ஞாயிறு, 29 மார்ச், 2015

ஜனதா பரிவார் கட்சி ! லாலுவும் நிதீஷும் மற்றும் மதசார்பற்ற கட்சிகள் இணைகின்றன

புதுடில்லி: ஜனதா பரிவார் கட்சி விரைவில் துவக்கப்படும் அதற்கான முயற்சிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளதாக பீகார் முதல்வர் நிதீஷ்குமார் கூறினார்.பா.ஜ.,வுக்கு எதிராக, ஐக்கிய ஜனதா தளம், சமாஜ்வாதி, ராஷ்டிரிய ஜனதா தளம், உள்ளிட்ட ஆறு கட்சிகள் உருவாக்கியுள்ள ஜனதா பரிவார் சார்பில், டில்லியில் கடந்த ஆண்டு போராட்டம் நடத்தியது.
கடந்த லோக்சபா தேர்தலில், உ.பி., பீகார் மாநிலங்களில், சமாஜ்வாதி, ஐக்கிய ஜனதா தளம், ராஷ்டிரிய ஜனதா தளம் உள்ளிட்ட கட்சிகள் படுதோல்வி அடைந்தன. பா.ஜ., அபார வெற்றி பெற்றது.
பா.ஜ.,வின் எழுச்சியை சமாளிக்க, இந்த மூன்று கட்சிகளுடன், மதச் சார்பற்ற ஜனதா தளம், இந்திய தேசிய லோக்தளம் உள்ளிட்ட கட்சிகள் ஒரே அணியில் இணைந்து, ஜனதா பரிவார் என்ற அமைப்பை உருவாக்கியுள்ளன.அடுத்த  மத்திய அரசில்  இவர்களின் பங்கு நிச்சயம்  இருக்கும்  என்றுதான் தோன்றுகிறது!
எதிர்காலத்தில், தேர்தல்களில், ஜனதா பரிவார் என்ற பெயரில், ஒரே கட்சியாக செயல்படுவதா அல்லது ஒரே கூட்டணியாக செயல்படுவதா என்பதை இந்த கட்சிகள் இன்னும் முடிவு செய்யவில்லை.

இந்நிலையில் பீகார் முதல்வரும் ஐக்கிய ஜனதா தள கட்சி தலைவருமான நிதீஷ்குமார் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறுகையில், ஜனதா பரிவார் கட்சி விரைவில் துவக்கப்படும். இது தொடர்பாக சமாஜ்வாதி கட்சி தலைவர் முலாயம்சிங் யாதவ், ராஷ்ட்ரீய ஜனதா தள கட்சி தலைவர் லாலு பிரசாத் யாதவ் ஆகியோரை சந்தித்து ஆலோசனை நடத்தினேன். மேலும் டில்லி சென்றிருந்த போது, திகார் சிறையில் ராஷ்ட்ரீய லோக் தள் கட்சி தலைவர் ஓம்பிரகாஷ் சவுதாலாவை சந்தித்து பேசினேன்.
சமாஜ்வாதி கட்சி தலைவர் முலாயம்சிங், மத சார்பற்ற ஜனதா தள கட்சி தலைவர் தேவகவுடாவை சந்தித்து பேசியுள்ளார். விரைவில் ஜனதா பரிவார் துவக்கப்படும் இதன் தலைவர்கள் ஒன்றாக கூடி ஆலோசித்த பின்னர் கட்சியை எந்த தேதியில் துவங்குவது என அறிவிக்கப்படும் என்றார்.


ஒரே சின்னத்தில் போட்டியிட முடிவு

இதற்கிடையே இந்தாண்டு பீகாரில் நடக்க உள்ள சட்டசபை தேர்தலில் ஆளும் ஐக்கிய ஜனதா தள கட்சியும், லாலுவின் ராஷ்ட்ரீய ஜனதா தள கட்சியும் இணைந்து ஒரே சின்னத்தில் போட்டியிட முடிவு செய்துள்ளதாகவும்,இதற்கான ஒப்பந்தத்தினை இரு கட்சிகளும் மேற்கொண்டதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.காங். , மற்றம் பா.ஜ.,விற்கு எதிராக தேர்தலில் வியூகம் வகுத்து பீகாரில் மீண்டும் ஆட்சியை பிடிக்கவே எதிரெதிராக செயல்பட்ட நிதீஷ்,லாலு ஆகியோர் ஒன்றாக கூட்டணி வைத்துள்ளனர் தினமலர்.com

கருத்துகள் இல்லை: