திங்கள், 13 ஜனவரி, 2020

நம்மூர் சாதி ஆணவத்துக்கு ஈடானதா பிரிட்டிஷ் அரச குடும்ப ... ?

Devi Somasundaram : பேரழகி டயானா சார்லஸின் இளைய மகன் ஹாரி தன்
மனைவியுடன் தன் அரச உறுப்பினர் பதவியில் இருந்து விலகுவதாக கடந்த வாரம் அறிவித்து உள்ளார் .
பிரிட்டிஷ் பேரரசின் அரண்மனை டிபிக்கல் அரசவாதத் தனம் கொண்டது .வெள்ளை நிறத்தின் மீது பெருமையும், அரச குடும்ப பெருமையும் அதீதமாக கொண்டவர்கள் .
அதில் இருந்து விலகி மக்களோடு மக்களாக இருக்க விரும்பிய டயானாவை அவமானப் படுத்தியே மன ரீதியாக கொன்றனர் .
இன்று மேகனுக்கும் அதே தான் நடக்கின்றது..

காரணம் மேகன் கருப்பின கலப்பின பெண், முன்னாள் நடிகை, சாதாரண குடும்பத்து பெண் . இவை போதுமானதாக இருந்தது அவரை அவமானப் படுத்த
மிச்சேல் கர்ப்பமாக இருந்த போதே அரச குடும்பத்தால் அவமானப் படுத்தப் பட்டார் .
தற்பொழுது புது வருடத்தை கொண்டாட கனடா போனது அரச குடும்பத்தில் பெரும் எதிர்ப்பை கிளப்ப ஹாரி .என் தாய்க்கு நடந்தது இன்று மிக்கேலுக்கும் நடக்கின்றது .. என் தாயை இழந்தது போல் மிச்செலை இழக்க விரும்பவில்லை .நாங்கள் அரச உறுப்பினர் பொறுப்பை கைவிட்டு பிரிட்டனை விட்டு வெளியேறி எங்கள் உழைப்பில் வாழ விரும்புகிறோம்னு சொல்லி இருக்கார் .

கிட்ட தட்ட நம்மூர் சாதி ஆணவ கொலைகளுக்கு ஈடானது தான் பிரிட்டிஷ் அரச குடும்ப திமிரும் .
உலகம் முழுதும் காதலுக்கான எதிர்ப்பு ஒரே மாதிரி தான் இருக்கின்றது .
ரோமியோ ஜூலியட் தொடங்கி அம்பிகாபதி அமராவதி முதல் இன்று ஹாரி மிச்சேல் வரை அதிகார வர்க்கத்திற்கு காதல் பிடிப்பதில்லை .
சார்லஸ் டயானாவை கைவிட்டது போல் அல்லாமல் ஹாரி தன் லேடி லவ் கூட துணையா நிற்பது அழகு..
டயானாவின் ஆத்மா வாழ்த்தட்டும் .
#தேவி.

கருத்துகள் இல்லை: