மின்னம்பலம் :
'பொன்மகள்
வந்தாள்', 'பெண்குயின்' திரைப்படங்களைத் தொடர்ந்து அட்லீயின் தயாரிப்பில்
உருவாகியிருக்கும் 'அந்தகாரம்' திரைப்படமும் நேரடியாக டிஜிட்டல் தளத்தில்
வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
இயக்குநர் அட்லீயின் தயாரிப்பில் சுசி சித்தார்த் இயக்கியுள்ள திரைப்படம் 'அந்தகாரம்'. அர்ஜுன் தாஸ், வினோத் கிஷண், பூஜா ராமச்சந்திரன், மீஷா கோஷல் ஆகியோர் நடித்துள்ள இந்தத் திரைப்படம் நேரடியாக நெட்ஃப்ளிக்ஸில் ரிலீஸாகும் என்ற அறிவிப்பு வெளியாகியுள்ளது.
இந்தப் படத்தின் டிரெய்லர் சமீபத்தில் வெளியான நிலையில் ரசிகர்கள் மத்தியில் மிகுந்த வரவேற்பைப் பெற்றது. இந்தப் படத்தை அட்லீயுடன் இணைந்து ஃபேஷன் ஸ்டூடியோஸ் நிறுவனமும் தயாரித்துள்ளது.
கொரோனா அச்சம் காரணமான லாக் டவுன், தமிழ் சினிமாவில் ஏராளமான சிக்கல்களை ஏற்படுத்தியுள்ளது.
படப்பிடிப்பு நடத்த இயலாமல் படக்குழுவினரும், படங்களைத் திரையிட இயலாமல் திரையரங்க உரிமையாளர்களும் பெரும் கவலையில் இருக்கின்றனர். தற்போது அறிவிக்கப்பட்டுள்ள தளர்வுகளின் அடிப்படையில் ஒருவேளை திரையரங்குகள் திறக்கப்பட்டாலும் மக்கள் பயமின்றி அங்கே வருவார்களா என்பது கேள்விக்குறியாகவே உள்ளது.
எனவேதான் அதற்கெல்லாம் காத்திருக்காமல் சில தயாரிப்பாளர்கள் தங்கள் படங்களை நேரடியாக அமேசான் பிரைம், நெட்ஃப்ளிக்ஸ் போன்ற OTT தளங்களில் வெளியிடத் தொடங்கியுள்ளனர். அந்த வகையில் சூர்யாவின் 2டி என்டர்டெயின்மென்ட் நிறுவனத்தின் தயாரிப்பில் ஜோதிகா நடித்திருந்த 'பொன்மகள் வந்தாள்' திரைப்படம் கடந்த 29ஆம் தேதி அமேசான் பிரைம் தளத்தில் நேரடியாக ரிலீஸானது. அதே போன்று கார்த்திக் சுப்புராஜ் தயாரிப்பில் கீர்த்தி சுரேஷ் முதன்மை வேடத்தில் நடித்திருக்கும் 'பெண்குயின்' திரைப்படமும் ஜூன் 19ஆம் தேதி அமேசான் பிரைமில் வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டது.
இது திரையுலகில் பல்வேறு விவாதங்களுக்கும், சண்டைகளுக்கும் காரணமாக அமைந்தது. இந்த நிலையில் தான் 'அந்தகாரம்' திரைப்படமும் நேரடியாக டிஜிட்டலில் வெளியாகும் என்ற அறிவிப்பு வந்திருக்கிறது.
-இரா.பி.சுமி கிருஷ்ணா

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக