புதன், 30 ஜனவரி, 2013

மைனரையும் தூக்கிலிட வேண்டும்!' : மருத்துவ மாணவியின் தந்தை ஆவேசம்

லக்னோ:""என் மகளை, பாலியல் பலாத்காரம் செய்த ஆறு பேரில் ஒருவன், மைனர் என்பதால், அவனுக்கு குறைந்தபட்ச தண்டனை வழங்க கூடாது; அவனையும் தூக்கில் போட வேண்டும்,'' என, பாலியல் பலாத்காரத்தால் உயிரிழந்த, டில்லி மாணவியின் தந்தை, ஆவேசமாக தெரிவித்துள்ளார்.டில்லியில், பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு, கொல்லப்பட்ட, மருத்துவ மாணவியின் தந்தை கூறியதாவது:என் மகளை, பாலியல் பலாத்காரம் செய்து, கொலை செய்தவர்களில் ஒருவன், மைனர் என, சிறார் நீதி வாரியம் அறிவித்துள்ளது. இதனால், குற்றம் நிரூபிக்கப்பட்டால், மூன்று ஆண்டு மட்டுமே, அவனுக்கு தண்டனை கிடைக்கும்.கோர்ட்டின் இந்த அறிவிப்பு, துரதிருஷ்டவசமானது. அந்த நபர், வயதில் சிறுவனாக இருந்தாலும், மிக கொடிய குற்றத்தை செய்துள் ளான். வயதை அடிப்படையாக வைத்து, அவனுக்கு கருணை காட்டக் கூடாது. அதிகபட்ச தண்டனையாக, அவனுக்கு, தூக்கு தண்டனை வழங்க வேண்டும்.

தூக்கு தண்டனைக்கு குறைந்து, அவனுக்கு, வேறு எந்த தண்டனை கொடுத்தாலும், அதை எதிர்ப்போம். இந்த வழக்கில் தொடர்புடைய, மற்ற குற்றவாளிகளுக்கு என்ன தண்டனை கொடுக்கப்படுகிறதோ, அதே தண்டனையைத் தான், இவனுக்கும் கொடுக்க வேண்டும்.சிறார் நீதி வாரிய உத்தரவை எதிர்த்து, விரைவில், மேல் முறையீடு செய்யவுள்ளோம். இதற்காக, சட்ட நிபுணர்களுடன் ஆலோசித்து வருகிறோம். சிறார் வயது வரம்பை குறைக்க, சட்ட திருத்தம் செய்ய வேண்டும். இதற்கு மத்திய அரசு, நடவடிக்கை எடுக்க வேண்டும்.பள்ளிச் சான்றிதழில் குறிப்பிட்ட பிறந்த தேதியின் அடிப்படையில், அவனை, மைனராக, சிறார் கோர்ட் அறிவித்துள்ளது. பள்ளிச் சான்றிதழில், மோசடி செய்ய, வாய்ப்புள்ளது அல்லவா?இவ்வாறு அவர் கூறினார்.dinamalar.com

கருத்துகள் இல்லை: