வியாழன், 1 ஜூன், 2017

விதிமீறலில் 500க்கும் மேற்பட்ட கட்டடங்கள்! சென்னை சில்க்ஸ் அணையா தீ!

thetimestamil.com : ஜாக்கி சேகர்: 20 மணி நேரம் போராடியும் தீயை கட்டுப்படுத்த முடியவில்லை என்றால் என்ன அர்த்தம்.? நேற்று இரவு சாதர்ன் கிரைஸ்ட் ஓட்டலின் மொட்டை மாடியில் இரவு பதினொன்றரைக்கு மேல் வரை இருந்தேன்..அப்போது வரை தீ கொழுந்து விட்டு எரிந்துக்கொண்டுதான் இருந்தது… சென்னை சில்க்ஸ்… மூன்று பக்க சுவர்… எந்த இடத்திலும் ஜன்னல் என்று ஒன்றுஇல்லவே இல்லை…விடியற்காலை நாலே முக்காலுக்கு தீ பிடித்து பரவ ஆரம்பித்து இருக்கின்றது.. இரவு பணியில் இருந்து ஊழியர்கள் பதினோரு பேரை பத்திரமாக மீட்டு இருக்கின்றார்கள்..
200 கோடிக்கு நட்டம் என்று முதல் தகவல் அறிக்கை சொல்கின்றது…
இதுவே ஞாயிறு மாலை பரபரப்பான வியாபார நேரத்தில் தீ பிடித்து இருந்தால் 200க்கு மேற்ப்பட்ட குடும்பங்களில் தாலி அறுத்து இருப்பார்கள்..விசேஷத்துக்கு துணியெடுக்க வந்தவர்களில் வீட்டில் பதினாறு நாள் கழித்து காரியம்தான் செய்து இருப்பார்கள்..

சென்னை சில்க்ஸ்ன் பின் பக்கமோ சைடிலோ அவசர வழியே இரும்பு படிகட்டுகளோ… இல்லை என்பதே எதார்த்தம்..
ஒன்வேதான் ..
ஒரே வழியில் சென்று ஏழு மாடிக்கும் போய் திரும்ப அதே வழியில் வரவேண்டும் யோசித்து பாருங்கள்… ஒரு மாடிக்கு ஆயிரம் பேர் என்றாலும் தோராயமாக 5000 பேர் சென்னை சில்க் கடையில் புடவை நகை வாங்க வந்து இருந்த நேரத்தில் தீ பிடித்து இருந்தால் நினைத்து பார்க்கவே நெஞ்சம் பதறுகின்றது….
புகை மூட்டம் மற்றும் நெரிசலிலே பலர் உயிர் இழந்து இருப்பார்கள்…. 500க்கு மேற்பட்ட கடைகள் விதி மீறி கட்டப்பட்ட கட்டிடங்கள் இன்னும் இருக்கின்றதாம்…
அதிகாரிகள் மற்றும் ஆட்சியாளர்களின் அலட்சியம்… லட்சத்துல வாங்கின சொத்துகள் நீங்க அனுபவிக்க கூட போறதில்லை.. அப்புறம் ஏன்டா அலஞ்சி தொலைக்கறிங்க—???
உங்களுக்கு உதாரணம் சொல்லனும்னா… எதுக்கு வாழ்ந்தோம் எதுக்கு செத்தோம்ன்னு தெரியாம ஊழல் வழக்கில் முதன்மை குற்றவாளி ஜெ வாங்கி குவித்த சொத்துக்களை அரசு கையகப்படுத்தி இருக்கின்றது… ஆனால் வாழும் காலத்தில் நம்பிய மக்களுக்கு அந்த அம்மா நினைச்சி இருந்தா எவ்வளவோ செய்து இருக்கலாம்… ஆனால் முதல்வர் பதவின்னா.. ஹெலிகாப்டரில் பறக்க தோதான பதவி என்று சர்ச் பார்க்கில் படித்த பெண்மணி நினைத்துக்கொண்டதுதான் நகை முரண்..
இன்னமும் 500க்கு மேற்பட்ட இடிக்கபடவேண்டிய கட்டிடங்கள் இருக்கின்றன.. இடிப்பார்களா? இல்லவே இல்லை இதுவும் சென்னை சில்க்ஸ் பெரும் கரும்புகை போல கடந்து போகும்…
ஜாக்கி சேகர், திரை எழுத்தாளர். 

கருத்துகள் இல்லை: