திங்கள், 18 ஏப்ரல், 2016

கலைஞரை எதிர்த்து போட்டியிட முத்தரசன் மறுப்பு....பாண்டியன் வற்புறுத்தல்....போயஸ் விசுவாசம்?

கலைஞரை எதிர்த்து போட்டியிட மறுத்த முத்தரசன் - காரசார விவாதம் செய்த தா.பாண்டியன் மக்கள் நலக்கூட்டணியில் உள்ள இந்திய கம்யூனிஸ்ட் கட்சிக்கு ஒதுக்கப்பட்டது.
திருவாரூர் தொகுதி. இந்த தொகுதியில்தான் திமுக தலைவர் கலைஞர் மீண்டும் போட்டி யிடுகிறார். இந்த தொகுதியில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பாக யாரை வேட்பாளராக களம் இறக்குவது என உட்பட கம்யூனிஸ்ட் கட்சிக்கு ஒதுக்கப்பட்ட 25 தொகுதிகளின் வேட்பாளர்களை முடிவு செய்ய இன்று இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் செயற்குழு மற்றும் நிர்வாகக்குழு சென்னையில் உள்ள அக்கட்சியின் தலைமை அலுவலகமான பாலன் இல்லத்தில் கூடியது.

கட்சியின் மூத்த தலைவரான தா.பாண்டியன் முன்னிலையில் நடைபெற்ற கூட்டத்தில் திருவாரூர் தொகுதியில் போட்டியிடுவது முன்னாள் முதல்வரான கலைஞர். ஆகவே, கட்சியின் முக்கிய நிர்வாகிகள்தான் அங்கு போட்டியிடவேண்டும் என்ற விவாதம் நடந்தது. இதில், மாநிலச்செயலாளரான முத்தரசன் போட்டியிட வேண்டும் என தோழர்கள் கூற, முத்தரசன் நான் தேர்தலில் போட்டியிடும் நிலையில் இல்லை. நான் திருவாரூர் தொகுதியில் போட்டியிட விருப்பம் இல்லை. ஆகவே எனது பெயர் கட்சியின் நிர்வாக கமிட்டியின் பரிசீலனையில் இருக்க வேண்டாம் என கேட்டுக்கொண்டார்.

அதைத்தொடர்ந்து மாநில நிர்வாகிகள் ஒரு மாநில செயலாளரே முக்கியமான தொகுதியில் போட்டியிட விருப்பம் இல்லை என சொல்லுவது சரியானது அல்ல. இந்த மக்கள் நலக்கூட்டணியை இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் அடிமட்ட தொண்டர்கள் வரை ஏற்கவில்லை.
இருப்பினும் கூட்டணி பயணத்தில் நீண்டதூரம் சென்றதால் இப்போதைய சூழலில் திருவாரூ மாவட்ட குழு பரிந்துரை செய்தததின் பேரில் கட்சியின் விவசாய அணிபொருப்பாளராக இருக்கும் மாசிலாமணியை வேட்பாளராக அறிவிப்பது என மாநில குழுவிற்கு பரிந்துரை செய்ய அதை ஏற்று நாளை நடைபெறும் மாநிலக்குழுவில் ஒப்புதல் பெற்று, திமுக தலைவர் கலைஞரை எதிர்த்து மக்கள் நலக்கூட்டணியின் சார்பில் போட்டியிடும் வேட்பாளர் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாசிலாமணி என அறிவிப்பு வருகிறது. -ஜீவாதங்கவேல் நக்கீரன்,இன்

கருத்துகள் இல்லை: