ஞாயிறு, 21 அக்டோபர், 2018

MeToo சின்மயி, லட்சுமி ராமகிருஷ்ணன், லீனா மணிமேகலை ஊடக சந்திப்பு

tamil.oneindia.com- hemavandhana : சென்னை: மீ டூ இயக்கத்தின் மூலமாக புகார் அளித்த சின்மயி, லட்சுமி ராமகிருஷ்ணன், லீனா மணிமேகலை ஆகியோரின் இன்று நடைபெற்ற செய்தியாளர்கள் சந்திப்பில் சிறு சலசலப்பு ஏற்பட்டது.
தென்னிந்திய திரைத்துறை பெண்கள் மையம் சார்பில் சேப்பாக்கத்தில் இந்த செய்தியாளர்கள் சந்திப்பு நடைபெற்றது. இதில், பாடகி சின்மயியுடன் கவிஞர் லீனா மணிமேகலை, நடிகை லட்சுமி ராமகிருஷ்ணன் ஆகியோர் கூட்டாக கலந்து கொண்டனர்.
அப்போது செய்தியாளர்களிடம் லீனா மணிமேகலை நடந்த விவரங்களை கூறினார். பின்னர் அதுகுறித்து செய்தியாளர்கள் மீ்ண்டும் கேள்வி எழுப்பினர். ஆனால் மீண்டும் அதற்கு பதில் சொல்ல முடியாது என லீனா மணிமேகலை சொல்லிவிட்டார்.
 அத்துடன், தமது ஃபேஸ்புக், ட்விட்டர் பக்கத்தை முழுவதுமாக படித்து விட்டு வாருங்கள் என்று செய்தியாளர்களிடம் கூறினார்.
இதனால் அங்கு சலசலப்பும், வாக்குவாதமும் ஏற்பட்டது. அப்போது உடன் இருந்த லட்சுமி ராமகிருஷ்ணன் இதில் தலையிட்டு நிலைமையை சமாதானப்படுத்தினார். அதற்குள் சின்மயி வந்துவிட்டார்.
சின்மயி வருவதற்கு தாமதம் ஆனதால், செய்தியாளர் சந்திப்பும் தாமதமாகவே தொடங்கியது. சட்டப்பூர்வ நடவடிக்கை பின்னர் ஒருகட்டத்தில் செய்தியாளர்களிடம் பேசி கொண்டிருந்த சின்மயியும், சூடாகவே பதிலளித்தார்.

குறிப்பாக, உங்கள் பிரச்சினையை திரைத்துறையில் உள்ள சங்கத்தினரிடம். ஏன் சொல்லவில்லை, இதனை சட்டப்பூர்வமாகவே அணுகலாமே போன்ற கேள்விகளுக்கு கோபமடைந்த சின்மயி கைகூப்பி, "தயவு செய்து கேட்கிறேன் நிறுத்தி கொள்ளுங்கள்,
இவ்வளவு நாள் கழித்து இப்போதுதான் பெண்கள் வெளியே வந்து தைரியமாக பிரச்சனைகளை சொல்ல வருகிறார்கள். துணையாக இருங்கள்

கருத்துகள் இல்லை: