சனி, 3 ஜூன், 2017

தினகரன் மீது இனி நடவடிக்கை இல்லை? பேரம் படிஞ்சிடுத்தோன்னா?

புதுடில்லி: ''சசிகலா அக்கா மகன் தினகரன் மீதான வழக்கு, பொய் வழக்கு போல தெரிகிறது,'' என, மூத்த வழக்கறிஞர் நவீன் மல்ஹோத்ரா கூறியுள்ளார்.< தேர்தல் கமிஷன் அதிகாரிகளுக்கு லஞ்சம் கொடுக்க முயன்றதாக, சசிகலா அக்கா மகன்
தினகரன் கைது செய்யப்பட்டு, டில்லி திஹார் சிறையில் அடைக்கப்பட்டு இருந்தார். அவருக்கு ஜாமின் அளித்து, டில்லியில் உள்ள, லஞ்ச தடுப்பு சட்ட சிறப்பு கோர்ட் நீதிபதி பூனம் சவுத்ரி நேற்று முன்தினம் தீர்ப்பு அளித்தார். இந்த தீர்ப்பு குறித்து, மூத்த வழக்கறிஞர் நவீன் மல்ஹோத்ரா கூறியதாவது: தினகரன் மீது அரசியல்பழிவாங்கும் நடவடிக்கை யாகவே இந்த வழக்கு தொடரப்பட்டுள்ளது. இடைத் தரகர் சுகேஷ் சந்தருடன், தினகரன் பேசியதாக கூறப்படும் ஆடியோ, தினகரனின் மொபைல் ஆகியவற்றைத் தவிர, வேறு எந்த ஆதாரத்தையும் டில்லி போலீஸ் இதுவரை தாக்கல் செய்யவில்லை. மேலும் இந்த வழக்கில், இதுவரை குற்றச்சாட்டுகள் பதிவு செய்யப்படவில்லை. இவையெல்லாம், தினகரனுக்கு சாதகமாக உள்ளன.மேலும் தன் தீர்ப்பில், 'தினகரன் மீதான வழக்கு, அரசியல் பழிவாங்கல்' என, நீதிபதி பூனம் சவுத்ரி குறிப்பிட்டுள்ளார்.


இந்த வழக்கு தொடர்பாக, தேர்தல் கமிஷன் அதி காரிகளிடம் விசாரணை நடந்து வருவதாக டில்லி போலீஸ் கூறி வருகிறது. ஆனால், இதுவரை அது தொடர்பாக வருகிறது. ஆனால், இதுவரை அது தொடர்பாக எந்த ஆதாரத்தையும் அவர்கள் தாக்கல் செய்யவில்லை. இது போன்ற, டில்லி போலீசாரின் முரண்பாடுகளால், இது பொய் வழக்கு என்பது நிரூபிக்கப்பட்டுள்ளது.

அதனால், இந்த வழக்கில், தினகரன் மீது இனி எந்த நடவடிக்கையும் இருக்காது என்பதை உறுதியாக கூறலாம். இவ்வாறு அவர் கூறினார்.தினமலர்

கருத்துகள் இல்லை: