புதன், 15 ஜனவரி, 2020

முரசொலி படித்தால் திமுககாரர் .. துக்ளக் படித்தால் அறிவாளி .. ரஜினி பேச்சு .... வீடியோ


tamil.oneindia.com : சென்னையில் துக்ளக் இதழின் 50ஆம் ஆண்டு சிறப்பு மலரை குடியரசு துணைத் தலைவர் வெங்கையா நாயுடு வெளியிட்டார். இதை நடிகர் ரஜினிகாந்த் அவரிடம் இருந்து பெற்றுக்கொண்டார்.
உழைப்பு முக்கியம் இந்த விழாவில் நடிகர் ரஜினிகாந்த் பேசியதாவது, உழைப்பால் உயர்ந்து துணை குடியரசு தலைவர் ஆனவர் வெங்கையா நாயுடு. பத்திரிகைத் துறையை ஆயுதமாக கையில் எடுத்தவர் சோ.பெரியாரை கடுமையாக விமர்சித்தவர் சோ. இந்து கடவுள்களை பெரியார் விமர்சித்ததை யாருமே எழுதவில்லை. ஆனால் சோ மட்டும் தைரியமாக துக்ளக்கில் எழுதினார்.
அப்போதைய முதல்வர் கலைஞர்  அதை கடுமையாக எதிர்த்தார். இதனால் துக்ளக் பத்திரிக்கை நாடு முழுக்க பிரபலம் அடைந்தது.
கலைஞர்  துக்ளக் பத்திரிகைக்கு இலவச விளம்பரம் செய்ததாக சோ குறிப்பிட்டு இருந்தார். அ
ரசை பலமுறை கடுமையாக விமர்சித்தவர் சோ.
கலைஞர்  எப்படி சோ போன்ற பத்திரிக்கையாளர்கள் தற்போது அதிகம் வேண்டும்.பத்திரிக்கைகள் நடு நிலையுடன் செயல்பட வேண்டும். உண்மையில் பொய் என்ற தண்ணீரை கலக்க கூடாது.
எது பால், எது தண்ணீர் என்று பத்திரிக்கையாளர்தான் சொல்ல வேண்டும்.


 கவலைகள் தினம் தினம் வரும்.கவலையை நிரந்தரமாக்கிக் கொண்டால் நீ நோயாளி. கவலையை தாற்காலிகமாக்கிக் கொண்டால் நீ அறிவாளி. உங்கள் வாழ்க்கையை நீங்கள்தான் தீர்மானிக்க வேண்டும்.
நீங்கள் எப்படி இருக்க வேண்டும் என்பதை நீங்களே தீர்மானிக்க வேண்டும். செய்தி துறை பத்திரிக்கை துறை தற்போது சரியாக இல்லை.
 முரசொலி வைத்திருந்தால் அவரை திமுககாரர் என்று சொல்லிவிடலாம்,கையில் துக்ளக் வைத்திருந்தால் அவரை அறிவாளி என்று சொல்லிவிடலாம் என்று நடிகர் ரஜினிகாந்த் குறிப்பிட்டுள்ளார்

கருத்துகள் இல்லை: