திங்கள், 13 ஜனவரி, 2020

கும்பகோணம் பாலியல் குற்றவாளிகளுக்கு ஆயுள் தண்டனை ...

குற்றவாளிகள்குற்றவாளிகள்.vikatan.com கே.குணசீலன் -ம.அரவிந்த் : கும்பகோணத்தில் வடமாநில இளம்பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட வழக்கில் நான்கு இளைஞர்களுக்கு வாழ்நாள் சிறைத் தண்டனையும், மேலும் இந்த வழக்கில் தொடர்புடைய ஆட்டோ டிரைவருக்கு 7 ஆண்டுச் சிறைத் தண்டனையும் விதித்து தஞ்சாவூர் மகளிர் நீதிமன்றம் இன்று பரபரப்பான தீர்ப்பு வழங்கிள்ளது. டெல்லியைச் சேர்ந்தவர் 27 வயது நிரம்பிய இளம்பெண். இவருக்குக் கும்பகோணத்தைத் தலைமையிடமாகக் கொண்டு இயங்கும் தனியார் வங்கியில் வேலை கிடைத்தது. இதன் பயிற்சிக்காக டெல்லியிலிருந்து சென்னை வந்தவர் பின்னர் திருச்செந்தூர் எக்ஸ்பிரஸ் ரயில் மூலம் சென்னையிலிருந்து கும்பகோணத்திற்கு 2018-ம் ஆண்டு டிச 1-ம் தேதி வந்தார். ரயில் இரவு 11 மணியளவில் தாமதமாக கும்பகோணம் வந்தடைந்துள்ளது. ரயிலை விட்டு இறங்கிய அந்தப் பெண், இன்னும் சற்று நேரத்தில் அறைக்கு வந்து விடுவதாக தனது தோழிக்கு போன் செய்து கூறிவிட்டு ஆட்டோ ஏற்றியுள்ளார்.
ஆனால், ஆட்டோ டிரைவர் இளம்பெண் கூறிய இடத்திற்குச் செல்லாமல் அந்தப் பெண்ணை பைபாஸ் சாலை பகுதிக்கு அழைத்துச் சென்றுள்ளார். அப்போது அந்தப் பெண் ஆட்டோ டிரைவரிடம் நீண்ட நேரம் செல்கிறீர்கள் எனக் கேட்டுவிட்டு, சந்தேகமடைந்து ஆங்கிலத்தில் பேசி விட்டு ஹெல்ப் ஹெல்ப் எனக் கத்தியிருக்கிறார். இதனால் பயந்துபோன ஆட்டோ டிரைவர் அந்தப் பெண்ணை அங்கேயே இறக்கிவிட்டுவிட்டுச் சென்று விட்டார்.




இரவு நேரம் ஆள் நடமாட்டம் வேறு இல்லாததால் என்ன செய்வது எனத் தெரியாமல் தவித்தபடி அந்தப் பெண் தன்னுடைய டிராலி பேக்கை இழுத்துக்கொண்டு செட்டிமண்டபம் பைபாஸ் சாலை வழியாக நடந்தார். அப்போது அவ்வழியாக வந்த இளைஞர் ஒருவரிடம் லிப்ட் கேட்க அந்த இளைஞரும் அந்தப் பெண்ணை மோட்டார் சைக்கிளில் ஏற்றிக்கொண்டு சென்றார். இளைஞரின் நண்பர் ஒருவரும் பின்னாலேயே வந்தார்.
பின்னர் அந்தப் பெண்ணை நாச்சியார்கோயில் பைபாஸ் சாலை அருகே இருட்டான பகுதிக்கு இளம் பெண்ணை வலுக்கட்டாயமாக இழுத்துச் சென்று பாலியல் வன்கொடுமை செய்துள்ளனர். பின்னர் அவர்கள், மேலும் தன்னுடைய நண்பர்கள் இரண்டு பேரை வரவழைத்தனர். அவர்களும் அந்தப் பெண்ணைப் பாலியல் வன்கொடுமை செய்துள்ளனர்.



குற்றவாளிகள்



குற்றவாளிகள்
அவர் என்னை விட்டு விடுங்கள் எனக் கூச்சலிட்டபடி சத்தம் போட அதற்கு அந்த இளைஞர்கள் அடித்துக் கொலை செய்து விடுவோம் என மிரட்டியிருக்கின்றனர். அதன் பிறகு அந்தப் பெண் மயக்க நிலைக்குச் சென்று விட்டார். பின்னர், அந்த இளைஞர்கள் மெயின் ரோட்டிற்கு வந்து ஆட்டோ பிடித்து அந்தப் பெண்ணை ஏற்றியதுடன் அவரை இறக்கிவிடுவதற்காக ஒரு இளைஞரும் ஏறிக் கொண்டு சென்று அந்தப் பெண் செல்ல வேண்டிய இடத்தில் இறக்கிவிட்டுள்ளார்.
ஆட்டோவிலிருந்து இறங்கும் போது அந்த இளம் பெண் ஆட்டோவின் பதிவு எண்ணைக் குறித்து வைத்துக்கொண்டார். பின்னர் தன் தோழிகளிடம் நடந்த சம்பவத்தைக் கூறி கதறியிருக்கிறார். இந்தத் தகவல் வங்கி நிர்வாகத்திற்கும் சென்றது. இதையடுத்து டெல்லியில் உள்ள பெற்றோர்களிடமும் கூறி அவர்களை வரவழைத்தார். பின்னர் இது தொடர்பாகக் காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது. அதன்பின்னர் வெளிச்சத்துக்குவந்த இந்தச் சம்பவம் தமிழகத்தில் அதிர்வலைகளை ஏற்படுத்தியது.




வங்கி நிர்வாகம் தரப்பிலும் போலீஸாரிடம் விரைவில் விசாரணை செய்யுமாறும் குற்றவாளிகள் யாரும் தப்பிக்கக்கூடாது எனவும் அழுத்தம் தரப்பட்டது. விசாரணையில் தினேஷ், வசந்த்குமார், புருஷோத்தமன், அன்பரசு மற்றும் இதற்குக் காரணமான ஆட்டோ டிரைவர் குருமூர்த்தி ஆகிய 5 பேரும் கைது செய்யப்பட்டு விசாரிக்கப்பட்டனர். இதில் அந்த நான்கு இளைஞர்களும் இளம் பெண்ணை மிரட்டி பாலியல் வன்கொடுமை செய்தது உறுதியானது.



தஞ்சை நீதிமன்றம்



தஞ்சை நீதிமன்றம்
விசாரணையின்போது அந்தப் பெண் எனக்கு நடந்ததுபோல் இனி எந்தப் பெண்ணுக்கும் நடக்கக் கூடாது. அவர்களுக்குக் கிடைக்கக்கூடிய தண்டனை ஒரு எடுத்துக்காட்டாக இருப்பதுடன் இனி யாரும் இது போன்ற சம்பவங்களைச் செய்வதற்கு அச்சப்பட வேண்டும் எங்கு வந்து வேண்டுமானாலும் சாட்சி சொல்கிறேன் என ஆதங்கத்துடன் போலீஸாரிடம் தெரிவித்திருந்தார்.




இந்த வழக்கின் விசாரணை தஞ்சாவூர் மகிளா நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. இதில் போலீஸார் 700 பக்க குற்றப்பத்திரிகையைத் தாக்கல் செய்தனர். மேலும் அரசு தரப்பு சாட்சியாக 33 பேரிடம் விசாரிக்கப்பட்டது. இதையடுத்து இந்த வழக்கு இன்று காலை விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதி எழிலரசி, ``அரசு தரப்பு சாட்சியங்கள் அனைத்தும் சந்தேகமின்றி நிரூபணம் செய்யப்பட்டுள்ளதால் 5 பேரும் குற்றவாளி'' எனத் தீர்ப்பளித்தார்.



குற்றவாளிகள்



குற்றவாளிகள்
இதைத் தொடர்ந்து குற்றவாளிகளான தினேஷ், வசந்தகுமார், புருஷோத்தமன், அன்பரசு ஆகிய நான்கு பேருக்கும் சாகும் வரை சிறைத் தண்டனை விதித்தார். அத்துடன் அவர்களின் உடல்தான் சிறையிலிருந்து வெளியே வர வேண்டும் எனவும் குறிப்பிட்டார். மேலும் இதில் தொடர்புடைய ஆட்டோ டிரைவருக்கு 7 ஆண்டுக் கடுங்காவல் சிறைத் தண்டனையும் விதித்து தீர்ப்பளிக்கப்பட்டது. இதைக் குற்றவாளிகள் ஏக காலத்தில் அனுபவிக்க வேண்டும் என்றும் குறிப்பிடப்பட்டது. இந்தத் தீர்ப்பு தஞ்சையில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது

கருத்துகள் இல்லை: