வெள்ளி, 3 ஏப்ரல், 2015

கற்பழிப்பு குற்றவாளியை விட கிரிராஜ்சிங் சிறந்தவர் அல்ல! Lesley Udwin


கற்பழிப்பு குற்றவாளியை விட மத்திய மந்திரி சிறந்தவர் அல்ல என்று மாணவி கற்பழிப்பு பட இயக்குனர் கூறினார்.
மத்திய மந்திரி கிரிராஜ்சிங் காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியின் நிறம் பற்றி குறிப்பிட்டு இருந்தார். வெள்ளை நிறத்தில் இருக்கும் சோனியாவை ராஜீவ் திருமணம் செய்ததால் தான் அவரை காங்கிரசார் தலைவராக்கி இருக்கிறார்கள் என்று குறிப்பிட்டார்.
இது காங்கிரசார் மத்தியில் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தி உள்ளது. டெல்லி, மும்பை, பெங்களூர், பாட்னா, ஜம்மு நகரங்களில் மகளிர் காங்கிரசார் கிரிராஜ்சிங்கை கண்டித்து போராட்டம் நடத்தினார்கள். அவரை மந்திரி பதவியில் இருந்து நீக்க வேண்டும் என்று கோரி வருகிறார்கள்.

இதற்கிடையே டெல்லி மாணவி கற்பழிப்பு சம்பவத்தை பின்னணியாக கொண்டு குறும்படம் எடுத்த இங்கிலாந்து சினிமா தயாரிப்பாளர் லெஸ்லி உத்வினிடம், கிரிராஜ்சிங் கூறியது பற்றி கருத்து கேட்ட போது அவர் கூறியதாவது:–
அவரது கருத்து உண்மையில் என்னை பாதிப்படைய செய்கிறது. நான் எடுத்த குறும்படத்தில் கற்பழிப்பு குற்றவாளிகளுக்கு ஆதரவு அளிப்பதாக பாசாங்குத்தனமான ஒரு குழப்பமான கருத்துகள் தெரிவிக்கப்பட்டது. ஆனால் பல வருடங்களாக இந்திய பாராளுமன்றத்தில் மனிதர்களைப் பற்றி விமர்சனம் செய்யப்படுகிறது. இது மிகவும் மோசமானது. கற்பழிப்பு குற்றவாளி தெரிவித்த கருத்துக்களை விட இது மோசமானது. எனவே அவர் (கிரிராஜ் சிங்) கற்பழிப்பு குற்றவாளியை விட சிறந்தவர் அல்ல.
அவரை பதவி நீக்கம் செய்ய வேண்டும் என்று கூறுகிறார்கள். இந்த விஷயத்தில் நாம் இங்கு பிரச்சினையை புரிந்து கொள்ள வேண்டும். என்னைப் பொறுத்தவரையில் இதுபோன்ற கருத்து சொல்பவர்களை அலுவலகத்தில் இருந்தும், அதிகாரத்தில் இருந்தும் நீக்க வேண்டும்.
இவ்வாறு லெஸ்லி உத்வின் கூறினார். maalaimalar.com

கருத்துகள் இல்லை: