வியாழன், 31 ஜனவரி, 2013

கலைஞர்: கமல் தொடர்பாக எம்.ஜி.ஆருக்கு ஜெயலலிதா கடிதம் எழுதியதற்கு என்னிடம் ஆதாரம் உள்ளது:


தி.மு.க. தலைவர் கலைஞர்  இன்று செய்தியாளர்களிடம் விஸ்வரூபம் பிரச்சனை தொடர்பாக பேசினார்.
 அப்போது அவர்,   ‘’31-1-2013 தேதிய முரசொலி நாளிதழில் நான் எழுதிய கடிதத்தில், கமல் ஹாசன் நடித்த விக்ரம் திரைப் படத்தின் சிறப்புக் காட்சி ஒன்றில் முதலமைச்சராக இருந்த எம்.ஜி.ஆர். கலந்து கொண்டபோது, ஜெயலலிதா, எம்.ஜி. ஆருக்கு தன் கைப்பட எழுதிய கடிதத்தில் கமல்ஹாசனைப் பற்றி ஒருமையில் கண்டனம் செய்து குறிப்பிட்டு தெரிவித்த சில வாசகங்களை எழுதியிருந்தேன்.
அப்படி நான் எழுதியது கற்பனையான குற்றச்சாட்டு எனவும், தான் தினமும் எம்.ஜி.ஆருடன் பேசுவதற்கான வாய்ப்பு அப்போது இருந்ததால், எதற்காக கடிதம் எழுத வேண்டும் என்றும், அதற்காக என் மீது வழக்கு தொடரப் போவதாகவும் ஜெயலலிதா தெரிவித்திருக்கிறார்.
நான் எழுதியதற்கு போதுமான ஆதாரம் என்னிடம் இருக்கிறது. முதல் அமைச்சர் என் மீது வழக்கு போடும்போது, நீதிமன்றத்தில் ஆதாரத்தைக் காட்ட நான் தயாராக இருக்கிறேன்’’ என்று கூறினார். 

கருத்துகள் இல்லை: