தமிழகத்தில் பறிபோகும் கருத்துச்சுதந்திரம் :
சென்னையில் பத்திரிகைகள் மீதே அவதூறு வழக்குகள் பதிவு செய்யும் அளவிற்கு தமிழகத்தில் கருத்து சுதந்திரம் முற்றிலும் முடக்கப்பட்டிருப்பதாக திமுக பொருளாளர் மு.க.ஸ்டாலின் குற்றம் சாட்டினார்.
மாற்றத்திற்கான ஊடகவியலாளர்கள் மையம் சார்பில் சென்னையில் இன்று கருத்து சுதந்திர ஒடுக்குமுறைகளுக்கு எதிரான கண்டன கூட்டம் நடைபெற்றது.
இதில் கலந்துகொண்டு பேசிய மு.க.ஸ்டாலின், ‘’அதிமுக ஆட்சிக்கு வரும்போதெல்லாம் கருத்துச்சுதந்திரம் முற்றிலும் முடக்கப்படுகிறது. அரசின் நிறை குறைகளை எடுத்துக்கூறுவது பத்திரிகையாளர்களின் கடமை. எதிர்க்கட்சியினர் மீது மட்டுமன்றி, ஊடகவியலாளர்கள் மீதும் அவதூறு வழக்குகள் தொடரும் அவலம் இருக்கும் அளவிற்கு அதிமுக ஆட்சியில் கருத்து சுதந்திரம் முடக்கப்பட்டுள்ளது’’என்று குற்றம் சாட்டினார்.
அவர் மேலும், ‘’எழுத்துரிமை, பேச்சுரிமைகளுக்கெல்லாம் முதல் முதலாக மாபெரும் போராட்டங்களை நடத்தியது திமுக.
கருத்து சுதந்திரத்தை பாதுகாக்க திமுக தொடர்ந்து பாடுபடும்’’என்று தெரிவித்தார்.. இந்த நிகழ்ச்சிகளை பேசிய காங்கிரஸ் கட்சியின் தமிழ்மாநில தலைவர் ஈவிகேஎஸ் இளங்கோவன், மார்க்சிஸ்ட் மாநிலத்தலைவர் ஜி.ராமகிருஷ்ணன் உள்ளிட்டோரும் இதே கருத்தை வலியுறுத்தினர். இந்த நிகழ்ச்சியில் புதிய தமிழகம் கட்சியின் தலைவர் டாக்டர் கிருஷ்ணசாமி, விடுதலை சிறுத்தைகள் கட்சியின் பொதுச்செயலாளர் ரவிக்குமார், மதிமுக மல்லை சத்யா, எஸ்.டி.பி.ஐ. , மமக ஜாவாஹிருல்லா, காங்கிரஸ் சட்டமன்ற உறுப்பினர் விஜயதாரணி, உட்பட பலரும் பங்கேற்றனர்.nakkheeran.in

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக