ஞாயிறு, 11 டிசம்பர், 2016

அதிமுக சேகர் ரெட்டி ரெயிட் பிந்திய ஸ்கோர் : 177 கிலோ தங்கம் , 131 கோடி ரூபாய் புதிய நோட்டுக்கள்

அ.தி.மு.க., கான்ட்ராக்டர் சேகர் ரெட்டியிடம் இருந்து, இதுவரை 131 கோடி ரூபாய் பணம், 177 கிலோ தங்கம் பறிமுதல் செய்யப்பட்டு உள்ளது. 'அடேங்கப்பா, திருப்பதி ஏழுமலையானுக்கே சவால் விடுவாரோ' என, மக்கள் வியக்கும் அளவுக்கு அவரது வீடு, அலுவலகம் மற்றும் காரில் இருந்து பணம் மற்றும் தங்கக் கட்டிகளை வருமான வரித்துறை அதிகாரிகள் கைப்பற்றி உள்ளனர். இந்த சோதனையை அடுத்து சி.பி.ஐ., அதிகாரிகளின் விசாரணை வளையத்திலும் சேகர் ரெட்டி சிக்கியுள்ளார் வேலூர் மாவட்டம், தொண்டான் துளசி கிராமத்தைச் சேர்ந்தவர் சேகர் ரெட்டி; 'ஜே.எஸ்.ஆர்., இன்ப்ராடெக்' என்ற நிறுவனத்தை நடத்துகிறார். அதன் மூலம் நெடுஞ்சாலைத் துறை, பொதுப்பணித் துறையில், 'கான்ட்ராக்ட்' எடுத்து வந்தார். 'எஸ்.ஆர்.எஸ்., மைனிங்' என்ற பெயரில், தமிழகம் முழுவதும், மணல் குவாரிகளை நடத்தும் உரிமையை பெற்றுள்ளார்.


அவரது உறவினர் சீனுவாசலு ரெட்டியுடன் சேர்ந்து பல்வேறு தொழில்களில் ஈடுபட்டுள்ள சேகர் ரெட்டி, திருமலை தேவஸ்தான உறுப்பினராகவும் இருந்தார். ஜெயலலிதா, சசிகலாவுக்கு நெருக்கமானதன் காரணமாக, அமைச்சர்கள், அதிகாரிகள் மத்தியிலும், செல்வாக்கு மிக்கவராக வலம் வந்தார்.

ஜெயலலிதா மறைந்து சில நாட்களே ஆன நிலையில், சேகர் ரெட்டி, அவரது உறவினர் சீனுவாசலு ரெட்டி, நண்பர்கள், பிரேம் ரெட்டி, ராகவேந்திரன் ஆகியோரின் வீடுகள் மற்றும் அலுவலகங்கள் என, எட்டு இடங்களில், 8ம் தேதி முதல், வருமான வரி சோதனை நடந்து வருகிறது. அதில், நேற்று முன்தினம் வரை, 107 கோடி ரூபாய் பணம், 127 கிலோ தங்கம் பறிமுதல் செய்யப்பட்டது.

செல்லாத ரூபாய் நோட்டு அறிவிப்புக்கு பின், நாட்டிலேயே மிகப் பெரிய பறிமுதல் நடவடிக்கை என, கூறும் அளவுக்கு தோண்ட ,தோண்ட, அவரது வீடுகளில் இருந்து பணமும் தங்கமும் சிக்கி வருகின்றன. அவரிடம் பறி முதல் செய்யப்பட்ட தொகையில், 10 கோடி
ரூபாய் அளவிற்கு, புதிய, 2,000 ரூபாய் நோட்டுகள் இருந்தன.

ஆனால், அவற்றின் எண்கள் வரிசைப்படி இல்லை. அதனால், வங்கிகளில் இருந்து,முறை கேடாக பெறப்படவில்லை என, அதிகாரிகள் கருதினர். தொழில் ரீதியாக, சென்னை, சவுகார் பேட்டை, பாரிமுனை போன்ற சில இடங்களில், கமிஷனுக்கு மாற்றப்பட்டு இருக்கலாம் என, நினைத்தனர்.

புதிய ரூபாய் நோட்டுகள்கட்டுக்கட்டாக கிடைத் திருப்பதால், இதில் வங்கி அதிகாரிகளுக்கு தொடர்பு இருக்குமோ என்ற சந்தேகம் எழுந்தது. அதனால், சி.பி.ஐ., அதிகாரிகளும் களத்தில் குதித்துள்ளனர். சேகர் ரெட்டி பற்றிய விசார ணையை, நேற்று துவங்கினர்.

இதற்கிடையே, சென்னையில் நேற்று, சேகர் ரெட்டிக்கு சொந்தமான மேலும் சில இடங்க ளில், 'ரெய்டு' நடந்தது; அதில், மேலும், தங்கம், பணம் கிடைத்தது.

வருமான வரித்துறை அதிகாரிகள் கூறியதாவது

சேகர் ரெட்டி தொடர்பாக, சென்னையில், கூடுத லாக, ஐந்து இடங்களில் சோதனை நடந்தது. நுாற்றுக்கும் அதிகமான அலுவலர்கள், சோத னையில் ஈடுபட்டனர். இதில், கட்டுக் கட்டாக முக்கிய ஆவணங்கள் சிக்கியுள்ளன; அவற்றை, லாரியில் ஏற்றிக் கொண்டு வந்துள்ளோம். வேலுாரில், சேகர் ரெட்டி வீட்டில் இருந்து, காரில் கடத்திச் செல்ல முயன்ற 24 கோடி ரூபாயும் சிக்கியது.

இது தவிர, சென்னையில் இரு இடங்களில் இருந்து 37 கிலோ மற்றும் 13 கிலோ என 50 கிலோ தங்கம் சிக்கியுள்ளது. இதுவரை 131 கோடி ரொக்கப் பணம், 177 கிலோ தங்கக் கட்டி கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. செல்லாத நோட்டுகளுக்கு பதிலாக, 2,000 ரூபாய் நோட்டு களை மாற்றியது தொடர்பாக, சில பைனான்சி யர்களிடம் விசாரணை நடந்து வருகிறது, என்றனர்.

சி.பி.ஐ., விசாரணை!

வருமான வரித்துறையினர், சேகர் ரெட்டி தொடர்பான சோதனை தகவல்களை, சி.பி.ஐ., மற்றும் அமலாக்கப் பிரிவுஅதிகாரிகளிடம் பகிர்ந்துள்ளனர். வெளிநாட்டு பணப் பரிவர்த் தனை எதுவும் இருப்பதாக, இப்போதைக்கு தெரியவில்லை. அதனால் அமலாக்கப் பிரிவு தரப்பில், எந்த விசாரணையும் இல்லை. புதிய < ரூபாய் நோட்டுகள் சிக்கியிருப்பதால், வங்கி களின் தொடர்பு பற்றி சி.பி.ஐ., விசாரணை நடக்கிறது.

தனியார் வங்கிகள் தப்பாது!

சி.பி.ஐ., அதிகாரிகள் கூறியதாவது:வழக்கமாக, அரசு வங்கிகளின் பண மோசடிகளை மட்டுமே கையாள்வோம்.தனியார் வங்கிகளில், சோத னையிட மாட்டோம். சேகர் ரெட்டி வழக்கில், தனியார் வங்கிகளுக்கும் தொடர்பு இருக்க வாய்ப்பு உள்ளது. இது ரிசர்வ் வங்கி வெளியிட்ட 2,000 ரூபாய் நோட்டு பற்றிய விவகாரம் என்பதால் தனியார் வங்கியிலும் சோதனை நடத்த திட்டமிட்டுள் ளோம். அதற் காகவே சேகர் ரெட்டி பரிவர்த்தனை வைத்தி ருந்த வங்கிகளின் பட்டியலை பெற்றுள்ளோம், என்றனர்.

காரில் சிக்கிய ரூ.24 கோடி!

வேலுார் மாவட்டத்தில் உள்ள சேகர் ரெட்டி யின் பூர்வீக வீட்டுக்கு நேற்று காலை 5:00 மணிக்கு அதிகாரிகள் சென்றனர். அதை பார்த் ததும் அங்கிருந்து இரண்டு கார்கள் படுவேக மாக கிளம்பின; வருமான வரி அதிகாரிகள் விரட்டி பிடிக்க முயன்றனர். ரெட்டி கார்கள் ஆந்திர மாநிலம், சித்துார் நோக்கி பறந்தன. அதில் ஒரு காரை அதிகாரிகள் மடக்கிய போது டிரைவர் தப்பியோடி விட்டார். அந்த காரில் கட்டுக்கட்டாக புதிய, 2,000 ரூபாய் நோட்டு களாக 24 கோடி ரூபாய் இருந்தது.

திருப்பதி தேவஸ்தானம்: சேகர் ரெட்டி நீக்கம்

திருமலை-திருப்பதி தேவஸ்தான அறங்காவ லர் குழு உறுப்பினராக தமிழகத்தை சேர்ந்த தொழிலதிபர் சேகர் ரெட்டி 2014ல் ஆந்திர அரசால் நியமிக்கப்பட்டார். அவரின் வீடுகளில் வருமான வரித்துறையினர் சோதனை செய்து பல கோடி ரூபாய் ரொக்க பணம், தங்க கட்டி களை பறிமுதல் செய்து வருகின்றனர். இத னால் அறங்காவலர் குழு உறுப்பினர் பதவியில் இருந்து சேகர் ரெட்டியை ஆந்திர அரசு நீக்கி நேற்று உத்தரவிட்டது.

- நமது சிறப்பு நிருபர் - தினமலர,காம்

கருத்துகள் இல்லை: