சனி, 25 அக்டோபர், 2014

ஜெயலலிதா முதல்வர் மற்றும் மூத்த அமைச்சர்களுடன் ஆலோசனை நடத்தினார் !

சென்னை: ஜெயலலிதா ஜாமினில் வெளி வந்து, ஐந்து நாட்களுக்கு பின், போயஸ் கார்டனில் அவரை முதல்வர் மற்றும் மூத்த அமைச்சர்கள் சந்தித்தனர். இந்த ஒரு மணி நேர ஆலோசனையில், கட்சிப் பணிகள் குறித்து அவர் பேசியதாக, அ.தி.மு.க.,வினர் தெரிவித்தனர்.சொத்து குவிப்பு வழக்கில், சிறை தண்டனை விதிக்கப்பட்ட, அ.தி.மு.க., பொதுச் செயலர் ஜெயலலிதாவுக்கு, கடந்த, 17ம் தேதி உச்ச நீதிமன்றம் ஜாமின் வழங்கியது. 18ம் தேதி அவர், பெங்களூரு பரப்பன அக்ரஹார சிறையில் இருந்து, விடுவிக்கப்பட்டார்.அன்று இரவு சென்னை திரும்பிய ஜெயலலிதாவை சந்திக்க வேண்டும் என்பதற்காக, அமைச்சர்கள் யாரும் சொந்த ஊருக்கு போகாமல், சென்னையில் இருந்தனர்.ஆனால், கடந்த, ஐந்து நாட்களாக, ஜெய
லலிதா யாரையும் சந்திக்கவில்லை. நேற்று முன்தினம் மாலையில், முதல்வர் ஓ.பன்னீர்செல்வத்தை அழைத்து, ஜெயலலிதா பேசினார். போயஸ் தோட்டத்தில் நடந்த இந்த சந்திப்புக்கு பின், மூத்த அமைச்சர்கள் நத்தம் விஸ்வநாதன், வைத்திலிங்கம், எடப்பாடி பழனிச்சாமி ஆகியோரும் அழைக்கப்பட்டனர்.பின்னர், இந்த நால்வருடன் ஜெயலலிதா ஒரு மணி நேரம் ஆலோசனை நடத்தியதாக தெரிகிறது.  தமிழ் நாடு அரசு ஒரு  கைதியின் மேற்பார்வையின் கீழ் இயங்கி ஜனநாயகத்தை போற்றிப் பாடுது ? சரித்திரத்தில் தரித்திர நிலை தமிழ் நாட்டுக்கு ? கமிசன் ஒழுங்கா வருதான்னு பாக்கணும்ல ? இன்னொரு கொடைநாடு வாங்க இப்பவே வசூலிக்கணும்ல !
இது குறித்து, அ.தி.மு.க., வட்டாரத்தில் கூறியதாவது:
கட்சிப் பணிகள் குறித்தே ஜெயலலிதா விவாதித்துள்ளார். கட்சித் தேர்தல் விரைவில் நடத்தப்பட வேண்டியுள்ளது. அதற்கான ஏற்பாடுகள் குறித்து, முதல்வர் மற்றும் மூத்த அமைச்சர்களுடன் அவர் ஆலோசனை நடத்தியுள்ளார். நேற்றும், சிலரை சந்திக்க அவர் திட்டமிட்டிருந்தார். ஆனால், அது ரத்து செய்யப்பட்டு விட்டது. திங்கட்கிழமை முதல், அவர் தன் வழக்கமான கட்சிப் பணிகளை துவங்குவார். இவ்வாறு, கட்சி வட்டாரத்தில் தெரிவித்தனர்.- நமது சிறப்பு நிருபlt; தினமலர்.com

கருத்துகள் இல்லை: