சனி, 20 அக்டோபர், 2012

மதுரை மடத்தில் அருணகிரி நாதருக்கு நித்தி சிஷ்யர் கொடுத்த ‘கை-பிடி பிரசாதம்’

Viruvirupu
மதுரை ஆதீனத்தில் இருந்தி நித்தி சுவாமிக்கு கல்தா கொடுக்கப்பட்டதுடன், மதுரை மடத்தில் டோரா போட்டிருந்த நித்தி சீடர்களும், ஒவ்வொருவராக இடத்தை காலி செய்கின்றனர். தற்போது வெறும் இரண்டே இரண்டு நித்தி சீடர்கள் மட்டுமே மதுரை மடத்தில் தங்கியிருப்பதாக தெரிகிறது. (சிஷ்யைகள் யாருமில்லை)
நித்தி சுவாமிகள், மதுரை மடத்தில் இருந்து திருவண்ணாமலை சென்றபோது, தனது உதவியாளர் ஞானசொரூபானந்தாவை மதுரையில் விட்டுவிட்டுதான் சென்றார். இந்த ஞா.சொ.தான், நித்திக்காக அருணகிரிநாதரை வாட்ச் பண்ணிக்கொண்டு இருந்த சாமி.
அருணகிரிநாதர் நித்தியை டிஸ்மிஸ் செய்த அறிவிப்பை நேற்றிரவு வெளியிட்டபோது, ஞானசொரூபானந்தா கிறுகிறுத்துப் போனார்.
காரணம், அருணகிரிநாதரை இரவு பகலாக வாட்ச் பண்ணிக்கொண்டு இருந்த இவருக்கே தெரியாமல் அப்படியொரு டிஸ்மிஸ் ஆர்டர் தயாராகியிருக்கிறது. உடனே அருணகிரிநாதரை நேருக்குநேர் பிடித்துக்கொண்ட ஞானசொரூபானந்தா, “நாட்டாமை.. தீர்ப்பை மாத்து” என்று ‘செல்ல மிரட்டல்’ விடுத்தார்.
அதற்கு பெரிய சாமி மசியவில்லை.

அதன்பின்னரே, திருவண்ணாமலைக்கு போன் போட்டு, நித்தியிடம் விஷயத்தை சொன்னார் ஞானசொரூபானந்தா.
பதறிப்போன நித்தி, உடனடியாக அருணகிரிநாதரை அவரது செல்போனில் அழைத்திருக்கிறார். பதில் இல்லை. ஞானசொரூபானந்தாவின் செல்போனில் அருணகிரிநாதருடன் பேச முயன்றதும் பலிக்கவில்லை.
“சுவாமி லைனில் இருக்கிறார்” என்று அருணகிரிநாதரின் கைகளில் செல்போனை ஞானசொரூபானந்தா திணிக்க, அருணகிரிநாதரோ, தீண்டத் தகாத வஸ்துவைப்போல செல்போனை தூக்கிப்போட, அதை மீண்டும் எடுத்து கொடுக்க, இவர் விருட்டென்று எழ…
….மற்றொரு அசம்பாவிதம் நடந்துவிட்டது.

நம்ம சிஷ்யர் ஞானசொரூபானந்தா, சாந்தசொரூபானந்தா அல்ல. அவருக்கு லேசாக கோபம் வருவது வழக்கம்.
அப்படியொரு மைக்ரோ மெஷமென்ட் கோபம் வந்ததில், அருணகிரிநாதரின் கையை அழுத்திப்பிடித்து, செல்போனை அதில் திணித்திருக்கிறார் ஞானசொரூபானந்தா.
அந்தப் பிடி, கை கண்டிப்போகும் அளவுக்கு கொஞ்சம் அழுத்தமான பிடி என்கிறார்கள்.
அப்படியிருந்தும், நித்தியுடன் பேச மறுத்துவிட்ட அருணகிரிநாதர், ஞானசொரூபானந்தா உட்பட, நித்தியின் ஆட்கள் அனைவருக்கும் ‘கெட்-அவுட்’ சொல்லிவிட்டார்.
ஞானசொரூபானந்தா கொடுத்த ‘கை-பிடி பிரசாதம்’ ஏற்படுத்திய வலி காரணமாகதான், நித்யானந்தா சீடர்களால் தனது உயிருக்கு ஆபத்து வரலாம் என்று போலீஸில் அருணகிரிநாதர் புகார் கொடுத்தார்.
அருணகிரிநாதர் கரம் வலியேற்பட பிரசாதம் கொடுத்த ஞானசொரூபானந்தா, நேற்றிரவே மடத்தில் இருந்து புறப்பட்டு, திருவண்ணாமலை சென்றுவிட்டார். அவருடன்,  பெரும்பாலான நித்தி சிஷ்யர்கள் சென்று விட்டனர். தற்போது இரண்டே இரண்டுபேர்தான் மீதமுள்ளனர்.
அவர்கள் மடத்தில் இருந்து கிளம்புமுன் அருணகிரியாருக்கு திருச்சாத்து சாத்தலாம் என்ற அச்சத்தில், மடத்துக்கு காவலாக மதுரை போலீஸ் நிற்கிறது.
இதுதான், ‘நித்தி சிஷ்யர்களால் உயிராபத்து’ கம்பிளெயின்டின் பின்னணி!

கருத்துகள் இல்லை: