்தின் சிறப்பு அதிகாரியிடம் சிங்கமுத்து மற்றும் மனோபாலா மீது புகார் அளித்தார்.
வடிவேலு புகார் அளித்த பிறகு மனோபாலா மன்னிப்பு கேட்டார். 30 வருட நட்பு கெட்டுவிடக் கூடாது என்று மன்னிப்பு கேட்பதாக மனோபாலா கூறினார். மனோபாலாவும், வடிவேலுவும் நல்ல நண்பர்கள் ஆவார்கள். வடிவேலு மீண்டும் நடிக்க வர வேண்டும், அதை பார்க்க நான் காத்திருக்கிறேன் என்று மனோபாலா அடிக்கடி கூறி வருபவர்.
இந்நிலையில் வடிவேலு புகார் அளித்த பிரச்சனை தொடர்பாக மனோபாலா பேட்டி அளித்துள்ளார். அந்த பேட்டியில் அவர் கூறியதாவது,
சிங்கமுத்து வடிவேலு பற்றி 10, 15 சேனல்களில் பேசியிருக்கிறார். அப்பொழுது எல்லாம் வராத கோபம் வடிவேலுவுக்கு இப்போ ஏன் வர வேண்டும். கூட இருப்பவர்கள் தான் வடிவேலுவை தூண்டிவிட்டு இப்படி பிரச்சனையாக்கியிருக்கிறார்கள்.
பேட்டியை பார்த்த வடிவேலு எனக்கு போன் செய்து ஏன் மனோபாலா இப்படி ஒரு பேட்டி, அதை உடனே நீக்கிவிடு என்று ஒரு வார்த்தை சொல்லியிருந்தால் உடனே நீக்கியிருப்பேன். அது தான் நட்பு. சிங்கமுத்து வடிவேலு மற்றும் அவரின் குடும்பம் பற்றி நிறைய பேசினார். அதை எல்லாம் எடிட் செய்தேன்.
இந்த பேட்டியை எல்லாம் பார்க்க வடிவேலுவுக்கு நேரம் இருக்காது என்று நினைத்தேன். வீடியோ ரிலீஸாகி 3 வாரங்கள் கழித்து புகார் கொடுத்திருக்கிறார். பிரச்சனை வரும் என்று நினைத்தேன். ஆனால் லேட்டாக வந்திருக்கிறது என்றார்.
சர்ச்சையான விஷயங்களை பேச வைத்து பேட்டி எடுத்து அதை வைத்து லாபம் பார்க்கும் எண்ணம் தனக்கு ஒருபோதும் இல்லை என்று மனோபாலா மேலும் தெரிவித்துள்ளார்.
இதையடுத்து ரூ. 9 கோடி கொடுப்பதற்கு பதில் படத்தில் நடித்துவிடலாம் என்று வடிவேலு முடிவு செய்ததாக கூறப்பட்டது. ஆனால் 24ம் புலிகேசி படப்பிடிப்பு இதுவரை துவங்கவில்லை. கடந்த 3 ஆண்டுகளாக வடிவேலுவை பெரிய திரையில் பார்க்க முடியவில்லை. அவரை தினமும் மீம்ஸுகளில் மட்டுமே பார்க்க முடிகிறது.
இந்நிலையில் தா
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக