புதன், 5 டிசம்பர், 2012

ராஜ்யசபா.. 244.. முலாயம்-மாயாவதி வெளிநடப்பு செஞ்சா மட்டும் போதாது.. ஓட்டும் போடனும் அரசை காக்க!

டெல்லி: எப்டிஐ விவகாரத்தில் இன்று லோக்சபாவைத் தொடர்ந்து ராஜ்யசபாவில் வரும் வெள்ளிக்கிழமை விவாதமும் வாக்கெடுப்பும் நடக்கவுள்ளது. இங்கு தான் மத்திய அரசுக்கு பெரும் சிக்கல் காத்துக் கொண்டுள்ளது. காரணம், அங்கு எதிர்க் கட்சிகளிடம் தான் அதிக எம்பிக்கள் உள்ளனர்.
ராஜ்யசபாவில் மொத்தமுள்ள எம்பிக்கள் எண்ணிக்கை 244. அதில் ஓட்டெடுப்பில் வெல்ல 122 எம்பிக்களின் ஆதரவு தேவை.
இங்கு காங்கிரஸ் கூட்டணிக்கு 90 எம்பிக்களே உள்ளனர். இது போக நியமன எம்பிக்கள் 10 பேரும், லாலுவின் கட்சி எம்பிக்கள் 2 பேரும் உள்ளனர். ஆக மொத்தம் 102 எம்பிக்களே அரசுக்கு ஆதரவாக உள்ளனர். எனவே வாக்கெடுப்பில் வெல்ல மேலும் 20 எம்பிக்களின் ஆதரவு காங்கிரசுக்குத் தேவை.

எதிர்க் கட்சிகள் வசமும் பெரிதாக நம்பர் இல்லை. அங்கு பாஜக கூட்டணியிடம் 66 எம்பிக்களும், இடதுசாரிகளுக்கு 14 எம்பிக்களும், திரிணமூல் காங்கிரசுக்கு 9 எம்பிக்களும், அதிமுகவுக்கு 7 எம்பிக்களும், பிஜூ ஜனதா தளத்துக்கு 5 எம்பிக்களும் உள்ளனர். ஆக மொத்தம் எண்ணிக்கை 101.
எனவே, தங்களது தீர்மானத்தை வெற்றி பெறச் செய்ய எதிர்க் கட்சிகளுக்கு மேலும் 21 எம்பிக்களின் ஆதரவு தேவை.
இதனால் இங்கேயும் முக்கியத்துவம் பெறுவது முலாயமும் மாயாவதியும் தான். ராஜ்யசபாவில் மாயாவதிக்கு 15 எம்பிக்களும் முலாயம் சிங்குக்கு 9 எம்பிக்களும் உள்ளனர். இந்த 24 எம்பிக்களும் யார் பக்கம் போகிறார்களோ அந்தத் தரப்பே வெல்லும்.
இருவரும் நிச்சயம் பாஜக பக்கம் போக மாட்டோம் என்று கூறிவிட்டனர். ஆனால், இது மட்டும் போதாதே மத்திய அரசைக் காப்பாற்ற.
இந்த இரு கட்சிகளும் ஓட்டெடுப்பின்போது வெளிநடப்பு செய்துவிட்டால் ராஜ்யசபாவில் உள்ள எம்பிக்கள் எண்ணிக்கை 220 ஆகக் குறைந்துவிடும். அப்போது வாக்கெடுப்பில் வெல்ல மத்திய அரசுக்கு அதில் பாதியான 110 எம்பிக்கள் எண்ணிக்கை தேவைப்படும். ஆனால், இருப்பதோ 102 பேர் தான். எதிர்க் கட்சிகளிடம் 101 எம்பிக்கள் உள்ள நிலையில், 8 எம்பிக்கள் பற்றாக்குறையோடு மத்திய அரசுக்கு எதிரான எதிர்க் கட்சிகளின் வாக்கெடுப்பு வென்றுவிடும்.
இதனால் ராஜ்யசபாவில் மத்திய அரசைக் காக்க முலாயம் கட்சியோ அல்லது மாயாவதியின் கட்சியோ நிச்சயமாக அரசு ஆதரித்து வாக்களித்தே ஆக வேண்டும். லோக்சபாவில் செய்வதைப் போல வெறும் வெளிநடப்பு செய்து காத்துவிட முடியாது. http://tamil.oneindia.in/

கருத்துகள் இல்லை: