ஞாயிறு, 17 ஏப்ரல், 2016

ஆர்.கே.நகரில் திருமாவளவன் பொது வேட்பாளராக போட்டியிட்டால் வெற்றி நிச்சயம்! சமுகநீதிக்கு வெற்றி!

mathimaran.wordpress.com :ஆர்.கே. நகர் வேட்பாளராக முதல்வர் ஜெயலலிதாவை எதிர்த்து விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன்
நின்றால், அது சமூகநீதி அரசியலின் மிக முக்கியமான ஒரு பாய்ச்சல். அவர் வெற்றி பெற்றால், இந்தியாவிற்கே வழி தமிழகம் காட்டும். முதல் சிறப்பு. பொதுத் தொகுதியில் தலித் வேட்பாளர். இரண்டாவது அதுவும் ஒரு தலித் தலைவர். மூன்றாவது முதல்வர், மிகப் பெரிய கட்சியின் தலைவரை எதிர்த்து ஒரு தலித் தலைவர் வெற்றிபெற்றார் என்பது. திருமா நின்றால், திமுக தனது வேட்பாளரை பின்வாங்கி, அவரை ஆதரிப்பது ஒரு சமூகநீதி கடமை. மண்ணின் மைந்தன் கோரிக்கை பேசுகிற தமிழ்தேசியவாதிகள், தலித் கட்சிகள், திராவிட இயக்கங்கள் ஒட்டுமொத்தமாகத் திருமாவளவனை ஆதரிப்பதுதான் அவர்கள் பேசுகிற அரசியலுக்கு ஆதாரம். முதலில், விசிக தலைவர் திருமாவளவனை ஆர்.கே. நகரில் கட்டாயம் நிற்கச்சொல்லி அவருக்கு நெருக்கமானவர்கள் நிர்பந்தியுங்களேன் .

* *
நான் எழுதியதற்குப் பிறகு பதட்டமைந்து சிலர்,
‘ஆர்.கே.நகரில் திருமா நிற்கவேண்டாம். ஜெயலலிதா அவரை தோற்கடித்துவிடுவார்’ என்று சென்டிமெண்ட் வசனம் எழுதுகிறார்கள்.
திருமா மேல் கரிசனம் தெரிந்தாலும்..
இந்த அவசர அன்பில் ஒரு பதட்டம் இருப்பதை உணரலாம்.
மநகூ வை தீவிராமக ஆதரிப்பதாக நடிக்கிற அதிமுக அபிபானிகளின் திருமா மீதான கரிசனத்திற்குப் பின் இருப்பது, ‘ஜெயலலிதா தோற்றுவிடக்கூடாது’ என்ற கவலை தான்.
திருமா நின்று, திமுக வாபஸ் பெற்றால் ஜெயலலிதாவின் தோல்வி உறுதி. திருமாவின் அந்த வெற்றி இந்தியளவில் கொண்டாடப்படும் மாபெரும் வெற்றி.
* *
மநகூ ஜெயலலிதாவின் பினாமி என்ற பிரச்சாரத்தை தகர்ப்பதற்கும்,
திமுக வன்னியர் ஓட்டை பெறுவதற்கு தான், திருமா வை கழட்டி விட்டது என்ற குற்றசாட்டை மறுப்பதற்கும் அரிய வாய்ப்பு,
திருமா; ஜெயலலிதாவை எதிர்த்து நிற்பதும் அவரை திமுக ஆதரிப்பதும்.

கருத்துகள் இல்லை: