சனி, 3 ஜூன், 2017

ஐ.ஐ.டி வளாகம் முன்பு போராடிய பெண்ணின் கையை முறித்த போலீஸ்....


நேற்று மதியம் ஐ.ஐ.டி. வளாகத்தில் உணவு சாப்பிட சென்ற சூரஜ்ஜை ஹிந்துத்வ கோஷம் எழுப்பி ஆதரவு வட இந்திய மாணவர்கள் சிலர் சுற்றி வளைத்து தாக்கினர். இந்த தாக்குதலில் சூரஜ்ஜின் வலது கண்ணில் பலத்த காயம் ஏற்பட்டது. கேரளாவை சேர்ந்த மாணவர் மாணவர் சூரஜ் தாக்கப்பட்டதை கண்டித்து ஐ.ஐ.டி. வளாகத்தில் முன்புற வாசல் முன்பு இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம், புரட்சிகர மாணவர் அமைப்பு, அனைத்திந்திய மாணவர் பெருமன்றத்தை சேர்ந்த சுமார் 500க்கும் மேற்பட்ட மாணவர்கள் அமைப்பினர் இன்று முற்றுகையிட்டு ஆர்ப்பாடடத்தில் ஈடுபட்டனர். பெண்களும் இதில் பங்கேற்றனர். இந்த போராட்டம் நடந்து கொண்டிருந்த போதே ஐ.ஐ.டி. வளாகத்தில் மற்றொரு நுழைவு வாயில் பகுதியில் பெரியார் திராவிடர் கழகத்தினர் 300-க்கும் மேற்பட்டோர் முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டனர்.; அவர்கள் மோடி மத்திய அரசுக்கு எதிராகவும் கோ‌ஷங்கள் எழுப்பினர். பின்னர் சாலை மறியலில் ஈடுபட முயன்றனர்.
அவர்களை போலீசார் தடுத்தனர். இதையடுத்து போராட்டத்தில் ஈடுபட்டவர்களை போலீசார் கைது செய்ய முயன்றனர். அப்போது மாணவர்கள் அமைப்பினர் எதிர்ப்பு தெரிவித்து சாலையில் படுத்தனர். இதைத் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டவர்களை போலீசார் வலுக்கட்டாயமாக தூக்கி சென்று கைது செய்து வேனில் ஏற்றினர்.
சிலர் அவர்கள் சமைத்து கொண்டு வந்திருந்த மாட்டு இறைச்சியை சாப்பிட்டு ஆர்ப்பாட்டம் செய்தனர். அவர்களையும் போலீசார் கைது செய்தனர்.
Special Correspondent FB Wing

கருத்துகள் இல்லை: