திங்கள், 28 ஜனவரி, 2013

Pakistan பார்லி கலைப்பு?: விரைவில் தேர்தல் அறிவிப்பு

இஸ்லாமாபாத்: பாகிஸ்தானின் தேசிய அசெம்பிளியின் பதவிக்காலம் முடிவடைவதை முன்னிட்டு விரை‌வில் தேர்தல் தேதி அறிவிக்கப்படும் என தகவல் ஒலிபரப்புத்துறை அமைச்சர் கமர் ஜமான் கைரா தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் செய்தியாளர்களிடம் ‌கூறியதாவது: பாகிஸ்தானி்ன் தேசிய அசெம்பிளியின் ஆயுட்காலம் வரும் மார்ச் மாதம் 16-ம் தேதியுடன் முடிவடைகிறது. இதனையடுத்து அசெம்பிளியை கலைத்து விட்டு அடுத்த 90நாட்களுக்குள் பொது தேர்தல் மூலம் புது அரசை தேர்ந்தெடுக்க வேண்டும். இது குறித்து மத தலைவரான தாகிர் உல் காத்ரியுடன் தேர்தல் தொடர்பான ஆலோசனை நடத்தப்பட்டுள்ளதாக கூறினார். ‌மேலும் தற்போதைய கூட்டத்தின் முடிவு தேதி மற்றும் ‌தேர்தல் தேதி ஆகியவை குறித்து இன்னும் 10 நாட்களில் அறிவி்ப்பு வெளியிடப்படும் ‌என ‌தெரிவித்தார். ‌மேலும் இடைக்கால பிரதமர் மற்றும் மாகாண முதல்வர்கள் நியமனம் குறித்து விவாதித்ததாகவும், ‌பேச்சுவார்த்தையின் போது‌ தேர்தல் ஆணைய தலைவர் குறித்து எதுவும் பேச வில்லலை எனவும் அவர் தெரிவித்தார்.


இந்நிலையில் பாக்., அரசை கண்டித்து தொடர்ந்து நான்கு நாட்களாக போராட்டம் நடத்தி வந்த மத குரு தலைவர் காத்ரி, அரசின் தேர்தல் தொடர்பான அறிவிப்பை அடுத்து போராட்டத்தை முடிவுக்கு ‌ கொண்டுவந்துள்ளார்.

தற்போதைய அரசு மற்றும் மாகாண அரசுகளின் பதவிக்காலம் வரும் மார்ச் மாதம் 17-ம் தேதி முடிவடைகிறது. அரசு கலைக்கப்பட்ட தேதியில் இருந்து 90 நாட்களுக்குள் புதிய ‌தேர்தல் நடத்தப்பட்டு புது அதிபரை தேர்வு செய்யப்பட ‌வேண்டும்.


இந்நிலையில் வீண் வதந்திகளுக்கு இடம் அளிக்காத வகையில் தேர்தல் நடத்தப்பட வேண்டும் என எதிர்கட்சிகள் கோரிக்கை விடுத்துள்ளது dinamalar,com

கருத்துகள் இல்லை: