செவ்வாய், 3 மார்ச், 2015

Delhi Rape Casel Documentary என் மகளைப் பற்றி தயாரிக்கப்பட்ட ஆவணப்படத்தை ஆதரிப்போம்

டெல்லியில் கடந்த 2012-ம் ஆண்டு டிசம்பர் 16-ம்தேதி இரவு பிஸியோதெரபி மாணவி தனது நண்பருடன் திரைப்படம் பார்த்துவிட்டு வீடு திரும்பும் வழியில் ஓடும் பேருந்தில் வைத்து ஒரு குடிகார கும்பல் அவரை கற்பழித்ததுடன் கொடூரமாக தாக்கி சாலையோரம் வீசியது. உடன் சென்ற நண்பரும் கடும் தாக்குதலுக்கு உள்ளானார். உயிருக்கு போராடிய அந்த மாணவி சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். இந்த சம்பவத்தை மையப்படுத்தி இங்கிலாந்தின் லெஸ்லி உட்வின் என்பவர் ஆவணப்படம் தயாரித்துள்ளார். ‘இந்தியாவின் மகள்’ என்ற பெயரில் தயாரிக்கப்பட்டுள்ள இந்த ஆவணப்படத்தில் பல்வேறு தகவல்கள் பதிவு செய்யப்பட்டுள்ளன. இந்த வழக்கில் கைதான பஸ் டிரைவர் முகேஷ் சிங் சிறையில் இருந்தபடியே இந்த ஆவணப்படத்திற்காக பேசியுள்ளான். வரும் 8-ம்தேதி வெளியாகவுள்ள நிலையில் பலியான டெல்லி மாணவியின் பெற்றோருக்கு இந்தப் படம் திரையிடப்பட்டது. படத்தை பார்த்து திருப்தியடைந்த அவர்கள் இந்தப் படத்தை ஆதரிப்போம் என்று தெரிவித்துள்ளனர்.maalaimalar.com

கருத்துகள் இல்லை: