வெள்ளி, 16 டிசம்பர், 2016

ஜெயாவின் மிடாஸ், ஜாஸ் சினிமாஸ், ஜெயா பைனான்ஸ் போன்ற கம்பனிகள் சசிகலாவின் வசம்!

சென்னை: அதிமுகவின் புதிய தலைமையை ஏற்கப்போவதாக சிக்னல்களை வெளிப்படுத்தி வரும் சசிகலாவின் கட்டுப்பாட்டில் மிடாஸ் மதுபான தொழிற்சாலை 13 நிறுவனங்கள் உள்ளன. சசிகலா நடராஜன்... விகே சசிகலா... இப்போது 'சின்னம்மா'! தமிழக அரசியல் களத்தில் இப்போது உச்சரிக்கப்படும் பெயர்... இனி அதிமுகவினரின் வேதவாக்காக, தெய்வத் தாயாக திகழப் போகிறது. யார் இந்த சசிகலா நடராஜன் எனும் விகே சசிகலா எனும் சின்னம்மா? 'மன்னார்குடி வகையறாக்களில்' இருந்து தொடங்குவோம். சசிகலாவுடன் பிறந்தவர்கள் 5 பேர். சகோதரர்கள் வினோதகன், திவாகரன், சுந்தரவதனம், ஜெயராமன் மற்றும் சகோதரி வனிதாமணி. சசிகலா- நடராஜன் தம்பதியினருக்கு குழந்தைகள் இல்லை. சகோதரர்களின் மனைவிகள், குழந்தைகள் மற்றும் சகோதரியின் குடும்பங்களே சசிகலாவின் 'மன்னார் குடி வகையறாக்கள்' இந்த வகையறாக்களில் சசிகலாவின் வலதுகரமாக இப்போது இருப்பது சிவகுமார். சசிகலாவின் அண்ணன் சுந்தரவதனத்தின் மகள் பிரபாவின் கணவர்தான் இந்த சிவகுமார். இவர்தான் 'மன்னார்குடி வகையறாக்களின்' 13 கம்பெனிகளையும் நிர்வகித்து வருகிறார். இக்கம்பெனிகளில் ஜாஸ் சினிமாஸ் மற்றும் ஜெயா டிவியின் மாவிஸ் சாட்காம் ஆகிய 2-ல் சசிகலா முக்கிய பங்குதாரரர். அதேபோல் சசிகலாவின் மற்றொரு சகோதரர் ஜெயராமனின் மருமகன் கே. கார்த்திகேயனும் மன்னார்குடி வகையறாக்களின் பெரும்பாலான கம்பெனிகளின் போர்டில் இடம்பெற்றிருப்பவர். சரி மன்னார்குடி வகையறாக்களின் கம்பெனிகள் சிலவற்றை பார்ப்போம்.... மிடாஸ் கோல்டன் டச் டிஸ்டில்லரீஸ் (மதுபான தொழிற்சாலை) மிடாஸ் கோல்டன் டச் டிஸ்டில்லரீஸ் (மதுபான தொழிற்சாலை) ஜெயலலிதா 2-வது முறையாக முதல்வரான போது 2002-ம் ஆண்டு இத்தொழிற்சாலை அமைக்கப்பட்டது. காஞ்சிபுரம் மாவட்டம் சிறுமாத்தூர் கிராமத்தில் மிடாஸ் தொழிற்சாலை அமைந்துள்ளது. அதிமுக ஆட்சியில்தான் என்று இல்லை திமுக ஆட்சியிலும் கூட மிடாஸ் தொழிற்சாலையில் இருந்து 'சரக்குகள்' தமிழக அரசின் டாஸ்மாக் கடைகளுக்கு கொள்முதல் செய்யப்படும். ஜாஸ் சினிமாஸ் ஜாஸ் சினிமாஸ் மன்னார்குடி வகையறாக்களுக்கு சொந்தமான சிக்னெட் எக்ஸ்போர்ட் நிறுவனம் மற்றும் ஜாஸ் சினிமாஸ் இரண்டும் தலா 48.4% பங்குகளை வைத்துள்ளன. ஜாஸ் சினிமாவின் ஒரிஜனல் ஓனர்களான எம்.ஆர். அன்புக்கரசு, எஸ், நாகையனிடம் எஞ்சிய பங்குகள் உள்ளன. ஜாஸ் சினிமாஸில் சிவகுமார், கார்த்திகேயன் இருவருமே போர்டில் உள்ளனர். மாவிஸ் சாட்காம் மாவிஸ் சாட்காம் 1998-ம் ஆண்டு ஜெயா டிவியை தொடங்கியது மாவிஸ் சாட்காம். இதன் போர்டில் சிவகுமாரும் கார்த்திகேயனும் இடம்பெறவில்லை. ஆனால் சிவகுமாரின் மனைவி பிரபா சிவகுமார்தான் நிர்வாக இயக்குநர். பிரபாரவின் சகோதரி அனுராதாவும் ஜெயா டிவியின் முக்கிய நிர்வாகிகளில் ஒருவர். அனுராதா, சசிகலாவின் சகோதரி வனிதாமணியின் மூத்த மகனான டிடிவி தினகரனை திருமணம் செய்துள்ளார். இந்நிறுவனத்தில் 81% பங்குகளை வைத்திருப்பவர் 'சின்னம்மா' சசிகலா. சிக்னெட் எக்ஸ்போர்ட்ஸ் மற்றும் ஜாஸ் சினிமாஸ் நிறுவனங்கள் ஜெயா டிவியின் மாவிஸ் சாட்காமில் தலா 4% பங்குகளை வைத்துள்ளன. எஞ்சிய பங்குகள் 'மன்னார்குடி வகையறாக்களிடம்' உள்ளன. சிக்னெட் எக்ஸ்போர்ட்ஸ் சிக்னெட் எக்ஸ்போர்ட்ஸ் சசிகலாவின் கணவர் நடராஜன் வகையறாவைச் சேர்ந்த குலோத்துங்கம் மற்றும் சண்முகம்தான் இக்கம்பெனிகளின் பங்குகளை வைத்துள்ளனர். மிகப் பெரிய அளவிலான பிசினஸில் இக்கம்பெனி ஈடுபடவில்லை. இந்த நிறுவனம் ரூ5.76 கோடி கடன் வாங்கி அதில் ரூ2.66 கோடிக்கு மிடாஸ் பங்குகளையும் ரூ2.56 கோடிக்கு மாவிஸ் சாட்காம் பங்குகளையும் வாங்கியுள்ளது குறிப்பிடத்தக்கது. ஸ்ரீ ஜெயா பைனான்ஸ் ஸ்ரீ ஜெயா பைனான்ஸ் மன்னார்குடி வகையறா இளவரசி வசம் 90% பங்குகள் உள்ளன. இந்த நிறுவனம் நீண்டகால கடனாக ரூ15.97 கோடி வாங்கியுள்ளதாம். இதர கம்பெனிகள் இதர கம்பெனிகள் மன்னார்குடி வகையறாக்களின் பிசினஸ் வலது கரங்களான சிவகுமாரும் கார்த்திகேயனும் இயக்குநர்களாக உள்ள மேலும் சில நிறுவனங்கள்: குரியோ ஆட்டோ மார்க் ஏ வோல்ர்ட் ராக் ஆவிரி ப்ராபெர்ட்டீஸ் பேன்சி ஸ்டீல்ஸ் காட்டேஜ் பீல்ட் ரிசார்ட்ஸ் ஸ்ரீஹரி சந்திரா எஸ்டேட்ஸ் கசானா பின்வெஸ்ட் கசானா பின்வெஸ்ட் ஜெ. ஜெயலலிதா எனும் ஜெயலலிதா முதல்வர் பதவி வகித்ததைப் பயன்படுத்தி மன்னார்குடி வகையறாக்கள் உருவாக்கிய கம்பெனிகள் இவை. இவற்றின் ஏகபோக முதலாளியான 'தொழிலதிபர்' சின்னம்மாதான் இனி அதிமுகவுக்கும் ஓனராகப் போகிறார்.

Read more at: http://tamil.oneindia.com/news/tamilnadu/sasikala-s-mannargudi-families-own-13-companies-269878.html

கருத்துகள் இல்லை: