வெள்ளி, 16 அக்டோபர், 2015

மன்சூர் அலிகான் : பெப்ஸிக்கு போட்டியாக என் டாப்ஸி?... நினைக்கிறார்கள்.

கதை, திரைக்கதை, வசனம், பாடல்கள் எழுதி இசையமைத்து அந்த பாடலை பாடி ஒரு ஆல் இன் ஆல் அழகுராஜாவாக “அதிரடி” திரைப்படத்தில் வேலை செய்திருக்கிறார். இத்திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா நேற்று(05.10.15) நடைபெற்றது. இவ்விழாவில் நடிகர் செந்திர், நாசர், ஆர் சௌந்தரராஜன் உட்பட பலர் கலந்துகொண்டனர். எத்தனை பேர் இருந்தாலும் ஒரே ஆளாக இருந்துகொண்டு விழாவை கலகலப்பாகவும், கடுப்பாகவும் நடத்தி முடித்தார் மன்சூர் அலிகான். சிறப்பு விருந்தினர்களை பேசச் சொல்லிவிட்டு குறுக்கே புகுந்து பேசி பேசி அவர்களையே கடுப்பாக்கியது குறிப்பிடத்தக்கது.
மன்சூர் அலிகான்; இந்த படம் குடிபழக்கத்தால் ஏற்படும் பிரச்சனைகளை இந்த படத்தில் சொல்லி இருக்கிறோம். குடிக்கக் கூடாது என்ற விழிப்புணர்வை ஏற்படுத்தும் படமாக இது உருவாகி இருக்கிறது. இந்த படத்தினுடைய இசை வெளியீடு விழாவிற்கு தயாரிப்பாளர் சங்கத்திற்கு, நடிகர் சங்கத்திற்கு அழைப்பு கடிதம் கொடுத்தேன். ஆனால் யாரும் வரவில்லை எனக்கு இதனால் வருத்தம் ஏதும் இல்லை.

பெப்ஸிக்கு போட்டியாக என் டாப்ஸி சங்கம் துவங்கியிருப்பதாக நினைக்கிறார்கள். மற்ற சங்கத்தில் சேர்வதற்கு லட்சங்கள் வரை வாங்குகிறார்கள். நான் 2 ஆயிரம் ரூபாய் வாங்கிக் கொண்டு உறுப்பினர்களாக சேர்க்கிறேன்.
என் படத்தில் நடித்தவர்களுக்கு தினமும் சூட்டிங் முடிந்ததும் சம்பளம் உண்டு. சினிமா யாருக்கும் நிரந்தரம் இல்லை. எம்.ஜி.ஆர்., சிவாஜி வந்தார்கள். இன்று அவர்கள் இல்லை. நாளை நானும் இருப்பேனா என்று தெரியாது” என்று வழக்கம்போல பேசினார். நடிகர் நாசர் இந்த நிகழ்ச்சியில் கலந்துக்கொண்டு பேசும் போது ”என்னை ஒரு படத்தில் அவரைப்போலவே நடிக்கச் சொன்னார்கள். என்னால் நடிக்க முடிய வில்லை. நான் இயக்குனரிடம் அவரைப்போல நடிக்க என்னால் முடியாது என்று சொல்லிவிட்டேன். அந்த அளவிற்கு தனி பாணியை கொண்ட நடிகர் மன்சூர் அலிகான்” என்று புகழ்ந்து பேசினார். nakkheeran.in

கருத்துகள் இல்லை: