நடிகர்களிடம் ஏண்டா பிச்சை கேட்கிறீங்க..நாங்க ஏன் உங்களுக்கு செய்யணும் இப்படி தமிழ் ரசிகர்களை, மக்களை கேவலப்படுத்தினார் சிங்கம் 3 பட தயாரிப்பாளர் ஞானவேல் ராஜா.
மேலும் ‛டேய்…தமிழ் ராக்கர்ஸ்… உன்னை 6 மாதத்தில் தேடிப்பிடித்து உள்ளே போட்டு, அதை லைவ் ஸ்ட்ரீம் செய்வேன்’. நமக்குள்ளேயே, எனக்கு அவரைப் பிடிக்கவில்லை, இவரைப் பிடிக்கவில்லை என்று உட்கார்ந்திருந்தோம் என்றால், தொலைக்காட்சி சீரியல்கள் வரிசையில் நமது திரைத்துறையும் சேர்ந்துடும்.
இது நடக்காமல் இருக்க வேண்டும் எனில், நல்ல முடிவுகளை உடனே எடுக்க வேண்டும். இதைச் சொல்ல இந்த மேடையைப் பயன்படுத்தியதற்கு மன்னிக்கவும்’ என்றார் ஞானவேல் ராஜா.
பின்னர் ‘மக்களுக்கு எந்த கோபத்தை எங்கே காட்டணும்னு தெரியமாட்டேங்குது. ஓட்டுப் போட்டு யாரை ஜெயிக்க வெச்சோமோ அவங்களைத் தவிர மற்றவர்களிடமே அதிகம் எதிர்பார்க்கிறார்கள்.
அமைச்சர்களை நாம எந்த கேள்வியும் கேட்பதில்லை. ஆனால், நடிகர்களை குறை சொல்லிக்கொண்டிருக்கிறோம். எதுக்கு இவ்ளோ குற்றச்சாட்டு?
எல்லா நடிகர்களுமே பல விதங்களில் மக்களுக்கு உதவி செஞ்சுட்டுதான் வர்றாங்க. உங்களை மகிழ்விக்கணும்னு தான் நாங்க ராப்பகல் பார்க்காமல் உழைக்கிறோம். அதற்கான மரியாதையை சினிமா கலைஞர்களுக்கு கொடுக்கணும்’ என கேட்டுக்கொண்டார். இதற்கு தமிழ் ராக்கர்ஸ் இணையமானது அவர்களது முகநூல் பக்கத்தில் பதிலடி கொடுத்துள்ளது. ‘ நல்லா பேசுனீங்க ஞானவேல்ராஜா சார். உங்க காலண்டரில் குறிச்சு வைச்சுக்கோங்க…
பிப்ரவரி 9ஆம் தேதி உங்களுடைய நாள் கிடையாது. எங்களுடைய நாள்’ என பதிவுட்டுள்ளார்கள். பதிவிட்ட சில மணி நேரத்திலேயே தமிழ் ராக்கர்ஸ் இணையத்தின் ட்விட்டர் பக்கம் அழிக்கபட்டுவிட்டது. இந்த நிலையில் வரும் ஒன்பதாம் தேதி வீட்டு வீட்டுக்கு சிங்கம் 3படத்தின் டிவிடியை ஐந்து ரூபாய்க்கு கொடுப்பது என்கிற முயற்சியில் இறங்கி இருப்பதாக வாட்ஸ் ஆப் குழுக்கள் மூலம் தெரிகிறது. லைவ்டே

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக