வெள்ளி, 17 ஜனவரி, 2020

சினிமா வெறியின் 40 ஆண்டுகள்

Ravi Palette : என்னுடைய வண்ண உள் ஓவியங்களுடன் நேர்த்தியான புத்தக வடிவமைப்பில், ஷாஜி எழுதிய ‘சினிமா வெறியின் 40 ஆண்டுகள்’ புத்தகம் டிஸ்கவரி புக் பேலஸ் வெளியீடாக வந்திருக்கிறது. தமிழில்
முதன்முறையாக முழுவண்ண ஓவியங்களுடன் அநேகமாக இந்தப் புத்தகம்தான் வெளிவந்திருக்கிறதென நினைக்கிறேன்.
தலைப்புதான் சினிமா வெறியென ஆரம்பிக்கிறதே தவிர, சினிமா சம்பந்தப்பட்ட புத்தகமென இல்லை,
இது நம் எல்லோரையும்போலவே சினிமா வியப்பில் ஆழ்ந்த, மலைக்கிராமத்தில் பிறந்த ஒரு எளிய வறிய சாமானியனின் வாழ்வியல் அனுபவம் என்பது இத்தொடரை முழுமையாக வாசித்தவர்களுக்குத் தெரியும்.
நான் இந்தக் கேரள மலைப்பகுதிகளில் கொஞ்சம் அலைந்துதிரிந்திருக்கிறேன் என்பதால் இத்தொடர் என் மனதிற்கு மிகவும் நெருக்கமானதாகவும் ஆத்மார்த்தமாகவும் இருந்தது.
இதை முழு புத்தகவடிவில் மாத்ருபூமி வெளியீடாக மலையாளத்தில் எனது கோட்டோவியங்களுடன் வெளிவந்திருந்தாலும், வழக்கமான புத்தக வடிவமில்லாமல் சிறப்பான வடிவமைப்புடன் வண்ணப்புத்தகமாக காணும்போது இன்னும் அழகாக இருக்கிறது.
விகடன்-தடம், அந்திமழை மற்றும் டிஸ்கவரி புக் பேலஸ் Vediyappan M Munusamy வேடியப்பனுக்கு அன்பும் நன்றியும்.
தற்சமயம் நடைபெற்றுக்கொண்டிருக்கும் சென்னைப் புத்தக கண்காட்சியில் டிஸ்கவரி புக் பேலஸ் - அரங்க எண் F 26-ல் கிடைக்கிறது.

கருத்துகள் இல்லை: