சனி, 8 டிசம்பர், 2012

”வைரமுத்து வரக்கூடாது” முதல்வர் போட்ட கண்டீஷன்?


கமல்ஹாஸன் இயக்கி, தயாரித்து, நடித்துள்ள படம் விஸ்வரூபம். ஜனவரி 11-ஆம் தேதி தைத்திருநாள் கொண்டாட்டமாக வெளிவரவிருக்கும் விஸ்வரூபம் படத்தின் பாடல் வெளியீட்டு விழா, நேற்று(08.12.12) மதுரை,கோவை, சென்னை ஆகிய மூன்று மாவட்டங்களிலும் சிறப்பாக நடைபெற்றது. மதுரை, கோவை ஆகிய இடங்களில் கமலின் ரசிகர்கள் இசைத்தகட்டை கமலிடம் பெற்றுக்கொள்ள இரவு சென்னையில் நடந்த நிகழ்ச்சியில் திரையுலகின் முக்கிய நட்சத்திரங்கள் பலர் முன்னிலையில் விஸ்வரூபம் பட இசைத்தகட்டினை இசைஞானி இளையராஜா பெற்றுக்கொண்டார். இயக்குனர்கள், பாரதிராஜா, கே.எஸ்.ரவிகுமார், வசந்த், ஏ.ஆர்.முருகதாஸ், லிங்குசாமி, தரணி ஆகியோரும், நடிகர்கள் பிரபு, விக்ரம் பிரபு உட்பட பலரும் கலந்துகொண்டனர்.  ஆனால் விஸ்வரூபம் படத்திற்கு பாடல்கள் எழுதியுள்ள கவிப்பேரரசு வைரமுத்து மட்டும் இந்நிகழ்ச்சிக்கு வரவில்லை. கமல்ஹாஸன் நடித்த மன்மத அம்பு படத்தை விஜய் தொலைக்காட்சி தான் வாங்கியது. அதைத்தொடர்ந்து விஜய் நடித்த துப்பாக்கி படத்தை வாங்குவதில் விஜய் டிவிக்கும், ஜெயா டிவிக்கும் இடையே போட்டி ஏற்பட்டு கடைசியாக விஜய் டிவி துப்பாக்கியை வாங்கியது. 
அதேபோல் விஸ்வரூபம் படத்தை வாங்குவதிலும் இரண்டு தொலைக்காட்சிகளுக்கும் இடையே போட்டி நிலவி வந்தது. வைரமுத்து எப்போதுமே கலைஞரை ஆதரித்து பேசுவார். எனவே இந்நிகழ்ச்சியில் வைரமுத்து கலந்துகொள்ளக்கூடாது என முதல்வர் தரப்பிலிருந்து கமலுக்கு சொல்லப்பட்டாதாக தெரிகிறது. ஜெயா டிவி விஜய் டிவியை விட இரண்டு மடங்கு காசு கொடுத்ததால் விஸ்வரூபம் ஜெயா டிவியின் கையில் ஒப்படைக்கப்பட்டதாம்.
அதனால் தான் முதலமைச்சரை கமல் நேரடியாக சந்தித்து நன்றி தெரிவித்ததாகவும் சொல்லப்படுகிறது.

 நிகழ்ச்சியில் கலந்துகொண்டு பேசிய இயக்குனர் பாரதிராஜா “இன்று விஸ்வரூபம் எடுத்திருக்கும் கமலுக்கு அன்றே கோவணம் கட்டிப் பார்த்தவன் நான். கலைக்காக நிர்வாணத்தையும் துச்சமாக மதித்து நடிப்பவர் கமல்” என்று கூறினார். பின்னர் பேசிய ஏ.ஆர்.முருகதாஸ் “எல்லா பொறுப்பையும் நீங்களே ஏற்றுக்கொள்ளாமல் மற்றவர்களிடம் விடலாமே?” என்று கேட்டதற்கு கமல் “ சிவாஜி என்ற சிங்கத்துக்கே தயிர் சோறு போட்டவங்க நாம” என்று கூற “நான் செய்து வைக்கும் சமையலை இந்த சிங்கம் சாப்பிட வேண்டும்” என்று தனது கோரிக்கையை வைத்துவிட்டு இறங்கினார்.


 பின்னர் விஸ்வரூபம் பட நாயகிகள் ஆண்ட்ரியா, பூஜா புடை சூழ மேடை ஏறிய கமல் “ விஸ்வரூபம் என்ற பிரம்மாண்ட படத்தை நான் என் ரசிகர்களின் மீதுள்ள நம்பிக்கையை முன்வைத்துத்தான் எடுத்துள்ளேன். எந்த ஒரு புதிய முயற்சியையும் அவரகள் வரவேற்பார்கள் என்ற நம்பிக்கை எனக்கு இருக்கிறது. என் ராஜ் கமல் ஃபிலிம்ஸ் நிறுவனத்தின் முதுகெலும்பாக இருப்பவர் என் மூத்த அண்ணன் இளையராஜா தான். என் பல படங்களுக்கு அவர் சிறந்த இசையமைத்துக்  கொடுத்துள்ளார்” என்று கூறினார்.&http://cinema.nakkheeran.in/Talkies.aspx?T=1891

கருத்துகள் இல்லை: