சென்னை: தமிழக சட்டசபைக்கு வரும் டிசம்பரிலேயே தேர்தல் நடைபெற
வாய்ப்புள்ளதாக அரசியல் வட்டார தகவல்கள் தெரிவிக்கின்றன.
தமிழக சட்டசபைக்கு 2016ஆம் ஆண்டு தேர்தல் நடைபெற வேண்டும். ஆனால் ஆளும்
அண்ணா தி.மு.க. அரசோ பல்வேறு காரணங்களை முன்வைத்து முன்கூட்டியே தேர்தலை
நடத்த திட்டமிட்டுள்ளதாக தெரிகிறது.
அதாவது அண்ணா தி.மு.க.வுக்கும் 6-ம் எண்ணுக்கும் ராசி இல்லையாம்..
கடந்த 1996, 2006 சட்டசபை தேர்தல்களில் அண்ணா தி.மு.க. தோல்வியைச்
சந்தித்து ஆட்சியை இழந்தது. அதுபோல 2016ஆம் ஆண்டும் நிகழ்ந்துவிடுமோ என்று
அஞ்சுகிறார்களாம்..
மன்மத,..துர்முகி
அதேபோல் வரும் 14-ந் தேதி பிறக்கும் தமிழ் வருஷம் 'மன்மத ஆண்டாம்'...
அடுத்த ஆண்டு பிறக்க இருப்பது 'துர்'முகி ஆண்டாம்... என்ன இது துர்முகி
பேரே சரியில்லையே. என்கிற முனுமுணுப்பும் அ.தி.மு.க. மேலிடத்தில்
இருக்கிறதாம்...
அப்புறம் 12 ஆண்டுகளுக்கு ஒரு முறை வரும் மகாமகம்.. தமிழகத்தில்
மகாமகம் என்றாலேயே 1992ல் ஜெயலலிதா- சசிகலா நீராடியது... அதில்
மாண்டுபோனவர்கள் நினைவும்தான் வருகிறது.. அடுத்த ஆண்டு பிப்ரவரி மாதம்
மகாமக திருவிழா நடைபெற உள்ளது.. தேர்தலுக்கு சில மாதங்கள் முன்பாக வரும்
மகாமகம் திருவிழாவால் தேர்தலின் போது எங்கே 'நெகட்டிவ்' எபெக்ட்
வந்துவிடுமோ என்றும் கருதுகிறார்களாம்..
இதனிடையே சொத்துக் குவிப்பு வழக்கின் தண்டனைக்கு எதிராக ஜெயலலிதா
தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனு மீதான தீர்ப்பும் விரைவில் வர
இருக்கிறது...
இதனடிப்படையில் தேர்தலை ஓரிரு மாதங்களில் நடத்துவதா? அல்லது 2016 ஆம்
ஆண்டு பிறப்பதற்கு முன்பாக டிசம்பர் மாதமே நடத்துவதா? என தீர்மானிக்கப்பட
இருக்கிறதாம்..
வருது..வருது.. தேர்தல்... வருது //tamil.oneindia.com
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக