தினத்தந்தி : பாலக்காடு
கேரள மாநிலம் பாலக்காடு மாவட்டத்தில் உள்ள மலப்புரம் சைலண்ட் பள்ளத்தாக்கின் அருகே 15 வயதான 1கர்ப்பிணி யானை ஒன்று காட்டை விட்டு வெளியேறி, அருகிலுள்ள கிராமத்துக்கு உணவு தேடிச் சென்றது. இதனைப் பார்த்து பயந்த மக்கள், தங்களுக்கும் தங்கள் ஊருக்கும் பாதிப்பு ஏற்பட்டு விடும் என எண்ணி, யானையை விரட்ட அன்னாசிப்பழத்துக்குள் வெடிமருந்தை நிரப்பி யானைக்கு உணவாக அளித்துள்ளனர்.
Shalin Maria Lawrence : நேற்று யானைக்கு வெடி மருந்தை ஊட்டிய"வன்" போன வாரம் பூனையை தூக்கிலிட்டு கொன்ற"வன்" நாய்க்கு பன்னில் ஊசிகளை மறைத்துக் கொடுத்த"வன்" அன்று நாய்க்குட்டியை மாடியில் இருந்து கீழே போட்டுக் கொன்ற"வன்" இது எல்லாமும் ஆண்களே தான் இதுபோன்ற எந்த விபரீத இடங்களிலும் பெண்கள் இல்லை. ஆணாதிக்க மனப்பான்மையை கேள்விக்கு உள்ளாக்காத வரையில் அது கொஞ்சம் கொஞ்சமாக விஷம் ஏறி சுற்றியுள்ள பெண்களுக்கு மட்டுமல்ல,ஆண்களுக்கும், விலங்குகளுக்கும், செடிக் கொடிக்கும் இந்த பூமிக்கே பிரச்சினையாகும் என்பதே நிதர்சனம். Toxic Masculinity has to be called out and fought strongly as it is the cancer of the society.
பழத்துக்குள் வெடிமருந்து இருப்பதை அறியாது பசியில் இருந்த யானை,
அதனைவாங்கிச் சாப்பிட்டது. சிறிது நேரத்தில் வயிற்றுக்குள் பழம் வெடித்து
தாங்க முடியாத வலியை அனுபவித்துள்ளது கர்ப்பிணி யானை. இறுதியில் அங்குள்ள
நதி நீரில் நின்றபடியே தனது குட்டியுடன் உயிரை விட்டது.
இந்த கொடூர சம்பவம் குறித்து நிலாம்பூர் வன அதிகாரி மோகன் கிருஷ்ணன் தனது பேஸ்புக் பக்கத்தில் பதிவிட்டுள்ளதாவது:-<
அந்த
கர்ப்பிணி யானை அங்குள்ள அனைவரையும் நம்பியது அது சாப்பிட்ட அன்னாசிப்பழம்
வெடித்தபோது கண்டிப்பாக அதிர்ச்சியடைந்திருக்கும். ஏனென்றால் அது இன்னும்
18 முதல் 20 மாதங்களில் ஒரு குட்டியை) பெற்றெடுக்கப் போகிறது
அது
வாயில் வெடித்த வெடிமருந்து மிகவும் சக்தி வாய்ந்தது. அதனது வாயும்,
நாக்கும் மிகவும் மோசமாக காயமுற்றிருந்தன. வலியுடன் துசுற்றி
வந்திருக்கிறாள். ஆனால், வாயில் ஏற்பட்ட காயத்தால் எதுவும் சாப்பிடவும்
முடியவில்லை.
தாங்க முடியாத கொடூர வலியிலும், அது
கிராமத்தில் யாரையும் சிறிதளவு கூட துன்புறுத்தவில்லை. எந்த இடத்திலும்
கொஞ்சம் கூட சேதம் விளைவிக்கவில்லை. ஆம், அதனால்தான் சொல்கிறேன். அந்த யானை
மிகவும் நல்லத. யானை ஆற்றில் இறங்கியது
ஆற்றில்
யானையை காப்பாற்ற சுரேந்திரன் மற்றும் நீலகாந்தன் எனும் இரண்டு யானைகளை
அழைத்து வந்தோம். ஆனால் கர்ப்பிணி யானைக்கு ஆறாவது உணர்வு இருப்பதாகவே நான்
நினைக்கிறேன். உயிரை விடப்போகிறோம் என்று தெரிந்ததோ என்னவோ, அது எங்களை
எதுவும் செய்ய விடவில்லை. அதனை பார்த்து எங்களுக்கு பேரதிர்ச்சியாக
இருந்தது. உடன் வந்த யானைகளும் அதை பார்த்து கண்ணீர் விட்டன.
பல
மணிநேர முயற்சிகளுக்குப் பிறகு, மே 27 மாலை 4 மணியளவில் உயிரிழந்த
நிலையில் அதை மீட்டோம். ஒரு லாரியின் மூலமாக அதனை காட்டுக்குள் கொண்டு
சென்று அது விளையாடிய நிலத்தில் படுக்க வைத்து, அவள் மீது விறகு வைத்து
எரிந்த்து தகனம் செய்தோம். அதன் முகத்தில் உள்ள வலியை எங்களால் உணர
முடிந்தது. அவளுக்கு மிகுந்த மரியாதையுடன் அனைவரும் பிரியாவிடை
அளித்திருக்க வேண்டும்.
ஒரு மனிதனாக நான் அதனிடம் மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன்என்று மிகவும் உருக்கமாக தனது வன அதிகாரி மோகன் கிருஷ்ணன் கூறி உள்ளார்.
Shalin Maria Lawrence : நேற்று யானைக்கு வெடி மருந்தை ஊட்டிய"வன்" போன வாரம் பூனையை தூக்கிலிட்டு கொன்ற"வன்" நாய்க்கு பன்னில் ஊசிகளை மறைத்துக் கொடுத்த"வன்" அன்று நாய்க்குட்டியை மாடியில் இருந்து கீழே போட்டுக் கொன்ற"வன்" இது எல்லாமும் ஆண்களே தான் இதுபோன்ற எந்த விபரீத இடங்களிலும் பெண்கள் இல்லை. ஆணாதிக்க மனப்பான்மையை கேள்விக்கு உள்ளாக்காத வரையில் அது கொஞ்சம் கொஞ்சமாக விஷம் ஏறி சுற்றியுள்ள பெண்களுக்கு மட்டுமல்ல,ஆண்களுக்கும், விலங்குகளுக்கும், செடிக் கொடிக்கும் இந்த பூமிக்கே பிரச்சினையாகும் என்பதே நிதர்சனம். Toxic Masculinity has to be called out and fought strongly as it is the cancer of the society.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக