திங்கள், 20 அக்டோபர், 2014

500 தொழிலாளர்களுக்கு கார்கள் 300 தொழிளார்களுக்கு அபாட்மென்ட் குஜராத் முதலாளியின் பரிசு !

Surat
A diamond merchant in Gujarat has gifted over 1,000 employees cars, homes and jewelry as Diwali bonus in a stunning act of generosity, Oprah-style.
Savjibhai Dholakiya, an exporter based in the diamond city of Surat, says his workers deserve big rewards for their hard work and loyalty.
About 500 employees opted for cars, 200 went for jewelry and some 300 accepted deposits on apartments as their annual incentive. The gifts were handed over on Sunday at a sprawling ground where brand new cars were lined up in neat queues.தீபாவளியை முன்னிட்டு சூரத்தில் உள்ள வைர ஏற்றுமதி நிறுவனமான அரிகிருஷ்ணா நிறுவனம் தனது ஊழியர்களுக்கு கார், அடுக்குமாடி குடியிருப்பு மற்றும் நகைகளை போனசாக வழங்கி அவர்களை மகிழ்ச்சி கடலில் ஆழ்த்தியது. ஆண்டுக்கு 6000 கோடி ரூபாய்க்கு வர்த்தகம் செய்யும் அந்த நிறுவனம், தனது நிறுவனத்தில் வேலை செய்யும் 1200 ஊழியர்களின் வாழ்வில் தீபாவளி திருநாளை முன்னிட்டு வெளிச்சத்தை ஏற்படுத்தி தந்துள்ளது. அந்நிறுவனத்தின் தலைவரான சாவ்ஜி தொலாக்கியா, தனது பணியாளர்களான கைவினைஞர்கள் மற்றும் பொறியாளர்களை அழைத்து கார், அடுக்குமாடி குடியிருப்பு மற்றும் நகைகளை காண்பித்து, அவர்களுக்கு எது வேண்டுமோ அதை எடுத்துக்கொள்ள சொல்லி அனைவரையும் ஆச்சர்யத்தில் ஆழ்த்தினார்.  ம்ம்ம்  நம்மளுக்கும் இருக்காய்ங்களே ?


ஊழியர்களின் விசுவாசமான பணிக்கு ஏற்ப அவர்களுக்கு மேற்கண்ட வாய்ப்பு வழங்கப்பட்டதில் 500 பேர் புதிய பியட் புன்டோ கார்களையும், 570 பேர் நகைகளையும், 207 பேர் அடுக்குமாடி குடியிருப்புகளையும் தேர்வு செய்தனர். அப்போது பேசிய தொலாக்கியா, தனது கனவுகள் அனைத்தையும் ஊழியர்களே நனவாக்கியதாகவும், கைவினைஞர்கள் மற்றும் பொறியாளர்களுக்கு கொடுக்கப்பட்ட இலக்கை அவர்கள் எட்டியதாகவும் மகிழ்ச்சி பொங்க தெரிவித்தார். இந்த வருடம் மட்டும் அக்கம்பெனி ஊழியர்களுக்கு 50 கோடி ரூபாய் ஊக்கத் தொகையாக வழங்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. maalaimalar.com

கருத்துகள் இல்லை: