சென்னை: 'தி.மு.க., ஆட்சியில் ரத்து செய்யப்பட்ட
விவசாயிகளின் கடனை திரும்ப கேட்கக் கூடாது' என, தமிழக அரசுக்கு, தி.மு.க.,
தலைவர் கருணாநிதி கோரிக்கை விடுத்துள்ளார்.
அவரது அறிக்கை: தி.மு.க., அரசு தள்ளுபடி செய்த விவசாய கடனை, ஒன்பதாண்டுகள் கழித்து, திடீரென, இப்போது அசல் மற்றும் வட்டியுடன் திருப்பி செலுத்துமாறு, தஞ்சை மாவட்டத்தில் உள்ள, சில கூட்டுறவு கடன் சங்கங்கள், விவசாயிகளுக்கு தற்போது நோட்டீஸ் அனுப்பியுள்ளன. உதாரணத்திற்கு சொல்ல வேண்டுமேயானால், தஞ்சை மாவட்டம், திருவையாறு பகுதியை சேர்ந்த சுசீலா என்பவர், நடுக்காவேரி தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கத்தில் 9,110 ரூபாய் விவசாய கடன் பெற்றிருந்தார். தி.மு.க., ஆட்சியின் அறிவிப்புக்குப் பின், அசல் மற்றும், 1,880 ரூபாய் வட்டியும் சேர்த்து, 10,990 ரூபாய் தள்ளுபடி செய்யப்பட்டு, அதற்கான சான்றிதழ், கூட்டுறவு சங்கத்தினால் வழங்கப்பட்டது. தற்போது ஒன்பதாண்டுகளுக்கு பின், சுசீலா உட்பட, பல விவசாயிகளுக்கு வட்டியுடன் கடனை திரும்ப செலுத்துமாறு நோட்டீஸ் அனுப்பப்பட்டிருப்பதாக செய்திகள் வந்துள்ளன. /தி.மு.க., ஆட்சியில் ரத்து செய்யப்பட்ட விவசாயிகளின் கடனை திரும்ப கேட்கக் கூடாது/// கோரிக்கை சரிதான் ஆனால் சிறு திருத்தம். அது திமுக அரசல்ல. காங்கிரஸ் வி சிறுத்தைகள், கிருஷ்ணசாமி கட்சி என்று ஏகப்பட்ட கூட்டணி சேர்ந்துதான் ஆட்சி அமைத்தது என்பதால் திமுக அரசு என்பது குற்றமாகும், சற்று விட்டுக்கொடுப்பதாக இருந்தாலும் திமுக தலைமையிலான என்பது குற்றமில்லை, இருந்தும் "முன்னாள் தமிழக அரசு" என்று விளிப்போமாக.
இந்தச் செய்திகள் உண்மையானால், தமிழக அரசு, உடனடியாக தலையிட்டு, தள்ளுபடி செய்யப்பட்ட தொகையை, மீண்டும் வசூலிக்க எடுக்கிற முயற்சி தவறானது என்பதை புரிந்து கொண்டு, அதற்கான அறிவுரையை, கூட்டுறவு கடன் வங்கிகளுக்கு அனுப்ப வேண்டும். இவ்வாறு, கருணாநிதி கூறியுள்ளார். தினமலர்.com

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக