திங்கள், 30 மார்ச், 2015

கொம்பன் ! நாடார், பள்ளர், பறையர், மறவர் சமுதாயங்களுக்கிடையே ஜாதிய வன்முறையை தூண்டுகிறதா? நீதிபதி கேள்வி!


கார்த்தியின் ‘கொம்பன்‘ பட கதைக்கு எதிர்ப்பு கிளம்பி உள்ளதுடன் தலைப்புக்கும் எதிர்ப்பு எழுந்துள்ளது. குறிப்பிட்ட ஜாதியை குறிப்பிடுவதாக இதன் கதை அமைக்கப்பட்டிருப்பதால் தென் மாவட்டங்களில் ஜாதி மோதல் ஏற்பட வாய்ப்புள்ளதாக புதிய தமிழகம் கட்சி தலைவர் டாக்டர் கிருஷ்ணசாமி எதிர்ப்பு தெரிவித்திருந்ததுடன் இப்படத்துக்கு தணிக்கை சான்றிதழ் வழங்கக்கூடாது என தணிக்கை குழுவினருக்கு கடிதம் எழுதி இருந்தார்.வரும் 2ம் தேதி இப்படம் திரைக்கு வருவதாக அறிவிப்பு வெளியாகியிருப்பதால்,  இப்படத்தை தடை செய்ய செய்யக்கோரி கிருஷ்ணசாமி மதுரை கோர்ட்டில் நேற்று முன் தினம் மனு தாக்கல் செய்தார்.  அவசர மனுவாக இதை எடுத்து விசாரணை செய்ய வேண்டும் என்று கோரினார். 


இதையடுத்து இன்று இந்த மனு விசாரணைக்கு வந்தது.  அப்போது கிருஷ்ணசாமி தரப்பு,  ‘’இந்தப்பம் வெளியானால் தென்மாவட்டங்களில் சாதிக்கலவரம் ஏற்படும்’’என்று தெரிவித்தார்.

அரசு தரப்பு வழக்கறிஞரோ, ‘’அப்படி எதுவும் நிகழாது’’ என்று குறிப்பிட்டார்.

உடனே நீதிபதி தமிழ்வாணன்,  ‘’சாதிக்கலவரம் வராது என்பதை உறுதியாக சொல்ல முடியுமா?’’ என்று அரசு வழக்கறிஞரிடமும், காவல்துறையினரிடமும் கேட்டார்.  இதற்கு உடனே பதிலளிக்க வேண்டும்.  பிற்பகலில் பதில் வந்தபிறகு தீர்ப்பு கூறப்படும் என்றார்.

இன்று மதியம் நீதிபதியின் தீர்ப்பில், திட்டமிட்டபடி ‘கொம்பன் ரிலீசாகுமா? இல்லை தடை செய்யப்படுமா? என்பது தெரியவரும்.


கொம்பன் படத்துக்கு தடைக்கேட்டு தமிழ்நாடு நாடார் சங்கம் முதல்வருக்கு அனுப்பிய மனு விபரம் :  ‘’சுதந்திர போராட்ட தியாகி, வாய்ப்பூட்டு சட்ட வீரர், பேரையூர் வேலுச்சாமி நாடாரைக் களங்கப்படுத்தும் காட்சிகள் நடிகர் கார்த்தி நடித்து முத்தையா இயக்கி வெளிவரவுள்ள 'கொம்பன்' திரைப்படத்தில் உள்ளதாகவும் முதுகுளத்தூர் கலவர பின்னணியில் இப்படத்தின் கதைக்களம் அமைந்து உள்ளதாகவும் வார இருமுறை இதழ்களில் செய்திகள் வந்துள்ளன.

தனது சமுதாயத்திற்கு எவ்வித பாதிப்பும் இல்லாத ரேகைசட்டம் (எ) படுக்கை சட்டத்தின் கொடுமைக்கு ஆளான மிகவும் பிற்ப்படுத்தப்பட்ட மக்களுக்காக தனது சமுதாய மக்கள் ஏழாயிரம் பேரை திரட்டி போராடி வாய்ப்பூட்டு சட்டத்திற்கு ஆளானவர் வீரர் வேலுச்சாமி நாடார். இக்கூட்டத்தில் கலந்து கொண்டதால் முதுகுளத்தூர் தாலுக்கா காங்கிரஸ் தலைவர் முத்துராமலிங்கதேவருக்கும் வாய்ப்பூட்டு சட்டம் போடப்பட்டது.

'கொம்பன்’ பட இயக்குநர் வீரர் வேலுச்சாமி நாடாரின் தியாகத்தை புரிந்து கொள்ளாமல் முதுகுளத்தூர் கலவரத்திற்கு அவர்தான் காரணம் என்பது போல் காட்சிகள் வைத்திருப்பதை ஏற்று கொள்ள முடியாது. இது போன்ற காட்சிகளுடன் 'கொம்பன்' திரைப்படம் திரையிடப்பட்டால் தென் தமிழகத்தில் ஜாதிய மோதல்கள் உருவாக வாய்ப்பு உள்ளது.

படத்தின் தலைப்பே (ஆப்பநாட்டு மறவன்) ’கொம்பன்’ என்கின்ற பெயரில் வன்முறையை தூண்டும் விதமாக அமைந்து உள்ளது. நாடார், பள்ளர், பறையர், மறவர் சமுதாயங்களுக்கிடையே இது மிகப்பெரிய ஜாதிய வன்முறையை தூண்டும் வகையில் அமைந்து உள்ளது.

கடந்த 6 மாதங்களில் தென்மாவட்டங்களில் ஜாதிய மோதல்கள் காரணமாக 50க்கும் மேற்பட்டோர் படுகொலைகள் செய்யப்பட்டுள்ளனர். இந்தச் சமயத்தில் 'கொம்பன்' திரைப்படத்தை திரையிட்டால் எரிகின்ற தீயில் எண்ணெய் வார்த்தது போல கலவரம் மேலும் அதிகரிக்க வாய்ப்புள்ளது.

எனவே தென் மாவட்டங்களில் ஜாதி கலவரங்களை தூண்டும் 'கொம்பன்' திரைப்படத்தை தடை செய்து அமைதியை நிலைநாட்டிட தமிழக அரசை தமிழ்நாடு நாடார் சங்கம் கேட்டுக் கொள்கிறது’’

2 கருத்துகள்:

Unknown சொன்னது…

A film should be seen as a entertainment subject , no need for logic.

Radha manohar சொன்னது…

A film is not just a entertainment subject. I strongly believe that film is a major cause for violence and sex crimes. Its simply desensitizing the gravity of crimes and glorifying caste divisions .