திங்கள், 28 நவம்பர், 2016

இன்று நாடு தழுவிய ஆர்ப்பாட்டத்துக்கு அனைத்து எதிர்கட்சிகளும் அழைப்பு

புதுடெல்லி, மத்திய அரசு கருப்பு பணம் மற்றும் கள்ள நோட்டுகளை ஒழிப்பதற்காக 500, 1,000 ரூபாய் நோட்டுகளை செல்லாது என அறிவித்தது. இதைத் தொடர்ந்து நாடு முழுவதும் பணத்தட்டுப்பாடு ஏற்பட்டது. இதை கண்டித்து பாராளுமன்றத்தில் எதிர்க்கட்சிகள் குரல் கொடுத்தன. எதிர்க்கட்சிகளின் அமளி காரணமாக இரு அவைகளும் ஒரு வாரமாக முடங்கியது. பாராளுமன்றத்துக்கு வெளியே அனைத்து எதிர்க்கட்சி எம்.பி.க்களும் ஆர்ப்பாட்டம் நடத்தினார்கள். நாடு முழுவதும் இன்று எதிர்க்கட்சிகள் போராட்டம் நடத்துகின்றன. ஆனால், இந்த போராட்ட விஷயத்தில் எதிர்க்கட்சிகள் இடையே பிளவு ஏற்பட்டுள்ளது. ஆர்ப்பாட்டம் மட்டுமே நடைபெறும் என்றும் முழு அடைப்பு போராட்டம் இல்லை என்று பிரதான எதிர்க்கட்சியான காங்கிரஸ் தெரிவித்துள்ளது.
அதேபோல், ஆம் ஆத்மி, திரிணாமூல் காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகளும் நாடு முழுவதும் ஆர்ப்பாட்டம் நடைபெறும் என்று தெரிவித்துள்ளது. வங்கிகள் முன்பு ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இடது சாரிகள் முழு அடைப்புக்கு அழைப்பு விடுத்துள்ளன. போராட்டத்திற்கு ஆதரவு இல்லை என்று பீகார் முதல் மந்திரி நிதிஷ் குமார் தெரிவித்துள்ளார். ஆனால், இந்த நாடு தழுவிய போரட்டத்தால் பெரிய அளவில் பாதிப்பு இல்லை. கடைகள் வழக்கம் போல் திறந்து இருந்தன. வாகனங்களும் வழக்கம் போல் இயங்கின. கேரளா, மேற்கு வங்காளம், திரிபுரா போன்ற மாநிலங்களில் இடதுசாரிகள் முழு அடைபு போராட்டத்தால் ஓரளவு பாதிப்பு இருக்கும் என தெரிகிறது. தினத்தந்தி.காம்


கருத்துகள் இல்லை: