செவ்வாய், 4 டிசம்பர், 2012

நாஞ்சில் சம்பத் அதிமுகவில் துணை கொ ப செ யானார்

மதிமுகவின் கொள்கை பரப்புச் செயலாளராகவும் பிரபல பேச்சாளராகவும் இருந்தவர் நாஞ்சில் சம்பத். கடந்த சில மாதங்களாக அவருக்கும் மதிமுக பொதுச்செயலாளர் வைகோவுக்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டது.
வைகோவும் நாஞ்சில் சம்பத்தை தமது கட்சி ஏடான சங்கொலியில் மறைமுகமாக விமர்சித்தார். வைகோவை நாஞ்சில் சம்பத்தும் கடுமையாக விமர்சித்து வந்தார். இதையடுத்து நாஞ்சில் சம்பத் ஒப்புக் கொண்ட அனைத்துக் கூட்டங்களும் சட்டென ரத்து செய்யப்பட்டன.
ஆனால் அவரை கட்சியை விட்டு வைகோ நீக்கவில்லை. நாஞ்சில் சம்பத்தும் கட்சியை விட்டு நீக்கிப் பாருங்கள் என்றெல்லாம் கொந்தளித்துக் கொண்டிருந்தார். போட்டி மதிமுகவை உருவாக்கப் போவதாகவும் கூட செய்திகள் வலம் வந்தன. திமுகவில் சேருவார் என்றும் பேச்சு அடிபட்டது. இந்த நிலையில் நாஞ்சில் சம்பத் இன்று திடீரென அதிமுகவில் ஐக்கியமாகிவிட்டார். http://tamil.oneindia.in/  இனி அம்மாவுக்கு எடுத்ததெல்லாம் வெற்றிதான் ! வைக்கோவின் வெற்றிகளுக்கு பின்னால் இந்த சம்பத்து தம்பிதான் இருந்தார் அம்மாவை ஒருவழியாக பிரதமர் ஆக்காமல் ஓயமாட்டார். ஆனால் என்ன பழைய ஜால்ராக்களுக்கு இவரை போல் சத்தமாக அடிக்க தெரியாது அவர்கள்தான் பாவம் 

இன்று காலை திடீரென போயஸ் கார்டனில் உள்ள முதல்வர் ஜெயலலிதா வீட்டுக்கு சென்ற சம்பத் அதிமுகவிவில் சேர்ந்தார். அவருக்கு அதிமுக உறுப்பினர் அட்டையை ஜெயலலிதா வழங்கினார்.
அதிமுக கொள்கை பரப்பு துணை செயலாளர் பதவி:
அதிமுகவில் சேர்ந்த நாஞ்சில் சம்பத்துக்கு கட்சியில் பதவி கொடுக்கப்பட்டு உள்ளது. இதுகுறித்து முதல்வர் ஜெயலலிதா வெளியிட்டுள்ள அறிக்கையில், அதிமுக கொள்கை பரப்பு துணை செயலாளர் பொறுப்பில் நாஞ்சில் சம்பத் இன்று முதல் நியமிக்கப்படுகிறார். கழக உடன்பிறப்புகள் இவருக்கு முழு ஒத்துழைப்பு நல்கிட கேட்டுக் கொள்கிறேன் என்று கூறப்பட்டுள்ளது.
இனி நாஞ்சில் சம்பத் அதிமுகவின் பிரச்சார பீரங்கி!
அதிமுகவின் கொள்கைப் பரப்புச் செயலாளராக தம்பிதுரை உள்ளார். கொள்கை பரப்பு இணைச் செயலாளர் பதவியிலிருந்து பழ. கருப்பையா எம்.எல்.ஏ. கடந்த ஜனவரி மாதம் நீக்கப்பட்டது நினைவுகூறத்தக்கது. இந் நிலையில், கொள்கை பரப்பு துணைச் செயலாளராக சம்பத் நியமிக்கப்பட்டுள்ளார். கொ ப செ யானார் 

கருத்துகள் இல்லை: