புதன், 5 டிசம்பர், 2012

தோழி எரித்து கொலை : காதல் ஜோடிக்கு வழங்கிய ஆயுள் தண்டனை ரத்து

tamil news, tamil news paper, tamil newspaper, tamil evening news paper
மதுரை: வீட்டுக்கு தெரியாமல் குடும்பம் நடத்தியதை பெற்றோருக்கு தெரிவிப்பதாக மிரட்டிய தோழியை எரித்து கொன்ற வழக்கில் காதல் ஜோடிக்கு கீழ்கோர்ட் வழங்கிய ஆயுள் தண்டனையை ஐகோர்ட் கிளை ரத்து செய்தது. திருச்சி கருமண்டபம் அசோக்நகரை சேர்ந்த பாலதண்டாயுதபாணி மகன்  வெங்கடேசன்(27), சுப்பிரமணியன் மகள் வசந்தி(25). ஒரே கல்லூரியில் படித்த இருவரும் காதலித்தனர். காதலுக்கு இருவரின் பெற்றோர்களும் எதிர்ப்பு தெரிவித்தனர். இதனால், இருவரும் பெற்றோருக்கு தெரியாமல் திருமணம் செய்து கொண்டு, அலைபாயுதே சினிமா பாணியில் அவரவர் வீடுகளில் தங்கி கல்லூரிக்கு சென்று வந்தனர். இந்த விவரம் வசந்தியின் தோழி நித்யாவுக்கு தெரியும். அவர், இருவரும் வீட்டிற்கு தெரியாமல் திருமணம் செய்து வசிப்பதை பெற்றோருக்கு சொல்வதாக மிரட்டி பணம் பறித்து வந்துள்ளார். இந்நிலையில், வீட்டு கழிவறையில் எரிந்த நிலையில் இளம் பெண் சடலம் கண்டுபிடிக்கப்பட்டது. பிணமாக கிடந்தவர் வசந்தி என்றும், அவரை கொலை செய்து எரித்ததாக அவரது தந்தை சுப்பிரமணியன், கன்டோன்மென்ட் போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வந்தனர். இதனிடையே, நித்யாவை சில நாட்களாக காணவில்லை என அவரது தந்தை போலீசில் புகார் செய்தார்.http://www.tamilmurasu.org/index.asp இந்த பையன் லுக்கே சரியில்லை இவனை நம்பி ஒரு பெண் ம்ம்ம்ம் 


நித்யா குறித்து வசந்தி வீட்டிற்கு விசாரிக்க சென்ற போது, வசந்தி ஏற்கனவே இறந்து விட்டதாக கூறியதால் போலீசார் திரும்பினர். இந்நிலையில், திடீர் திருப்பமாக கொலை செய்யப்பட்டு இறந்ததாக கூறப்பட்ட வசந்தி, கடந்த 2009 ஜனவரி 10ம் தேதி கணவர் வெங்கடேசனுடன் திருச்சி போலீஸ் கமிஷனர் முன்பு ஆஜராகி, காதல் திருமணம் செய்த தங்களுக்கு போலீஸ் பாதுகாப்பு வழங்க வேண்டும் என மனு கொடுத்தனர். இறந்ததாக கூறப்பட்ட வசந்தியை உயிருடன் பார்த்த போலீசாருக்கு அதிர்ச்சி ஏற்பட்டது. அவரிடம் நடத்திய விசாரணையில், எரிந்த நிலையில் சடலமாக கிடந்தவர் நித்யா என்பது தெரியவந்தது.

இதையடுத்து, திருமணம் செய்ததை வீட்டிற்கு தெரிவிப்பதாக மிரட்டியதால் நித்யாவை தூக்க மாத்திரை கொடுத்து கொலை செய்து பிணத்தை எரித்ததாக வசந்தி மற்றும் வெங்கடேசனை போலீசார் கைது செய்தனர். இவ்வழக்கில் இருவருக்கும் ஆயுள் தண்டனை வழங்கி, திருச்சி கோர்ட் உத்தரவிட்டது. இந்த தண்டனையை எதிர்த்து இருவரும் ஐகோர்ட் கிளையில் மேல்முறையீடு மனுத்தாக்கல் செய்தனர். மனுவை விசாரித்த நீதிபதிகள் ஜெய்சந்திரன், நாகமுத்து இன்று தீர்ப்பளித்தனர். ‘வசந்தி, வெங்கடேசன் இருவரும் நித்யாவை கொலை செய்ததை சந்தேகத்திற்கு இடமின்றி நிரூபிக்க போலீசார் தவறி விட்டனர். சூழ்நிலை சாட்சியங்கள் அடிப்படையில் இருவருக்கும், கீழ்கோர்ட் தண்டனை வழங்கியுள்ளது. சம்பவம் தொடர்பாக சாட்சியங்கள் கோர்வையாக இல்லை. எனவே, இருவருக்கும் கீழ்கோர்ட் வழங்கிய தண்டனை ரத்து செய்யப்படுகிறது’ என்று உத்தரவிட்டனர்.

கருத்துகள் இல்லை: