திங்கள், 15 அக்டோபர், 2012

கிரைண்டர், மிக்சி, வழங்குவது தற்காலிகமாக நிறுத்தம் அடக்கி வாசிக்க மந்திரிகளுக்கு உத்தரவு

காது கேட்காதவனுக்கு mp3 ப்ளேயர் , கண் தெரியாதவனுக்கு கேமிரா , அதே போல மின்சாரம் இல்லாத வீட்டுக்கு மின்சாதனங்கள் .... கொஞ்சம் ஓவராக தெரியவில்லை
விலையில்லா கிரைண்டர், மிக்சி, மற்றும் பேன் வழங்குவதை, தற்காலிகமாக நிறுத்தி வைக்குமாறு, அ.தி.மு.க., மந்திரிகள், எம்.எல்.ஏ.,களுக்கு, வாய்மொழி உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. தொடர் மின்தடையால், மக்கள் கொதிப்படைந்துள்ள நிலையில், அரசுக்கு எதிராக தேவையில்லாத பிரச்னைகள் உருவாகும் என்ற காரணத்தால், இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதாக, கூறப்படுகிறது. இலவசமா பனை ஓலை விசிறி, ஆட்டாங்கல், அம்மிக்கல் கொடுத்தா மக்கள் அந்த கட்சிக்குதான் ஒட்டு போடுவாங்க , மக்கள் கொஞ்சம்கொஞ்சமா மின்சாரம் இல்லாமலையே வாழ கத்துகிட்டா இந்த மின்சார பிரச்சனையை ஒழிச்சரலாம்


அ.தி.மு.க., அரசு, ஆட்சி பொறுப்பேற்றவுடன், விலையில்லா கிரைண்டர், மிக்சி, பேன் வழங்கும் திட்டத்தை அறிவித்தது. இதற்காக, பிரபல தொழில் நிறுவனங்கள் மூலம் டெண்டர் கோரப்பட்டு, உற்பத்தி துவங்கப்பட்டது. 2012 - 13ம் ஆண்டில், மாநிலம் முழுவதும், 25 லட்சம் பயனாளிகளுக்கு, விலையில்லா பொருட்கள் வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டது.

பெரிய மாவட்டங்களில், 1.25 லட்சம் பயனாளிகள் வரையிலும், சிறிய மாவட்டங்களில், 75 ஆயிரம் பயனாளிகள் வரையிலும் வழங்கப்பட்டுள்ளது. 2013 - 14ம் ஆண்டுக்கு, 35 லட்சம் கிரைண்டர், மிக்சி, பேன் உற்பத்தி செய்து வழங்க திட்டமிடப்பட்டது. இதனிடையே, மூன்று மாதமாக, தமிழகம் முழுவதும் கடுமையான மின்தடை அமலில் உள்ளது.

கிரைண்டர், மிக்சி உற்பத்திக்கு பெயர் பெற்ற, கோவை மாவட்டத்தில், தொழில் முடங்கிப் போயுள்ளது. சென்னையைத் தவிர பிற மாவட்டங்களில், 14 மணி நேரம் முதல், 18 மணி நேரம் வரை, மின்தடை அமலில் உள்ளது. மின்தடையால், தொழில்கள் நசிவடைந்து, தொழிலாளர்கள் வேலைவாய்ப்பை இழந்து தவிக்கின்றனர்.இந்நிலையில், விலையில்லா கிரைண்டர், மிக்சி மற்றும் பேனை வழங்கினால், அ.தி.மு.க., அரசு மீது மக்களுக்கு வெறுப்பு ஏற்படும்.

அதனால், மாவட்டங்களில், அமைச்சர்கள், எம்.எல்.ஏ.,க்கள், மின்தடை பிரச்னை தீரும் வரை, விலையில்லா பொருட்கள் வழங்குவதை தற்காலிகமாக நிறுத்தி வைக்குமாறும், விலையில்லா லேப்-டாப், சைக்கிள், ஆடு, மாடு, வீட்டு மனைப்பட்டா, தாலிக்கு தங்கம் வழங்கும் திட்டத்தை மட்டும் செயல்படுத்தி வாருங்கள், என, அ.தி.மு.க., தலைமை அறிவுறுத்தி உள்ளது. பெரும்பாலான மாவட்டங்களில், விலையில்லா பொருட்கள், குடோன்களில் தேங்கி கிடக்கின்றன. மின்தடை பிரச்னை ஓரளவுக்கு தீர்ந்தவுடன், அனைத்து பகுதிகளிலும் ஒரே நேரத்தில் இப்பொருட்களை வழங்க அரசு திட்டமிட்டுள்ளது.

-நமது நிருபர்-

கருத்துகள் இல்லை: