Raja M Raja :
சமைக்கவே தெரியாத ஒரு இனமென்றால் அது இலங்கை தமிழினம்தான்..
காய்ந்த பிரட்டும் பருப்பு துவையலையும் பிரியாணி மாதிரி திம்பானுக.. சாம்பாரு வக்க தெரியாது ஒரு கொழம்பு காய்ச்ச தெரியாது துவையல அரைச்சு சம்பலு மரக்கறின்னு சோத்தோட குழைச்சு அடிப்பார்கள்...
அட நிசமாவே வெரைட்டியும் இருக்காது வாய்க்கும் ருசியா இருக்காது.. சிங்கள சாப்பாட்ட காப்பியடிச்சு பெட்டிஸ் ரோல்சுன்னு நம்ம ஊரு சம்சா மாதிரி உருட்டி உள்ள கறிவைக்கிற ஐட்டத்தையெல்லாம் மெயின் டிஷ்சும்பாங்க..
கத்தரிக்கா கொத்சு வைக்கிறத கௌரவமா நினைப்பார்கள் இந்திய சாப்பாடுன்னா உயிர விடுவானுக.. பாண் பருப்பு நெத்திலி கருவாடு மாசி சம்பல் இதை தவிர வேற எதுவும் பெருசா சமைக்க தெரியாது.. ப்ளைன் டீன்னு வரடீய போட்டு குடம் குடமா குடிப்பார்கள்.
ராதா மனோகர் : சுமார் நூறு வருடங்களுக்கு முன்பு வரை இலங்கை தமிழர்களுக்கு தமிழகத்தோடு மிக நெருங்கிய குடும்ப சமுக உறவுகள் இருந்தது . தமிழகத்தில் இருக்கும் பலவேறு மாவட்ட மக்களிடையே இருக்கும் உறவு போன்றது அது.
உணவு பழக்கங்களும் பெரும்பாலும் ஒன்றாகவே இருந்தது
இலங்கை தமிழர்களிடையே பாரம்பரிய மதிய உணவாக இருந்தது அரிசி சோறு காய்கறி மீன் இறைச்சி கறி வைகைகள் போன்றவையாகும்.
காலை மாலை உணவுகளாக இருந்தவை தோசை, இடியப்பம் , புட்டு . அப்பம் இட்டலி போன்றவையாகும்.
எழுபதுகளின் ஆரம்பத்தில் கொத்து ரோட்டி என்பது வருகை புரிந்தது. முதலில் அது இஸ்லாமிய உணவு நிலையங்களில் இருந்து பின்பு எல்லா மக்களிடையேயும் பரவி விட்டது .
அதற்கு முக்கிய காரணம் அப்போது இருந்த ஸ்ரீமாவோ அரசாங்கத்தில் நிலைவிய கடும் உணவு தானிய தட்டுப்பாடுதான்.
வெறும் பேக்கரி பிரெட்டுக்காகவே மக்கள் தெருத்தெருவாக அலைந்த அவலம் எல்லாம் நடந்தது. அந்த பஞ்சம் சொல்லி மாளாது. சமுகத்தின் எல்லா மட்டங்களையும் ஒரு மரவெள்ளி கிழங்கிற்காக அலையவிட்ட காலமது.
எனக்கு தெரிந்து பட்டினி சாவு என்றால் என்னவென்று மக்கள் கண்டு கொண்டது இந்த அம்மையாரின் ஆட்சியில்தான்.
அன்று தொடங்கிய உணவு தானிய பஞ்சம் இன்னும் கூட முழுமையாக நிவர்த்தி ஆகவில்லை என்று கூறினால் உங்களுக்கு அதிசயமாக இருக்கும். ஆனால் அதுதான் உண்மை!
மக்களின் காலை மாலை உணவில் பெரும்பாலும் உழுந்து இடம்பெற்று இருந்தது . தோசை இட்டலி மட்டுமல்ல வடை கூட ஒரு அன்றாட உணவாக இருந்தது . இது ஒரு மிகை படுத்த பட்ட கதை அல்ல.
உழுந்து வடை இல்லாத தேநீர் கடையே இல்லை
இப்போதும் அங்கு வடைகள் என்று ஒன்றை தயாரிக்கிறார்கள் . அதில் உழுந்தை கண்டுபிடிக்க நாசாவலும் முடியாது.
உழுந்து போயே விட்டது ..
விலை கூடினாலும் இப்போதும் மீண்டும் இருக்கிறது ஆனால் அந்த உணவு சங்கிலி தொடர் அறுந்தே விட்டது .
அந்த இடத்தை கலப்பட மலிவு போலிகள் பிடித்து கொண்டுவிட்டன .
மக்களின் அடிப்படை உணவு பழக்கத்தை தகார்த்த ஒரு மோசடி அடுத்ததாக அரங்கேறியது அம்மையாரின் அந்த பித்தளை ஆட்சியில்.
அதுவரை கோதுமை இறக்குமதியாகி கொண்டிருந்தது.
அதை அரசு நிறுவனத்தின் ஏகபோக கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்து கோதுமை என்ற பெயரில் ஏதோதோ கலப்படம் எல்லாம் செய்து இன்றுவரை நாடு முழுவதும் விநியோகிக்கிறார்கள்.
அந்த மாவு கோதுமை மாதிரி ஆனால் அது முழுமையாக கோதுமை அல்ல.
ஆட்டா மா என்று கூறுகிறார்கள் ஆனால் அது ஆட்டா மாவே அல்ல.
தவிடு நீக்காத நூறு வீத கோதுமையில் செய்யப்படும் சப்பாத்தி மற்றும் புட்டு போன்றவற்றின் சுவை இந்த கலப்பட மாவில் ஒருபோதும் வராது.
கொத்து பரோட்டாவுக்கு மட்டுமே இது லாயக்கு .
கோதுமையின் தவிட்டை ஏற்றுமதி செய்துவிட்டு ஏதோதோ எல்லாம் கலக்கிறார்கள் .
அதற்குத்தான் கண்டதை எல்லாம் போட்டு துவம்சம் பண்ணி உணவென்ற பெயரில் உள்ளே தள்ளலாமே?
அறுபதுகளுக்கு பின்பு பிறந்த பலரும் ஊட்டசத்து குறைவாக இருப்பதை இப்போதும் தெளிவாக காணாலாம்
இந்த காலக்கட்டங்களில் பிறந்த அல்லது வளர்ந்த மூன்று அல்லது நான்கு தலைமுறையினர் சராசரியை விட பெரிதும் வளர்ச்சி குறைந்தவர்கள்.
இவற்றை எல்லாம் எந்த பல்கலை கழகங்களும் கண்டு கொண்டதே இல்லை.
அவர்கள் எல்லாம் வெறும் பஞ்சாட்சர பேராசிரியர்கள் ( சம்பளம்) மட்டுமே!
அரசு நிறுவனங்களால் உருவாக்கபட்ட மோசமான உணவு பழக்கங்களை பற்றி யாரும் பெரிதாக எழுதியதாகவே தெரியவில்லை.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக