வியாழன், 1 ஜூன், 2017

Chennai IIT மாணவன் சூரஜ் ஐ தாக்கிய பாஜக மாணவ குண்டன் மனீஷ் வைத்தியசாலையில் ...போலீசின் என்கவுண்டர் பாணி நாடகம்

ஐஐடியில் மாணவர் சூரஜை தாக்கிய மாணவர் மணீஷை மருத்துவமனையில் சென்று சந்தித்து வந்திருக்கிறார் பாஜகவின் இளைஞரணி தலைவரான வினோஜ் ப செல்வம்.
மாட்டிறைச்சிக்காக மாடுகள் விற்கப்படுவதற்கு மத்திய அரசு கொண்டு வந்த சட்டத்தைக் கண்டித்து சென்னை ஐஐடியில் மாட்டிறைச்சி விருந்து நடந்தது. இதில் 50க்கும் மேற்பட்ட ஐஐடி மாணவர்கள் கலந்துகொண்டனர். அதில் ஒருவர் ஆய்வு மாணவர் சூரஜ். அவரை சக மாணவர் மணீஷ் மாட்டிறைச்சி சாப்பிட்டு சைவ மெஸ்ஸுக்கு வந்தார் என்ற காரணத்தால் பலமாக தாக்கினார். சூரஜை தாக்கியதால் அவருடைய கண்பார்வை பாதிக்கப்பட்டுள்ள நிலையில், தன்னைக் காப்பாற்றிக்கொள்ள மணீஷ் கை உடைந்ததாக கூறி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருப்பதாக மாணவர்கள் கூறுகின்றனர்.
முன்னதாக பாதிக்கப்பட்ட சூரஜை திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் சந்தித்து ஆறுதல் கூறினார். பல்வேறு கட்சிகள், முற்போக்கு அமைப்புகள் சூரஜ்ஜுக்கு நீதி வேண்டி போராட்டம் நடத்தினர். கேரள முதல்வர் பினராயி விஜயன் தமிழக அரசு உரிய நடவடிக்கை எடுத்து சூரஜை தாக்கியவர்களை கைது செய்ய வேண்டும் என கூறியிருந்தார். மணீஷை காப்பாற்றும்வகையில் பாஜக தலைவர்கள் பலரும் பேசி வருகின்றனர்.
இந்நிலையில் பாஜக இளைஞரணி தலைவர் தாக்குதல் நடத்திய மாணவரை சந்தித்து ஆறுதல் கூறியதாக தனது முகநூலில் குறிப்பிட்டிருக்கிறார்.
அதில், ‘IIT வளாகத்தில் தாக்கப்பட்ட மணீஷ் என்னும் மாணவனை சென்னை மருத்துவமனையில் சந்தித்து பா.ஜ.க இளைஞரணி சார்பாக ஆறுதல் கூறினோம். இந்த விவகாரத்தில் அரசியல் கட்சிகள் தலையிடாமல் IIT நிர்வாகமும், தமிழக போலீஸாரும் விசாரணை நட்த்தி உண்மையை வெளிகொணர வேண்டும் என்ற கோரிக்கையை பத்திரிக்கையாளர் சந்திப்பின் போது முன்வைத்தோம்.’என தெரிவித்துள்ளார். thetimestamil.com

கருத்துகள் இல்லை: