Devi Somasundaram : டிராவல் செய்றப்போ எதோ ஆல்பத்தை செலக்ட்
செய்றப்போது நினைத்தாலே இனிக்கும் பட பாடல் ப்ளே லிஸ்ட்ல வர ...அது மைண்ட்ல ஒட்டிகிச்சு ..
வீட்டுக்கு வந்தும் ...நினைத்தாலே இனிக்கும் An affair to remember..நினைத்தாலே இனிக்கும்னு ரிபிட் மோட்ல பாடிட்டே இருந்தேன் ...
பொதுவா ரிலேடட் வார்த்தைகள தொடர்ந்து தேடுவது எனக்கும் அப்பாவுக்கும் பழக்கம் ..அப்பா An affair to remember அப்டினு ஒரு படம் வந்துச்சு சின்னா..பழைய காதல பத்தின படம் ..கிட்ட தட்ட நம்ம ஆட்டோக்ராப் மாதிரின்னு சொல்ல ..
நான் கூகுள்ள An affair to remember நு தேட அது love affair அப்படின்னு ஒரு படம் காட்டுச்சு ..( 1939 ஒன்னு 94 ஒன்னு ..ரண்டு வந்துருக்கு ) .
ஒரு கப்பல் தளத்தில் சந்திக்கும் ஒரு ஏழை ப்ரன்ச் பெயிண்டருக்கும் ஒரு பாடகிக்கும் வரும் காதல்...அதில் இருவரும் ஏற்கனவே நிச்சயம் ஆனவர்கள் .. என்ன டைடானிக் வாசம் வருதேன்னு இருக்கா..அதே வாசம் எனக்கும்..
அப்டியே டைட்டானிக் போக sinking ship first on board ந்னு தேட ..அது பயண கப்பல் மட்டும் போர் கப்பலும் முழுகி இருக்குன்னு ஒரு கப்பல் படத்தை காட்டுச்சு ..
நம்ம திருவாரூர் தேர் மாதிரி துவார பாலகர், யாழி, நடன மாது, கலசம் ,அதுல பூ, தாங்கு தூண்கள், பூ போடும் சிம்ம வாகன பொம்மைகள்னு .
என்னங்கடா இது எங்கூர் தேர போர் கப்பல்னு கட்டி வச்சு இருக்காங்கன்ன்னு தேட..
அது ஸ்விடன்ல 1626 ல கட்டின கப்பலாம்..நம்ம ஆட்கள் அதை காப்பி அடித்தார்களா, இல்லை அவர்கள் நம்மை காப்பி அடித்தார்களாந்னு தெரில...அச்சு அசல் நம்மூர் தேர் ஸ்டைல் அமைப்பு ..பேர் wasa, vasa ந்னு சொன்னாலும் உண்மையான பேர் vasen.( எங்கியோ இடிக்குதுல்ல ) .
1626 ல ஸ்விடன் அரசர் Gustavus Adolphus இந்த கப்பல கட்ட ஒரு கம்பெனிய ஒப்பந்தம் செய்றார் ..
போலந்து கூட அடிக்கடி நடக்கும் சண்டைகாக தன் கப்பல் படைய வலுவாக்க கப்பல் கட்டபடுகிறது .
ஹென்ரிக் மற்றும் க்ருட் என்ற இரண்டு இன் ஜினியர்கள் ஒப்பந்தம் கையெழுத்திட்டு பொருட்கள் தயாரித்து வேலை ஆரம்பிக்கிது ..
சின்ன சின்னதா நிறைய கப்பல் செய்து கடைசில பெரிசா வாஸா டிஸைன் செய்யபடுது ..1627 ல ஹென்ரிக் நோய் வாய்பட்டு செத்து போய்டறார் .
இன்னொரு இன் ஜினியர் அமர்த்தபட்டு 1210 டன் எடையுள்ள 64 பீரங்கி வைக்க கூடிய வாஸா போர்க்கப்பல் 1628 ஆகஸ்ட் 10 தன் முதல் கடல் பயணுத்துகாக கடலில் இறக்கபடுது ..
இறக்கபட்ட சில மணி நேரத்திலயே கப்பல் மூழ்க ஆரம்பிக்குது ..கோடிகணக்கான ரூபாய் செலவில் தயாரான அந்த போர்கப்பல் தன் மெய்டன் வாயேஜ்ல்யே மூழ்கிடுது ..
ராஜா பெரிய விசாரணை செய்து பலரை தண்டிக்கிறார் ...கப்பல் சரியான அகலம் இல்லாதது, மேல் புறம் வெய்ட் அதிகமானது, பலகை இணைப்பில் தரமற்ற் பொருள் உபயோகம் ஆகியவற்றால் கப்பல் மூழ்கிவிட்டது தெரிய வருகிறது ...
பல முயற்சிக்கு பின் 1961 ல 300 வருடம் கடந்து வாஸா ஸ்டாக்ஹோம் கடல் பகுதிலேர்ந்து மீட்கப்பட்டு மியுஸியத்தில் மக்கள் பார்வைக்கு வைக்கபட்டது ..
இதில இரண்டாவதா வந்த இன் ஜினியர் ராஜாவோட கீப் பொண்ணை காதலிச்ச்சது தனி கதை .
இந்த கப்பல் பத்தி நிறைய டாகுமென்றி ,புக்ஸ் வந்து இருக்கு ..2013 ல சாம் வில்லிஸ் எழுதின ,Ship wreck ..a history of disaster at sea .பல தரவுகளோட இருக்கு ...
எனக்கு படம் பார்த்ததும். திருவாரூர் தேர் தண்ணிகுல்ல மூழ்கின உணர்வு. அதான் தகவல போஸ்ட் செய்தேன்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக