ஜெயலலிதா மீதான சொத்துக்குவிப்பு வழக்கு தொடர்பான தீர்ப்பு தேதி அடுத்த வாரம் திங்கள்கிழமை அல்லது செவ்வாய்க்கிழமை அறிவிக்கப்படும் என்று கர்நாடக உயர்நீதிமன்ற சிறப்பு நீதிபதி குமாரசாமி தெரிவித்துள்ளார்.
சொத்துக்குவிப்பு வழக்கில் வழங்கப்பட்ட தண்டனையை எதிர்த்து ஜெயலலிதா உள்ளிட்டவர்கள் மேல்முறையீடு செய்து மனு அளித்திருந்தனர். அந்த மனு மீது கர்காடகா உயர்நீதிமன்ற சிறப்பு அமர்வில் 38 நாள் விசாரணை நடந்தது. கடந்த 6 நாட்களாக அரசு தரப்பு வழக்கறிஞர் பவானிசிங் இறுதி வாதத்தை முன்வைத்தார்.
ஜெயலலிதா சொத்துக்குவிப்பு மேல்முறையீட்டு வழக்கில் அனைத்து தரப்பு வாதமும் நிறைவடைந்தது. ஜெயலலிதா தரப்பு இறுதி வாதங்களை வழக்கறிஞர் நாகேஸ்வரராவ் தொகுத்து முன்வைத்தார். இறுதி வாதங்களை எழுத்துப்பூர்வமாக தாக்கல் செய்ய அவகாசம் தருமாறு ஜெயலலிதா வழக்கறிஞர் நாகேஸ்வரராவ் கோரிக்கையை ஏற்று 4 நாள் அவகாசம் அளித்தார் நீதிபதி.
திங்கள்கிழமை சுப்பிரமணிய சாமி கோர்ட்டில் ஆஜராக உள்ளதாகவும் நீதிபதி தெரிவித்தார்.nakkheeran.in
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக