காரை நான்தான் ஓட்டினேன்! சல்மான் டிரைவர் கோர்ட்டில் வாக்குமூலம்! இந்தி
நடிகர் சல்மான் கான் 2002ம் ஆண்டில் பாந்திரா பகுதியில் காரை வேகமாக ஓட்டி
சென்றதில் சாலையோரம் படுத்து தூங்கியவர்கள் மீது அவரது கார் ஏறியது. இதில்
ஒருவர் பலியானார். மேலும் 4 பேர் காயம் அடைந்தனர். இந்த சம்பவம் தொடர்பாக
போலீசார் சாதாரண விபத்து வழக்கு பதிவு செய்து மும்பை மாஜிஸ்திரேட்டு
கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தனர்.ஆனால், இது கொலை அல்லாத மரணத்தை விளைவிக்க
கூடிய தீவிரமான குற்றம் என்று மாஜிஸ்திரேட்டு கோர்ட்டு கருதியது. இதனால்
கடந்த ஆண்டு இந்த வழக்கு மும்பை செசன்சு கோர்ட்டுக்கு மாற்றப்பட்டது. 10
ஆண்டுகள் வரை சிறை தண்டனை விதிக்க கூடிய பிரிவுகளில் சல்மான் கான் மீது
வழக்கு விசாரணை நடைபெற்று வருகிறது.இந்த
நிலையில் கடந்த வெள்ளிக்கிழமை இந்த வழக்கில் சல்மான் கான் தனது
வாக்குமூலத்தை பதிவு செய்தார். நான் குடிக்கவில்லை. விபத்து நடக்கும் போது
நான் காரை ஓட்டவில்லை. எனது ஓட்டுனர் அசோக் சிங் காரை ஓட்டினார் என்றார்.
மேலும், தன் மீது நீதிமன்றத்தின் முன் வைக்கபப்ட்டுள்ள அனைத்து
குற்றச்சாட்டுக்களும் தவறானது என்றார் . இப்போது தான் பேரம் படிந்தது ? பக்கா சினிமா வில்லத்தனம் ஏழையை காரை ஏற்றி கொன்றுவிட்டு டிரைவரை காசு கொடுத்து பொய்சாட்சி சொல்ல வைத்து ....திருந்தவே மாட்டாங்க!இவனுக்கு சீக்கிரம் பத்ம பட்டங்களும் கிடைக்கலாம் யார் கண்டா?
இந்தநிலையில்
இந்த வழக்கில் நீதிமன்றத்தில் திங்கட்கிழமை வாக்குமூலம் அளித்த சல்மான்
கானின் கார் ஓட்டுநர் அசோக் சிங், காரை தானே ஓட்டிவந்ததாகக் கூறினார்.
இதுகுறித்து
சிறப்பு அரசு வழக்கறிஞர் பிரதீப் காரத் பத்திரிக்கை ஒன்றுக்கு அளித்த
பேட்டியில், "இத்தனைகால விசாரணை காலக்கட்டத்தில் எந்த ஒரு நிலையிலும் அரசு
தரப்போ, குற்றம் சாட்டப்பட்டவர் தரப்போ காரை ஓட்டுநர் அசோக் சிங் ஓட்டினார்
என்று கூறவில்லை. அசோக் சிங் பற்றி ஒரேயொரு சிறு குறிப்பு மட்டுமே
கோர்ட்டில் கூறப்பட்டது. அதாவது அவர் பகலில்தான் சல்மான் கானுக்கு கார்
ஓட்டுவார் என்பதே அது. இரவில் அவர் காரை ஓட்டியதாக வழக்கின் எந்த நாளிலும்
குறிப்பிடப்படவில்லை" என்றார்.
குறுக்கு
விசாரணையில், குற்றத்தை ஏற்க பணம் கொடுக்கப்பட்டதா என்று அசோக் சிங்கிடம்
கேட்கப்பட்டது. ஆனால் அசோக் சிங் இதனை கடுமையாக மறுத்தார்.
நீதிமன்ற
நடைமுறைகள் தனக்குத் தெரியாது என்றும் அதனால்தான் முன்னதாக இந்த வழக்கில்
ஆஜராகி உண்மையைக் கூறவில்லை என்று அசோக் சிங் நீதிபதியிடம் தெரிவித்தார்.
சம்பவம்
நடந்த இடத்தில் தான் 5 முதல் 8 நிமிடங்கள் வரை இருந்ததாக அசோக் சிங்
குறிப்பிட்டார். சல்மான் கான் தந்தையே தன்னை கோர்ட்டில் ஆஜராகி உண்மையைக்
கூறுமாறு தன்னிடம் கூறியதாக அசோக் சிங் நீதிமன்றத்தில் தெரிவித்தார். nakkheeran.in
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக