வருகிற சட்டசபை தேர்தலில் தேமுதிக தலைவர் விஜயகாந்த் உளுந்தூர்பேட்டை தொகுதியில் போட்டியிடுகிறார். அவரை தோற்கடிக்க பாமக ஏற்கனவே அந்த தொகுதியில் அறிவிக்கப்பட்ட வேட்பாளரை மாற்றி புதிய வேட்பாளரை அறிவித்துள்ளது.பாஜக கூட்டணியில் சேர்வதற்கு பாமக, தேமுதிக ஆகிய இரு கட்சிகள் வைத்த முக்கிய கோரிக்கை முதல்வர் வேட்பாளராக தங்களை அறிவிக்க வேண்டும் என்பதே. அதன்படி அன்புமணிக்கு போட்டியாக இருந்த விஜயகாந்தை இந்த தேர்தலில் தோற்கடிக்கவே பாமக விஜயகாந்த் போட்டியிடும் தொகுதியின் வேட்பாளரை மாற்றி பலம்வாய்ந்த வேட்பாளரை அங்கு அறிவித்துள்ளதாக பேசப்படுகிறது.
ஏற்கனவே உளுந்தூர்பேட்டை தொகுதிக்கு இரா.ராமமூர்த்தியை அறிவித்திருந்தது பாமக. தற்போது அவருக்கு பதிலாக சென்னை உயர்நீதிமன்ற வழக்கறிஞரும், பாமக செய்தித் தொடர்பாளரும், பாமக வழக்கறிஞர் பிரிவு தலைவருமான க.பாலுவை அறிவித்துள்ளனர. வழக்கறிஞர் பாலுவுக்கும் தருமபுரி இளவரசனின் மரணத்தும் நெருங்கிய தொடர்பு இருக்கிறதா?. வழக்கறிஞராக இளவரசனிடம் இருந்து அவருடைய மனைவி திவ்யாவை பிரித்த பெருமை இவரைச் சேருமா? கேள்விகள் கேள்விகள்...
க.பாலு பாமக சார்பில் தொலைக்காட்சி விவாதங்களில் பங்கேற்பவர். அந்த கட்சியில் முக்கிய தலைவர்களில் க.பாலுவும் ஒருவர்.
கா.பாலுவை கையிலெடுத்து உளுந்தூர்பேட்டையில் களமிறக்கி விஜயகாந்தை வீழ்த்த திட்டமிட்டுள்ளது பாமக.கடந்த இரண்டு தேர்தல்களிலும் பாமக செல்வாக்குமிக்க தொகுதிகளில் போட்டியிட்டு வெற்றி பெற்ற விஜயகாந்தை இந்த முறை தோல்வியை சந்திக்க வைக்க வேண்டும் என்பதில் பாமக உறுதியாக உள்ளதாக அரசியல் வட்டாரத்தில் பேசப்படுகிறது. வெப்துனியா.com
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக