வியாழன், 6 டிசம்பர், 2012

கெஜ்ரிவால் குறித்து அன்னா ஹசாரே கடுமை ! ஊழல் ஒழிக்கும் அணியில் வந்தது பிளவு

புதுடில்லி: அரவிந்த் கெஜ்ரிவால் மற்ற அரசியல் கட்சிகள்போலவே செயல்படுகிறார் என்றும் இவர் பதவி மோகம் பிடித்து அலைகிறார் என்றும் தன்னை எதிர்த்து ஆம்ஆத்மி என்று கட்சி துவக்கியுள்ள கெஜ்ரிவால் குறித்து சமூக சேவகர் அன்னா ஹசாரே கடுமையாக விமர்சித்துள்ளார்.
ஊழலுக்கு எதிரான இந்தியா என்ற அமைப்பு மூலம் உண்ணாவிரதம், இருந்த இந்தியா முழுவதும் பிரபலமான அன்னா ஹசாரே தற்போது பலம் இழந்த நிலையில் இருக்கிறர். இவருக்கு பக்கபலமாக வலது கரமாக இருந்து வந்தவர் கெஜ்ரிவால் . இவர் ஹசாரேயுடன் கருத்து வேறுபாடு காரணமாக பிரிந்தார். பின்னர் ஆம்ஆத்மி என்ற அரசியல் கட்சியை துவக்கினார், இவருக்கு ஹசாரே ஆதரவு முழுமையாக கிடைக்குமா என்ற கேள்வி எழுந்தபோது எங்களுக்குள் பிணக்கு இல்லை என்று இருவரும் சொல்லி வந்தனர். கடந்த 2 நாட்களுக்கு முன்னர் கூட ஹசாரே அளித்த பேட்டியில் கெஜ்ரிவால் கட்சியை ஆதரித்து தேர்தலில் பிரசாரம் செய்யப்போவதாக கூறியிருந்தார். வேட்பாளர்கள் நேர்மையானவராக இருக்கும் பட்சத்தில் என்றும் தெரிவித்தார்.http://www.tamilmurasu.org/index.asp


இந்நிலையில் ஹசாரே இன்று அளித்துள்ள பேட்டியில் : அரவிந்த் கெஜ்ரிவால் மற்ற அரசியல் கட்சிகள் போலவே செயல்படுகிறார். இவர் பண மோகத்துடன் பதவியை பிடிக்க அலைகிறார். இது போன்ற எண்ணம் உள்ளவர்கள் அருகில் நான் இருக்க மாட்டேன். இவரது கட்சிக்கு எனது ஓட்டு கிடையாது. முதலில் இவர் சென்ற பாதை சரியாக இருப்பதாக உணர்ந்தேன் . ஆனால் இதில் எனக்கு தற்போது உடன்பாடு இல்லை. ஊழலை ஒழிக்கும் எண்ணத்தில் இன்னும் என்னுடன் கைகோர்க்க பலர் காத்திருக்கின்றனர். இயக்கத்தை வலுப்படுத்துவேன் இவ்வாறு அவர் கூறினார்.

கருத்துகள் இல்லை: