ஞாயிறு, 28 மே, 2017

தமிழக அரசை அடித்து துவைத்து தூர்வாரும் ஸ்டாலின்

அதே நாளில் தமிழகம் முழுவதும் பல்வேறு
குளங்கள், கண்மாய்களில் அமைச்சர்கள் முன்னிலையில் தூர் வாரும் பணிகள் தொடங்கி வைக்கப்பட்டன. இந்த வகையில் மதுரையில் திருமங்கலம் அருகே உள்ள சிவரக்கோட்டை கண்மாயில் மராமத்து பணிகளை மதுரை மாவட்ட கலெக்டர் வீர ராகவ ராவ் தொடங்கி வைத்தார். இவ்விழாவில் கலந்து கொண்ட அமைச்சர் உதயகுமார், ‘’மறைந்த முதல்வர் அம்மா அவர்கள் அளித்த வாக்குறுதிகள் அனைத்தையும் இப்போது பதவியில் இருக்கும் முதல்வர் அவர்கள் நிறைவேற்றி வருகிறார். அதன் அடிப்படையில் முதலில் நீர் நிலைகளை தூர் வார 1௦௦ கோடி ரூபாய் ஒதுக்கினார். இப்போது மேலும் 3௦௦ கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டிருக்கிறது. அரசு இந்தப் பணிகளை செய்கிறது என்றவுடன்... இதற்கு மக்கள் அதிக வரவேற்பு அளிப்பதை தாங்கிக் கொள்ள முடியாமல் திமுக செயல் தலைவர் முக ஸ்டாலின் தானும் குளங்களை தூர் வாருகிறேன் என்று சொல்லி அரசியல் செய்கிறார்.
அவரது செயல்பாடுகளை மக்கள் வேடிக்கையாக பார்க்கிறார்கள்’’ என்று குறிப்பிட்டார் அமைச்சர். அதிகாரிகள் தரப்பில் பேசியபோது, ‘’முதலில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி குளங்கள், ஏரிகளை தூர் வார 1௦௦ கோடி ரூபாயை ஒதுக்கினார். ஆனால் அதைத் தொடர்ந்து பெரிதாக ஏதும் நடக்கவில்லை. இந்தத் தகவலை தெரிந்துகொண்டுதான் முக ஸ்டாலின் தன் தலைமையிலேயே சென்னையில் தொடங்கி தமிழகத்தின் பல இடங்களில் குளங்களை தூர் வாரினார். இது ஊடகங்கள் மத்தியில் பேசப்பட்டதன் எதிரொலியாகத்தான் இப்போது முதல்வர் மேட்டூர் அணையை தூர் வாருகிறார். அமைச்சர்கள் அனைவரையும் மாவட்டங்களிலேயே இருந்து மராமத்து பணிகளை செய்ய சொல்லியிருக்கிறார். நாங்கள் அரசியல் கடந்து சொல்கிறோம். ஸ்டாலின் இந்த விவகாரத்தில் நீர் நிலைகளை மட்டுமல்ல... செயல்படாமல் இருந்த தமிழக அரசையும் தூர் வாரியிருக்கிறார்’’ என்றனர்.மின்னம்பலம்

கருத்துகள் இல்லை: