திங்கள், 29 மே, 2017

கேரளாவில் ட்ரெண்டாகும் ‘திராவிட நாடு ... தெலுங்கர்கள், கன்னடர்கள், மலையாளிகள் திராவிட நாடு என பேசுகிறார்கள்

மாட்டிறைச்சி உண்பதற்கு மத்திய அரசு விதித்துள்ள மறைமுக தடைக்கு கடந்த இரண்டு நாட்களாக சமூக ஊடகங்களில் கடும் எதிர்ப்பு கிளம்பிக்கொண்டிருக்கிறது. குறிப்பாக தென் இந்திய மக்கள் அதிகமாக தங்களுடைய எதிர்ப்பை தெரிவித்து வருகின்றனர்.
இதன் அடுத்த நிலையாக, இந்தியாவிலிருந்து பிரிந்து திராவிட மொழிகளை பேசும் மக்கள் வசிக்கும் மாநிலங்கள் இணைந்து ஒரு நாடாக உருவாக வேண்டும் என ‘சீரியஸாக’ மக்கள் ட்விட்டி வருகின்றனர்.
தமிழர்கள்தான் எப்போதும் திராவிட நாடு என பேசிக்கொண்டிருப்பார்கள்; ஆனால் இப்போது தெலுங்கர்கள், கன்னடர்கள், மலையாளிகள் திராவிட நாடு என பேசுகிறார்கள் எனவும் எழுதி வருகின்றனர்.
அதுபோல, முகநூலில் இதுகுறித்த உரையாடல் தொடங்கியிருக்கிறது…
மராத்தி மொழி விரும்பி ஹிந்தி மொழி வெறுக்கும் பற்று மிக்க மராத்தியர்கள் , அதே மொழி பாசத்தில் இருக்கும் திராவிடம் உடன் கைகோர்த்தால் ..
இந்தியாவில் மூன்றில் இரு பங்கு பொருளாதாரம் இந்த ஐந்து மாநிலத்தில் கையில் தான் என்று முகத்தில் அறையும் உண்மை டெல்லி க்கு தெரியுமா

 என்ற ஹேஷ் டேக் தற்போது ட்விட்டரில் ட்ரெண்டாகி வருகிறது. கடந்த மூன்றாண்டுகால மோடி அரசின் சாதனை பிரிந்திருந்த திராவிடர்களை ஒன்றாகியதுதான் என்றும் பலர் பதிவிட்டுள்ளனர்.

தமிழர்கள்தான் எப்போதும் திராவிட நாடு என பேசிக்கொண்டிருப்பார்கள்; ஆனால் இப்போது தெலுங்கர்கள், கன்னடர்கள், மலையாளிகள் திராவிட நாடு என பேசுகிறார்கள் எனவும் எழுதி வருகின்றனர்.
அதுபோல, முகநூலில் இதுகுறித்த உரையாடல் தொடங்கியிருக்கிறது…

தே.கி. மலையமான்:  தருண்விஜய் தென்னிந்தியர்கள் கருப்பானவர்கள் என சொன்னவுடன் முதல் குரல் கன்னடர்களிடம் வந்தது..பாராளுமன்றத்திலே மல்லிகார்ஜுன கார்கே எதிர்த்து முழங்கினார் இப்படியே போனால் தனியாய் பிரிந்துபோகும் வாய்ப்பை நீங்களே ஏற்படுத்திவிடாதீர்கள் என்று…இன்று கேரளா மாட்டுக்கறி தடைக்கெதிராக தனது எதிர்விணையை கடுமையாக ஆற்றிக்கொண்டிருக்கிறது..நாம் எப்போதும் இந்தி திணிப்பெதிராக போர்க்களம் பூண்டெழுகிறோம்…ஆக உணர்வால் நாம் திராவிடர்களாய்தான் இருக்கிறோம்..  thatimestamil

கருத்துகள் இல்லை: