ஞாயிறு, 1 மார்ச், 2015

மங்கள சமரவீரா : சீன நீர்முழ்கி கப்பல்களை அனுமதிக்க மாட்டோம்!

சீனாவின் நீர் மூழ்கி கப்பல்களை எங்கள் நாட்டு கடல் எல்லைக்குள் அனுமதிக்க மாட்டோம் என மைத்ரிபாலா சிறிசேனா தலைமையிலான இலங்கை அரசு அறிவித்துள்ளது. இது தொடர்பாக சீனத் தலைநகர் பீஜிங்கில் இன்று செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த வெளியுறவு துறை மந்திரி மங்கல சமரவீரா, ‘‘கடந்த செப்டம்பர் மாதம் ஜப்பான் பிரதமர் ஷின்சோ அபே இலங்கைக்கு வந்த அதேநாளில் எந்த சூழ்நிலையில் சீன நீர்மூழ்கி கப்பல்கள் கொழும்பு துறைமுகத்துக்கு வந்தன? என்பது பற்றி எனக்கு உண்மையில் எதுவும் தெரியாது. ஆனால், எங்களது ஆட்சிக்காலத்தில் இதைப்போன்ற சம்பவங்கள் இனி நேராது என்று நாங்கள் உறுதியளிக்க முடியும்’’ என குறிப்பிட்டுள்ளார கடந்த செப்டம்பர் மாதம் ஜப்பான் பிரதமர் ஷின்சோ அபே அந்நாள் இலங்கை அதிபர் ராஜபக்சேவை சந்திப்பதற்காக கொழும்பு நகருக்கு வந்த அதேநாளில் ஜப்பானோடு கடல் எல்லை தகராறில் ஈடுபட்டுவரும் சீனாவின் நீர் மூழ்கி கப்பல்களை கொழும்பு துறைமுகம் பகுதியில் எப்படி அனுமதித்தீர்கள்? என்ற நிருபர்களின் கேள்விக்கு பதிலளித்த மங்கல சமரவீரா இவ்வாறு கூறியுள்ளார். maalaimlar.com

கருத்துகள் இல்லை: