1-balakrishnan- coimbatore,இந்தியா
இதெல்லாம் ஆணவத்தின் உச்சகட்டம், வெயிலின் தாக்கம் எந்த அளவிற்கு உள்ளது
என்பதெல்லாம் இந்த அம்மாவிற்கு தெரியாதா, இப்படி நாம் மக்களை பாடு
படுத்தக்கூடாது என்பது அந்த அம்மாவிற்கு புரியாதா, இப்படி செய்வதால் எந்த
அளவிற்கு பயன் ஏற்படப்போகிறது, ஏதோ ஒரு செயற்கை தன்மை தான் இவர்களின்
கூட்டத்தில் தெரிகிறது, என்ன தான் பிரச்சாரம் செய்தாலும் ஆட்சிக்காலத்தில்
ஆட்சியின் பயனை மக்கள் பெற்றிருந்தால் மட்டுமே வாக்கு கிடைக்கும், ஒரே
மாதிரி பிரச்சார பாணி, மக்களை சோர்வடைய செய்கிறது, மேலும் இப்படி மக்களை
வாட்டி வதைப்பது எதிர்மறை வினையை தான் ஏற்படுத்தும், இந்த தேர்தலில் மக்கள்
நிச்சயம் தோல்வியை கொடுக்க வேண்டும் அப்போது தான் அரசியலில் மக்கள் என்ன
முடிவு வேண்டுமானாலும் எடுப்பார்கள் என்ற பயம் அரசியல்வாதிகளுக்கு
ஏற்ப்படும்
2-இளங்கோ - chennai,இந்தியா எள் தான் எண்ணைக்கு காயும் என்று சொல்வார்கள். ஆனால் இங்கோ மக்கள் தான் எலி புழுக்கைகளாக காய்ந்து கொண்டிருக்கிறார்கள். அதுவும் கீறல் விழுந்த ரெக்கார்டாக ஒலிக்கும் பேச்சை கேட்க.
3-Rameeparithi - Bangalore,இந்தியா iநான் எப்பவுமே சுகவாசியாய் இருக்க நீங்க வெயில், மழை, வெள்ளம் இப்படி எல்லா இன்னல்களையும் சந்தித்து என்னை வெற்றி பெறச் செய்வீர்கள் என்பது எனக்கு நல்லாவே தெரியும், நான் என் அரசு எங்களை அப்படியே வைத்திருப்பதில் முன்னோடிகள்
4- T.PalaniAiyar - melborn,ஆஸ்திரேலியா ஐயர்: இதுபோன்ற அல்ப காரணங்களுக்காக அம்மாவை குறை சொல்லி ஒதுக்கிவிட்டு, சனி பகவான்களை உள்ளே விடுமளவு தமிழர்கள் முட்டாள்களில்லை..
4- g k - chennai g k தமிழில் அம்மா என்ற வார்த்தைக்கு உள்ள கனம் வேறு எந்த வார்த்தைக்கும் இல்லை அதை மலினமாக்கி விட்டார்கள் இப்போது தவ வாழ்க்கை என்ற வார்த்தையும் மலினமாகி விட்டது இனி இது போன்ற வார்த்தைகளைக் கேட்கும்போது சிறிது எரிச்சலாகத்தான் வரும்
5-
Appavi Tamilan - London,யுனைடெட் கிங்டம் இந்த நிலைதான் அதிமுக ஆட்சியின் அவலநிலைக்கு கிடைத்த மக்களின் பதிலடி. 5 ஆண்டுகால அராஜக ஆட்சியில் சிக்கி நொந்துபோன மக்களிடம் தற்போது வந்து அதை செய்தேன், இதை நிறைவேற்றினேன் என்று புளுகு மூட்டையை அவிழ்த்துவிட்டு மக்களை முட்டாளாக்க முயல்வதை அதிமுகவினரே ரசிக்கவில்லை என்பதுதான் எதார்த்தம். ஏதாவது உருப்படியாக செய்திருந்தால் மக்களிடம் சொல்லலாம். கட்சியில் இதற்கெண்டு அமைக்கப்பட்ட 11 பேர் கொண்டு குழுவால் வேறு என்ன புதிதாக எழுதிக்கொடுக்க முடியும்??? மக்கள் வரிப்பணத்தை வீணடித்து ஹெலிகாப்டரில் பறந்துவந்து, மக்களிடம் இருந்து பல நூறு மீட்டர்கள் தள்ளி எசிக்கள் நடுவில் அமர்ந்து உங்களுக்காக தவ வாழ்வு வாழ்கிறேன் என்று நீலிக்கண்ணீர் வடித்தால் அதை நம்ப தமிழக மக்கள் என்ன முட்டாள்களா??? மதுவிலக்கை எதிர்த்து போராடியவர்களை அடித்து நொறுக்கி கைது செய்தும், தேச துரோக வழக்கு போட்டும் வெறியாட்டம் ஆடிவிட்டும், மறுபுறம் சட்டமன்றத்தில் மதுவிலக்கு சாத்தியமே இல்லை, அமெரிக்காவில் மதுவிலக்கு வந்தால், ஐரோப்பாவில் மதுக்கடைகளை மூடினால், தமிழகத்திலும் மதுக்கடைகளை மூடுவோம் என்று கொக்கரித்து விட்டும், தற்போது தோல்வி பயத்தில் படிப்படியாக, டம்ளர் டம்ளராக மதுவிலக்கு என்று சொன்னால் யார் ஏமாறுவார்கள். காசு கொடுத்து அழைத்தால் கூட கூட்டத்திற்கு யாரும் வருவதில்லை என்றால் மக்களுக்கு இப்போதாவது இந்த ஊழல் ஆட்சி ஒழிய வேண்டும் என்ற எண்ணம் வந்துவிட்டுபோல நம்பிக்கை வருகிறது. வாக்கு சேகரிக்க செல்லும் வேட்பாளர்களை மக்கள் நாக்கை பிடுங்கிக்கொள்ளும் விதமாக கேள்வி கேட்டு விரட்டி அடிப்பதைக்கண்டு அதிமுகவினர் நடுங்கிப்போய் உள்ளனர். மற்ற கட்சி தலைவர்கள் வெயில் குறைந்த மாலை நேரத்தில் மக்களோடு மக்களாக கலந்து அதிமுக ஆட்சியின் ஊழல்களை தெளிவாக எடுத்துரைத்து பரப்புரை செய்கிறனர். ஆனால் கோடி கோடியாக அடிமட்ட நிர்வாகி வரை கொள்ளை அடித்து விட்டு, வரலாறு காணாது வன்முறைகள், சாதி கலவரங்களை கண்டுகொள்ளாமல் இருந்துவிட்டு, நீதிமன்றம் பலமுறை இடித்துரைத்தும் டாஸ்மாக் கடைகளை அகற்றாமல் இருந்து, வெள்ளம் வந்தபோதும் டாஸ்மாக் கடைகளை திறந்து வைத்தும் கொடுங்கோல் ஆட்சி செய்த அதிமுகவால் மக்களை எப்படி சந்தித்து வாக்கு கேட்க முடியும்??? அண்ணா நூலகத்தை நீதிமன்றமே பராமரிக்கும் என்று இடித்துரைத்தது முதல் பல வகையிலான நீதிமன்ற கண்டனங்களை இந்த அதிமுக அரசு பெற்றது எப்படிப்பட்ட் கேவலம்?? சட்டத்தால் அதை மீறி ஒன்று செய்ய முடியாது என்றாலும், மக்களுக்கு அதன் பொருள் விளங்கிவிட்டது. எது எப்படி இருந்தாலும் இந்த முறை விஷ இலை மலராது என்பது திண்ணம்.
இது ஒரு சாம்பிள்தான் இதுபோன்ற நூற்றுகணக்கான கடிதங்கள் நமக்கு வந்துள்ளன. தினமலர்.com
இந்தக் கொடுமையை என்னன்னு சொல்லுறது? முளைப்பாரின்னா கோயிலுக்கு நேர்த்திக்கடன் போட்டு வளர்ப்பாங்க. ஆனா இங்கே 1000 ரூபாய்க்காக முளைப்பாரி எடுத்துட்டு வர்றாங்க.. சினிமாவுல கும்பலா வர்ற காட்சிக்காக எட்டு மணி நேர கால்ஷீட்டுக்கு ரூ.350/-ன்னு பேசி துணை நடிகர்களைக் கூட்டிட்டு வருவாங்கள்ல... அ.தி.மு.க. கூட்டத்துக்கு ஆளு சேர்க்கிறதும் அதுமாதிரி ஆயிப்போச்சு'' என்று அவர் அடுக்கிக் கொண்டே போக, நாம் இடை மறித்தோம். "தமிழகத்தில் வாக்கு வங்கி அதிகம் உள்ள கட்சி அ.தி.மு.க. ஆளும் கட்சியும் அதுதான். எம்.ஜி.ஆர். சின்னமான இரட்டை இலை வாக்காளர்கள் அல்லவா இவர்கள்?" என்றோம். அவரோ, "ராத்திரி முழுக்க ரோட்டுல படுத்துக் கிடந்து எம்.ஜி.ஆரைப் பார்த்த காலம் வேற. ஜெயலலிதா என்ன எம்.ஜி.ஆரா? நான் சொல்லுறதுல உங்களுக்கு சந்தேகமா இருந்தா... இந்தக் கூட்டத்துல யாரை வேணும்னாலும் விசாரிங்க. பொய் சொல்லத் தெரியாத அப்பாவி ஜனங்க உண்மை யைத்தான் சொல்லுவாங்க" என்றார் அத்தனை உறுதியுடன். அதே ஸ்பாட்டில் நாம் சந்தித்த பட்டாசு ஆலை சூப்பர்வைசர் ஒருவர் "இங்கே வந்திருக்கிறதுல பாதி பேரு பட்டாசுத் தொழிலாளர்கள்'" என்று அவரும் ஒரு விஷயத்தைச் சொன்னார்.
"சி.எம்.வர்றாங்க... பட்டாசு ஃபேக்டரில நீங்க வேலை வச்சீங்கன்னா, கூட்டத்துக்கு ஆளு வராது. சம்பளம் கொடுத்து எல்லாருக்கும் லீவு விட்ருங்க.. ஃபேக்டரில வேலை வைப்போம்னு நீங்க முரண்டு பிடிச்சா நல்லா இருக்காது. சி.எம். இந்த ஊருல பிரச்சாரம் பண்ணிக்கிட்டிருக்கிற நேரத்துல ஏதாச்சும் ஒரு ஃபேக்டரில ஆக்சிடென்ட் ஆகி பெரிய அளவுல உயிர்ச் சேதம் எதுவும் ஏற்பட்டுச்சுன்னு வச்சுக்கங்க... அப்புறம் இந்த ஊருல பட்டாசுத் தொழிலே நீங்க நடத்த முடியாதுன்னு ஆளும்கட்சிக்காரங்க எங்களை மிரட்டிட்டாங்க" என்றார்.
பிரசார கூட்டத்தில் பங்கேற்க வந்த அதிமுக தொண்டர்களுக்கு பிரியாணி பொட்டலங்கள் வழங்கப்பட்டன. போக்குவரத்து நெருக்கடியால் மக்கள் கடும் சிரமத்துக்கு ஆளாகினர். அனைவரையும் அதிமுகவினர் திரட்டினர். பிரசாரத்துக்கு வருபவர்களுக்கு காலையில் டிபனும், மதியம் பிரியாணி, புளிசாதம், எலுமிச்சம் சாதம், தக்காளி சாதம் பொட்டலங்கள் தயார் செய்யப்பட்டன. ஒவ்வொருவருக்கும் ஒரு குவார்ட்டர் பாட்டிலும் வழங்கப்பட்டது.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக